Advertisment

வரவர ராவ் யார்? அவருடைய இலக்கியம், அரசியல் பற்றி ஒரு விளக்கம்

மூத்த கவிஞர், செயற்பாட்டாளர் வரவர ராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர், நவி மும்பை டஜோலா மத்திய சிறையில் இருந்து மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வியாழக்கிழமை மாற்றப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Varavara Rao, Varavara Rao coronavirus, Varavara Rao Covid, வரவர ராவ், கவிஞர் வரவர ராவ், எல்கர் பரிஷத் வழக்கு, பீமா கோரேகான், வரவர ராவுக்கு கொரோனா தொற்று, varavara rao tested covi-19 positive, who is Varavara Rao, Varavara Rao jail, Varavara Rao case, Varavara Rao elgar parishad case, varavara rao jailed in elgar parishat case, tamil indian express

மூத்த கவிஞர், செயற்பாட்டாளர் வரவர ராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர், நவி மும்பை டஜோலா மத்திய சிறையில் இருந்து மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வியாழக்கிழமை மாற்றப்பட்டுள்ளார். கவிஞர் வரவர ராவ் ஒரு அரசியல் கைதி. இவர் எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக 2018 முதல் சிறையில் உள்ளார்.

Advertisment

வரவர ராவ் யார்?

1940 ஆம் ஆண்டு வாரங்கலில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு நடுத்தர வர்க்க தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்த வரவர ராவின் இலக்கியப் பயணம் அவருடைய சிறு வயதில் இருந்து தொடங்கியது. அவர் 17 வயதிலிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

வரவர ராவ் ஐதராபாத்தின் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு, மாநிலத்தின் மஹபூப்நகரில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரிக்குச் செல்வதற்கு முன், தெலங்கானாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். இடையில், தலைநகரில் உள்ள தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சில் வெளியீட்டு உதவியாளராக சிறிது காலம் பணியாற்றினார். வரவர ராவ் மார்க்சிய தத்துவத்தின் தாக்கத்தால் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றார். அவரது கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் அவரது மக்கள் சார்பு உணர்வுகளையும், புதிய தாராளவாதத்திற்கு எதிரான எதிர்ப்பையும் கொண்டிருந்தன.

வரவர ராவின் அரசியல்

1967ம் ஆண்டில், வங்கத்தில் ஏற்பட்ட நக்சல்பாரி எழுச்சி வரவர ராவ் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அறுபதுகளின் பிற்பகுதியும் எழுபதுகளின் முற்பகுதியும் ஆந்திராவில் கொந்தளிப்பான நேரமாக இருந்தது. 1969ம் ஆண்டில் தெலங்கானா மாநிலப் போராட்டத்தைத் தொடர்ந்து, சமமான நில உரிமைகளுக்கான ஸ்ரீகாகுளம் ஆயுதம் தாங்கிய விவசாயிகள் போராட்டம் (1967-70) தொடர்ந்தது. இது தெலுங்கு இலக்கிய சமூகத்தில் ஆழமான பிளவு ஏற்பட்ட காலமாகும். பழைய தலைமுறை கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் இலக்கிய தளமான அப்யுதயா ராச்சியிதள சங்கம் இந்த அரசியல் எழுச்சிகளுடன் ஈடுபடாததைக் கண்டு ராவ் போன்ற இளம் கவிஞர்கள் விமர்சித்தனர். 1969ம் ஆண்டில், வாரங்கல்லில் திருகுபாட்டு கவ்லு (கலகக் கவிஞர்களின் சங்கம்) உருவாவதற்கு ராவ் முக்கிய பங்கு வகித்தார். பின்னர், 1970ம் ஆண்டில், விரசம் என்று பிரபலமாக அறியப்பட்ட விப்லவா ராச்சியிதள சங்கம் (புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம்) பிறந்ததற்குப் பின், மிகவும் மாறுபட்ட மற்றும் அரசியல் ரீதியாக வெளிப்படையான எழுத்தாளர்கள் குழுவின் படைப்புகளை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டது. பின்னர், அந்த அணிகளில், சி குடும்ப ராவ் மற்றும் ரவி சாஸ்திரி போன்ற கவிஞர்களைக் இருந்தனர். விரஸத்தின் முதல் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ என்று பிரபலமாக அறியப்பட்ட புகழ்பெற்ற தெலுங்கு கவிஞர் ஸ்ரீரங்கம் சீனிவாச ராவ் ஆவார். இந்த இரண்டு அமைப்புகளும் வெளிப்படையாக நிறுவன எதிர்ப்பு கொண்டவை. மேலும், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் ராவின் உறவில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. விரசத்தின் முகமாக, வரவர ராவ் ஆந்திரா முழுவதும் பயணம் செய்தார். விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் அவர்களின் உரிமைகள் பற்றி பேசினார். இந்த காலகட்டம் முழுவதும், வரவர ராவ் தொடர்ந்து எழுதுகிறார். ஒரு புரட்சிகர கவிஞராகவும் ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய விமர்சகராகவும் உருவெடுத்தார். பல தசாப்தங்களாக, விரசம் அது வெளியிட்ட இரண்டு கவிதை தொகுப்புகள் (வரவர ராவின் பாவிஷ்யது சித்ரபதம் உட்பட) சில காலத்திற்கு தடை செய்யப்பட்டது. மேலும், மாவோயிச காரணங்களுக்காக அனுதாபம் கொண்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது.

வரவர ராவ் தனது எழுத்துள் மூலம் வன்முறையைத் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 1973ம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச அரசால் அப்போதைய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீண்டும் மிசா சட்டத்தின் கீழ் 1975இல் அவசர காலத்தின் உச்சத்தில் கைது செய்யப்பட்டார். 1977 தேர்தலில் இந்திரா காந்தி அரசு ஜனதா கட்சியால் கவிழ்க்கப்பட்டபோது அவர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், அவர் தொடர்ந்து அரசியல் கண்காணிப்பின் கீழ் இருந்தார். பின்னர், அவர் பல வழக்குகளில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும், 1985ம் ஆண்டு செகந்திராபாத் சதி வழக்கு (கிட்டத்தட்ட 50 பேர் ஆந்திர மாநிலத்தை கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டனர்) உட்பட பல வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அடுத்த ஆண்டே, ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், ராம்நகர் சதி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதில், ஆந்திரப் பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் சம்பயா மற்றும் இன்ஸ்பெக்டர் யாதகிரி ரெட்டி ஆகியோரைக் கொல்ல முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2003-ல் வரவர ராவ் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

2005ம் ஆண்டில், மாநில அரசாங்கத்திற்கும் மாவோயிச அமைப்பிற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் யுத்தக் குழுவின் தூதுவராக வரவர ராவ் செயல்பட்டார். பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, ராவ் மீண்டும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விரசம் சில மாதங்களுக்கு தடை செய்யப்பட்டது.

வரவர ராவின் இலக்கியப் படைப்புகள்

வரவர ராவ் எழுதிய 15-க்கு மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவர் விரிவுரையாளராக பணியாற்றிய தனது நான்கு தசாப்த கால வாழ்க்கையின் ஆரம்பத்தில், ராவ் 1966ம் ஆண்டில் ஸ்ருஜனா என்ற தெலுங்கு இலக்கியப் பத்திரிகையை நிறுவினார். ஆரம்பத்தில் காலாண்டு இதழகாக வந்த ஸ்ருஜானாவுக்கு கிடைத்த புகழ் வரவர ராவை அந்த பத்திரிகையை மாத இதழாக மாற்ற ஊக்குவித்தது. இந்த இதழ் 1966 முதல் 90 களின் முற்பகுதி வரை சமகால பிராந்திய கவிஞர்களின் படைப்புகளை வெளியிட்டது. 1983ம் ஆண்டில், தெலங்கானா விடுதலை போராட்டம் மற்றும் தெலுங்கு நாவல் - சமூகம் மற்றும் இலக்கியங்களுக்கு இடையிலான தொடர்பு பற்றிய ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. விமர்சன ஆய்வுகளில் இது ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது.

சிறைவாசம் அனுபவித்த காலங்களில், சஹசருலு (1990) என்ற சிறை நாட்குறிப்பையும் வரவர ராவ் எழுதினார், பின்னர், இது ஆங்கிலத்தில் Captive Imagination என்ற பெயரில் நூலாக (2010) வெளியிடப்பட்டது. அவர் தெலுங்கில் Detained (1981) என்ற நூலை மொழி பெயர்த்துள்ளார். அவரைப் போலவே சிறை நாட்குறிப்பு எழுதிய கென்யாவின் தலைவரான நுகுகி வா தியோங்கோ வின் நாவலான டெவில் ஆன் தி கிராஸ் (1980) போன்ற நூல்களை மொழி பெயர்த்துள்ளார்.

எல்கர் பரிஷத் வழக்கு; வரவர ராவின் தற்போதைய சிறைவாசம்

பீமா-கோரேகான் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதற்காக, ஆகஸ்ட் 2018இல், வரவர ராவ் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். புனேவில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-இல் பீமா கோரேகான் போரின் 200 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாலை நிகழ்ச்சி, எல்கர் பரிஷத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க இடதுசாரி ஆர்வலர்கள் மற்றும் மறைமுகமான நக்சலைட் குழுக்கள் பங்கேற்றன. டிசம்பர் 31, 2017ம் தேதி நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட உரைகள், மறுநாள் வன்முறையைத் தூண்டுவதற்கு ஓரளவு காரணம் என்று போலீசார் கூறினார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Mumbai Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment