Advertisment

'ஒயிட் வாஷிங்': கமலா ஹாரிஸ் போட்டோஷூட் சர்ச்சை ஆனது ஏன்?

kamala harris Vogue Photoshoot whitewashing Controversy: வைட்வாஷிங் செய்யப்பட்டாரா துணை அதிபர் கமலா ஹாரிஸ்? சர்ச்சையாகும் புகைப்படம்

author-image
WebDesk
New Update
'ஒயிட் வாஷிங்': கமலா ஹாரிஸ் போட்டோஷூட் சர்ச்சை ஆனது ஏன்?

தங்களது பிப்ரவரி மாத இதழின் அட்டைப்படத்தில் அமெரிக்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் தோன்றுவார் என்று வோக் நிறுவனம் தெரிவித்தது. மேலும், இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட இரண்டு புகைப்படங்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

Advertisment

ஒன்றில், பின் ஹாரிஸ் ஸ்னீக்கர்களையும், கருப்பு டொனால்ட் டீல் ஜாக்கெட் அணிந்தவாறு, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற திரைக்கு முன் காட்சியளிக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் நீல மைக்கேல் கோர்ஸ் சூட்டில் காட்சியளிக்கிறார்.

வரும், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் முதலாவது ஆசிய-அமெரிக்க, முதலாவது ஆபிரிக்க அமெரிக்க, மற்றும் முதலாவது பெண் துணைக் குடியரசுத் தலைவராக பதவியேற்கும் நிலையில், கமலா ஹாரிஸ் வோக் நாளிதழில் "வெள்ளையாக நிறம் மாற்றப்பட்டிருக்கிறார் ( ஒயிட் வாஷிங்)" என்று குற்றம் சாட்டை எழுப்பி வருகின்றனர்.

பிரச்சனை என்ன?

துணை அதிபர் கமலா ஹாரிஸ் குழு இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் ,  அட்டைப்படத்திற்கு நீல நிற உடையில் எடுக்கப்பட்ட    ஹாரிஸின் உருவத்தை இரு தரப்பினரும் சேர்ந்து தான்  தேர்வு செய்ததாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வோக் நிறுவனம் இளஞ்சிவப்பு-பச்சை நிறத் திரையை சேர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு அட்டைப் படங்களும் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டதென்றும், தனது கல்லூரி வாழ்கையை நினைவுகூரும் வகையில் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு திரையை கமலா ஹாரிஸ் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்ததாகவும் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

வோக் நிறுவனத்தின் பதில் என்ன?

புகைப்படங்கள் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது என்ற நியூயார்க் போஸ்ட் நிறுவனத்தின் குற்றச்சாட்டை வோக் தலைமை ஆசிரியர் டேம் அன்னா வின்டோர் முற்றிலுமாக மறுத்தார்.

முறைசாரா வகையில் தோற்றமளிக்கும் புகைப்படங்கள் தான் உண்மையான, அணுகக்கூடிய இயல்புடன் இருக்கின்றன. பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் தனிச்சிறப்புகளில்  இதுவும் ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தை அடுத்து, முந்தைய ஆண்டுகளில் சிறுபான்மையினரை உணர்ச்சியற்ற முறையில் காட்சிப்படுத்தியதற்கு  வின்டோர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார், " கறுப்பின  மக்கள் மீதான வெறுப்புணர்வு, வன்முறை, அநீதி ஆகியவற்றை அங்கீகரித்து மன்னிப்புக் கோருவது இன்றைய முக்கியத் தேவையாகும்" என்று கூறினார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment