Advertisment

பிற்பகலில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்: ஆய்வு முடிவு

ஃபைசர் எம்ஆர்என்ஏ தடுப்பூசியைப் பெற்றவர்களிடமும், பெண்களிடமும், இளையவர்களிடமும், ஆண்ட்டிபாடி ரெஸ்பான்ஸ் அதிகமாக இருந்ததை இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

author-image
WebDesk
Dec 08, 2021 11:41 IST
Vaccines taken in afternoon elicit more antibodies than those taken in morning

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட மருத்துவப் பணியாளர்களில் காலையில் பெற்றுக் கொண்டவர்களைக் காட்டிலும், பிற்பகல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடலில் அதிகப்படியான ஆண்ட்டிபாடிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்று ஒரு அப்செர்வேசன் ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக பையோலாஜிக்கல் ரிதம்ஸ் என்ற இதழில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தடுப்பூசிக்கான பதில் உடலின் சர்க்காடியன் தாளங்களால் பாதிக்கப்படலாம் என்ற கருத்துக்கு ஆதாரமாக ஆசிரியர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை விவரித்துள்ளனர். நம் உடலின் உள் சர்க்காடியன் கடிகாரம், தொற்று நோய்க்கான பதில் மற்றும் தடுப்பூசி உட்பட உடலியலின் பல அம்சங்களை ஒழுங்குபடுத்துகிறது.

சில நோய்களின் அறிகுறிகள் மற்றும் பல மருந்துகளின் செயல்பாடுகள் நாளின் நேரத்தைப் பொறுத்து மாறுபடும். ஆராய்ச்சி குறித்த ஊடக வெளியீட்டில், மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உதாரணத்தை மேற்கோள் காட்டியது. அவர்களின் சுவாச செயல்பாட்டில் மாற்றம் மற்றும் தீவிர அறிகுறிகள் ஒரு நாளில் வெவ்வேறு நேரங்களில் தோன்றும் என்பதை குறிப்பிட்டனர்.

இந்த கண்காணிப்பு ஆய்வை இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 2190 மருத்துவ பணியாளர்கள் மத்தியில் நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட போது நோய் அறிகுறியற்ற மருத்துவ பணியாளார்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வயது, பாலினம், தடுப்பூசியின் வகை, எந்த நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்பது போன்ற தரவுகளை வைத்து உடலில் ஆண்ட்டி பாடிகளின் தாக்கத்தை ஆய்வு செய்ய ஒரு மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

பிற்பகலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடலில் ஆண்ட்டிபாடி அதிகமாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஃபைசர் எம்ஆர்என்ஏ தடுப்பூசியைப் பெற்றவர்களிடமும், பெண்களிடமும், இளையவர்களிடமும், ஆண்ட்டிபாடி ரெஸ்பான்ஸ் அதிகமாக இருந்ததை இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Source: Massachusetts General Hospital

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment