காதலர் தினம் என்பது காதல் மற்றும் பல்வேறு கோணங்களில் இருந்து விமர்சனங்களை கொண்டாடுவதற்கான ஒரு அடையாளமாக மாறியுள்ளது.
இது, ஒரு குறிப்பிட்ட புனிதர் வாலண்டைன்ஸ் என்பவருடன் தொடர்புடையதாக அறியப்பட்டாலும், அதன் தோற்றம் ஒரு இருண்ட பக்கத்தையும் கொண்டுள்ளது.
புனிதர் வாலண்டைன்ஸ் யார்?
புனிதர் வாலண்டைன் மூன்றாம் நூற்றாண்டு கால ரோமன் கத்தோலிக்க பாதிரியார் என்று நம்பப்படுகிறார். இவர், கிபி 270 இல் பிப்ரவரி 14 அன்று இறந்தவர்.
அவர் பேரரசர்களின் கட்டளைகளை மீறி ரகசியமாக திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. அந்தக் காலத்தில், சிப்பாய்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால் ஒற்றை ஆண்கள் அதிக அர்ப்பணிப்புள்ள போராளிகள் என்று பேரரசர் நினைத்தார்.
இந்த எதிர்ப்பிற்காக, அவர் பேரரசர் கிளாடியஸ் II கோதிகஸால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
அதே நேரத்தில் பண்டைய ரோமானிய திருவிழாவான லுபர்காலியாவின் மீது சர்ச் தனது செல்வாக்கை பரப்புவதற்கான முயற்சி என்று கூறப்படுகிறது.
ரோமானியக் கொண்டாட்டம் விவசாயத்தின் கடவுளான ஃபானஸ் மற்றும் ரோமானிய நிறுவனர்களான ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் ஆகியோரை கௌரவித்தது.
ஆண்கள் ஒரு பெட்டியிலிருந்து பெண்களின் பெயர்களைத் தேர்ந்தெடுப்பார்கள், மேலும் அவர்கள் நிகழ்வின் மூலம் ஜோடிகளாக மாறுவார்கள்.
இருப்பினும், போப் கெலாசியஸ் 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செயிண்ட் வாலண்டைனை நினைவுகூரும் நாளாக லூபர்காலியா கொண்டாட்டங்களின் காலத்தை தேர்ந்தெடுத்தார், இதன் விளைவாக காதலர் தினமும் இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்தது.
காதலர் தினம் எப்படி உலகளாவிய கொண்டாட்டமாக மாறியது?
கி.பி 270 இல் இறந்த வாலண்டைன்ஸ், ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் பட்டம் பெற்றார், ஏனெனில் அவர் கிறிஸ்தவ ஜோடிகளுக்கு ரகசிய திருமணம் செய்துகொள்ள உதவிய பாதிரியாராகவும் பணியாற்றியிருக்கலாம்.
மேலும், ஜெஃப்ரி சாசர் மற்றும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் மூலம், இந்த கருத்து ஐரோப்பாவிலும் ஆங்கிலம் பேசும் உலகிலும் பிரபலப்படுத்தப்பட்டது.
பிரிட்டிஷ் லைப்ரரியின் கூற்றுப்படி, “காதலர்களுக்கான நாள் காதலர் தினம் என்ற எண்ணம் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட சாஸரின் பார்லிமென்ட் ஆஃப் ஃபௌல்ஸில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.
வசந்த காலத்தின் துவக்கத்தில் ‘செய்ன்ட் வாலண்டைன்ஸ் தினத்தில்’ – ஆண்டுக்கு தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் பறவைகளின் குழுவை இது விவரிக்கிறது.
‘A Midsummer Night’s Dream’ இல், ஷேக்ஸ்பியர் காதலர் தினத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்.
மேலும் அந்தக் காலத்தில் கையால் செய்யப்பட்ட காகித அட்டைகள் அன்றைய அடையாளங்களாக திகழ்ந்தன. இதற்கிடையில், “”தொழில்துறை புரட்சி 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அட்டைகளை அறிமுகப்படுத்தியது”.
மேலும், 1913 ஆம் ஆண்டில், கன்சாஸ் சிட்டியின் ஹால்மார்க் கார்டுகள் பெருமளவில் காதலர்களை ஈர்க்கத் தொடங்கின.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/