மகாராஷ்ட்ராவில் அதிரடி திருப்பமாக, கடந்த சனிக்கிழமை முதல்வராக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னவிஸூம், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், பதவியேற்றுக்கொண்டனர்.
தேசிய வாத காங்கிரஸ் தலைவரான ஷரத் பவார், தனது மருமகனின் நடவடிக்கை கண்மூடித்தனமான செயல் என்றும் , கட்சி தாவல் தடை சட்டத்தின் விதிகள் அவர் மீது பாயும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்
1967ல் நடைபெற்ற தேர்தல்கள் :
1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, கட்சித் தடை தாவல் சட்டத்திற்கான விதைகள் விதைக்கப்பட்டன.
அந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கலவையாகவே இருந்தன. மத்தியில் ஆட்சி அமைத்திருந்தாலும், மக்களவையில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. உதாரணமாக, கடந்த மக்களையில் 361 என்ற எண்ணிக்கை தற்போது வெறும் 283 என்ற எண்ணிகையில் மட்டும் இருந்தது. மாநிலத்தில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அரசியல் விசுவாசத்தை மற்றக் கட்சிகளுக்கு மாற்றியதால், அந்த ஆண்டில் மட்டும் ஏழு மாநிலத்தில் அரசமைக்கும் அதிகாரத்தை இழந்தது.
இந்த நிலையில் தான், மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினரான பி.வெங்கடசுப்பையா, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுதல் தடுப்பது குறித்த பரிந்துரைகள் செய்வதற்கான உயர் மட்டக் குழுவை அமைக்க முன்மொழிந்தார்.
பி.வெங்கடசுப்பையாவின் பேச்சு மக்களவையில் உற்சாகமான விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "காங்கிரஸைக் காப்பாற்றவேண்டும் "என்று உங்கள் திட்டத்தை மறுபெயரிடலாமா? என்று கேள்வியை முன்வைத்தனர். அதே நேரத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் சூழலை எதிர்கட்சிகளை உருவாக்குகின்றனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
ஒய்.பி சவான் குழு
கடுமையான வாக்கவாதம் நடைபெற்றாலும் , கட்சி தாவல் பிரச்சினையைக் குறித்து ஆராய ஒரு குழுவை அமைக்க மக்களவை ஒப்புக் கொண்டது. அப்போதைய உள்துறை அமைச்சர் ஒய் பி சவான் இந்த குழுவுக்கு தலைமை தாங்கினார்.
ஒய் பி சவான் குழு கட்சி தாவல் என்றால் என்ன? எது கட்சி தாவல் ? ஏன் சில உறுப்பினர்களின் நடவடிக்கை கட்சி தாவல் இல்லை? என்பதையெல்லாம் வரையறுத்தது. குழுவின் கூற்றுப்படி, ஒரு கட்சியின் சின்னத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாக முன்வந்து அந்தக் கட்சிக்கு ஆதரவு(விசுவாசம் ) கொடுப்பதில் பின்வாங்கினார் என்றால் அது கட்சித்தாவல். ஆனால், அவரின் அத்தைகைய நடவடிக்கை கட்சியின் முடிவின் விளைவாக இருந்தால் அது கட்சி தாவல் கிடையாது.
குழு தனது அறிக்கையில், "சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவது தொடர்பான முடிவெடுப்பதில் பதவி ஆசை ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டது. உதாரணமாக, ஏழு மாநிலத்தில் கட்சி தாவிய 210 சட்டமன்ற உறுப்பினர்களில்,116 பேருக்கு அரசாங்கங்களில் மந்திரி பதவிகள் வழங்கப்பட்டன என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதை தடுப்பதற்காக, கட்சி தாவும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வருடம் ( அல்லது) மீண்டும் தேர்ந்தெடுக்கும் காலம் வரை அமைச்சரவை பதவிகளில் அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரை செய்தது.
மத்திய, மாநில மட்டங்களில் மந்திரி சபையின் எண்ணிக்கையை குறைக்கவும் பரிந்துரை செய்தது. இதனால், ஏற்படும் இடையூறுகளை திறம்பட சமாளிக்க, அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தை விதிகளை உருவாக்கவும் ஒய் பி சவான் குழு ஆதரவு கொடுத்திருந்தது.
கட்சி தாவல் தடை சட்டம் உருவாக்குவதற்கான ஆரம்ப கால முயற்சிகள்:
ஒய் பி சவான் கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து, கட்சி தாவலை தடுப்பது தொடர்பான சட்டம் இயற்றுவதற்கான முயற்சிகள் இரண்டு முறை தோல்வியில் முடிந்தன.
முதல் முயற்சி, 1973- ல் இந்திரா காந்தியின் உள்துறை அமைச்சர் உமா சங்கரால் எடுக்கப்பட்டது.இரண்டாவது முயற்சி, 1978 ல் மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி அரசாங்கத்தின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சாந்தி பூஷனால் மேற்கொள்ளப்பட்டது
இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் நடந்த மக்களவைத் தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் வென்றது. இதன் தாக்கமாக, 1985 ஆம் ஆண்டில் கட்சி தாவல் தடை சட்டம் இயற்றும் மூன்றாவது முயற்சி வெற்றிகரமாக நடந்தது.
இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை:
பத்தாவது அட்டவனையை சேர்பதன் மூலம், அரசியலமைப்பை திருத்துவதற்கான மசோதாவை ராஜீவ் காந்தியின் சட்ட மந்திரி அசோக் குமார் சென் அறிமுகப்படுத்தினார்.
மசோதாவின் பொருள்கள் மற்றும் காரணங்கள் : "அரசியலில் கட்சி தாவல் நடவடிக்கையால் வரும் தீமை தேசிய அக்கறைக்குரியது. இது போரிடப்படாவிட்டால், அது நமது ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களையும், தக்கவைக்கும் கொள்கைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். ” என்று சொல்லப்பட்டிருந்தது.
அரசியலமைப்பில் புதிதாய் சேர்க்கப்பட்ட பத்தாவது அட்டவணை மூன்று பரந்த விசயங்களை உள்ளடக்குகின்றது .
* ஒன்று, சட்டமன்றதுக்குளும் (கட்சி விப்பிற்கு எதிராக வாக்களித்தல்), வெளியிலும் (கட்சிக்கு எதிராக பேசுதல்) உறுப்பினர்களின் நடவடிக்கை கட்சிக்கு எதிராக சென்றால் பாராளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்திலும் தங்களின் இடங்களின் காலியாகும்.
* இரண்டு, ஒரு கட்சியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிரிந்து வந்தாலோ, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தங்கள் கட்சியை மற்றொரு கட்சியோடு இணைத்தாலோ ( அல்லது புது கட்சி தொடங்கினாலோ ) கட்சி தவால் தண்டனையில் இருந்து காப்பாற்றியது.
* மூன்று, சம்பந்தப்பட்ட சட்டமன்றத்தின் தலைமை அதிகாரியை ( சபாநாயகர்) இது குறித்த இறுதி முடிவை எடுக்கும் நடுவராக மாற்றியது .
கட்சி தாவல் தடை சட்டத்தை பற்றிய சில விமர்சனங்கள்:
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, இந்த மசோதா உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் பாதிக்கும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்டனர்.
சமூகவுடைமைத் தலைவர் மது தண்டாவதே போன்ற உறுப்பினர்கள் இந்த அரசியலமைப்பு திருத்த மசோதா சபாநாயகர் அலுவலகத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து கவலை தெரிவித்தனர்.எவ்வாறாயினும், இரண்டு நாட்களில் பாராளுமன்றத்தில் மசோதாவை வெற்றி பெற்றது.
தற்போது இருக்கும் உடனடி சவால்கள் :
ஒரு அரசியல் கட்சியில் ஸ்ப்லிட் என்றால் என்ன ? என்ற கேள்வி வி பி சிங், சந்திர சேகர் அரசாங்கங்களை உலுக்கியது.
சபாநாயகர் பங்கும் பெருகிய முறையில் அரசியலாக்கப்பட்டது.
மக்களவை சபாநாயகர் சிவ்ராஜ் பாட்டீல் 1992 இல்கூறும்போது: "அரசியல் கட்சிகளை பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ வைத்திருப்பதில் சபாநாயகர் தலையிடுவார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களின் கட்சி நோக்கங்களுக்காக ஒழுங்குபடுத்துவார் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
சட்டமன்றத்திற்கு வெளியே உறுப்பினர்களின் என்ன வகையான நடத்தை கட்சி தாவல் தடை சட்டத்திற்குள் வரும், இதை கணிப்பதில் சபாநாயகரின் பங்கு என்ன? போன்ற கேள்விகளை தீர்மானிக்க உச்ச நீதிமன்றத்தின் தலையீடு கோரப்பட்டது.
உச்சநீதிமன்றம், சபாநாயகரின் முக்கியத்துவத்தை உணர்த்திய அதே நேரத்தில், சபாநாயகரின் முடிவுகள் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டவை என்றும் கருதினார்.
2003 திருத்தம்
கட்சி தாவல் தடை சட்ட பயணத்தின் கடைசி கட்டம் 2003 இல் வந்தது.
பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசாங்கத்தால் அரசியலமைப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரணாப் முகர்ஜி தலைமையிலான பாராளுமன்றக் குழு இந்த மசோதாவை ஆய்வு செய்தது.
குழுவின் பரிந்துரையால் : " ஒரு கட்சியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிரிந்து (ஸ்ப்லிட்) வந்தால் கட்சித் தாவலுக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்ற சட்ட மசோதா திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
2003 ஆம் ஆண்டு திருத்தத்தில் , அமைச்சரவையின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒய்.பி சவான் குழு பரிந்துரையும் உள்ளடக்கியது.
எவ்வாறாயினும், பல ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளை நாம் பார்க்கும் பொழுது, இந்த சட்ட திருத்தம் இந்திய அரசியலில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தைக் கூட கொண்டு வரவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
சட்டத்தின் பயன்பாடு அல்லது எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார்கள்:
1/3 கட்சி பிளவை ரத்து செய்ததினால், அரசியல் கட்சிகள் பிற கட்சிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக ( 2/3 மற்றக் கட்சியோடு இணைத்தல் ) கட்சி தாவும் வகையில் தூண்டினர். வரவிருக்கும் மந்திரி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படாமல் இருக்க, சபை உறுப்பினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்யத் தொடங்கினர்.
அமைச்சரவையில் உச்சவரம்பு கொண்டுவந்தபோதும், மாநில சட்டமன்றங்களில் நாடாளுமன்ற செயலாளர்களின் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியது.
சபாநாயகர் அரசியல் விஷயங்களில் தீவிர அக்கறை செலுத்தத் தொடங்கினர், அரசாங்கங்களை உருவாக்க மற்றும் உடைக்க உதவினார்கள்.
இந்த ஆண்டு கோடையில் கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும், அரசியலில் கட்சி தாவல்களைத் தடுக்க முடியவில்லை என்பதைக் காட்டுகிறது.
மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது என்பது இப்போது பார்க்கப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.