உணவு வணிக நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் முழுமையாக வெளிப்படுத்துவதை உறுதிசெய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உணவுப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளது. “உணவுப் பொருட்களின் குறியீட்டுப் பெயர்கள் மட்டுமல்லாமல், மேலும் உணவுக் குறிப்பில் அவற்றின் சதவீதத்தைப் பொருட்படுத்தாமல், அவை தாவரங்கள் அல்லது விலங்கு மூலங்களிலிருந்து தோன்றியதா அல்லது, அவை ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகின்றனவா” என்பதையும் முழுமையாக வெளிப்படுத்துதல் வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிமுறைகள், 2011 இன் விதிமுறை 2.2.2(4) உடன் எந்த மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விதிமுறைக்கு உணவு வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக இணங்க வேண்டும். மூலப்பொருட்களின் அளவு அல்லது சதவீதத்தைப் பொருட்படுத்தாமல், அவை விலங்குகளில் இருந்து பெறப்பட்டிருந்தால், அவ்வகையான உணவுப் பொருட்களை அசைவம் என்று குறிப்பிட வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.
“ஒவ்வொரு நபருக்கும் அவர் / அவள் என்ன சாப்பிடுகிறார் என்பதை அறிய உரிமை உண்டு, மேலும் சாப்பிடக்கூடிய ஒருவருக்கு வஞ்சகம் அல்லது உருமறைப்பு மூலம் எதையும் வழங்க முடியாது” என்று நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கூறியது. டிசம்பர் 9ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2011 விதிமுறைகளின் கீழ் லேபிளிங் தேவைகள் என்ன?
“பால் அல்லது பால் பொருட்கள் தவிர்த்து, பறவைகள், நன்னீர் அல்லது கடல் விலங்குகள் அல்லது முட்டைகள் அல்லது விலங்குகளில் இருந்து பெறப்பட்ட முழுவதுமாக அல்லது ஒரு பகுதியை உள்ளடக்கிய உணவுப் பொருட்களை அசைவ உணவு” என விதிமுறைகள் வரையறுக்கின்றன.
அனைத்து அசைவ உணவுகளும் “பழுப்பு நிற நிரம்பிய வட்டம்… [குறிப்பிட்ட விட்டம்] வட்டத்தின் விட்டத்தை விட இரு மடங்கு பக்கங்களைக் கொண்ட பழுப்பு நிற அவுட்லைன் கொண்ட சதுரத்திற்குள்” என்று லேபிளிடப்பட வேண்டும். முட்டை மட்டுமே அந்த உணவுப் பொருளில் உள்ள அசைவப் பொருளாக இருந்தால், “இந்தச் சின்னத்துடன் கூடுதலாக ஒரு அறிவிப்பு [அளிக்கப்படலாம்]”. சைவ உணவு “பச்சை நிறம் நிரப்பப்பட்ட வட்டம்…சதுரத்தின் உள்ளே பச்சை அவுட்லைன்” என்று லேபிளிடப்பட வேண்டும்.
உற்பத்தியாளர்கள் அவற்றின் எடை அல்லது அளவுடன் பொருட்களின் பட்டியலைக் காட்டவும் விதிமுறைகள் உள்ளன. தாவர சமையல் எண்ணெய் வகை, உண்ணக்கூடிய காய்கறி கொழுப்பு, விலங்குகளின் கொழுப்பு அல்லது எண்ணெய், மீன், கோழி இறைச்சி அல்லது சீஸ் போன்றவற்றை உற்பத்தியாளர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
அதேநேரம், “ஒரு மூலப்பொருள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் உற்பத்தியாக இருந்தால்”, மற்றும் அத்தகைய “கலவை மூலப்பொருள் உணவில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், உணவு சேர்க்கையைத் தவிர, கலவை மூலப்பொருளில் கலந்துள்ள பொருட்களின் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டியதில்லை.”, என்று விதிமுறைகள் கூறுகின்றன.
இது தொடர்பாக யார் நீதிமன்றத்திற்கு சென்றார்கள், ஏன்?
பசுக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பாடுபடும் அரசு சாரா அறக்கட்டளையான ராம் கௌவா ரக்ஷா தளம், தற்போதுள்ள விதிகளை அமல்படுத்தக் கோரி அக்டோபரில் மனு தாக்கல் செய்தது. பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள், அணியக்கூடிய பொருட்கள் மற்றும் பாகங்கள் போன்ற நுகர்பொருட்கள் அல்லாத அனைத்து பொருட்களும் பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையில் குறிக்கப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை வைத்தது. உணவுப் பொருட்களுக்கான, பொருட்கள் மட்டுமின்றி, உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களையும் லேபிளில் ஒட்டுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
நாம்தாரி பிரிவை பின்பற்றுபவர்களாக உள்ள அறக்கட்டளை, கடுமையான சைவத்தை பின்பற்றுவதில் சமூகம் உறுதியாக இருப்பதாகவும், அவர்களின் மத நம்பிக்கைகள் விலங்கு பொருட்கள் கொண்ட பொருட்களை எந்த வகையிலும் பயன்படுத்துவதை தடை செய்ய விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
எனவே, லேபிளிங்கில் என்ன பிரச்சனை?
சட்டம் “அனைத்து உணவுப் பொருட்களிலும் சைவமா அல்லது அசைவமா என்பதை மிகத் தெளிவாக உத்தேசித்து வெளிப்படையாக வழங்குகிறது” என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், விதிமுறைகளைத் தவறாகப் படிக்கும்போது, உணவுப் பொருட்களின் உற்பத்தி/உற்பத்திக்கு செல்லும் மூலப்பொருட்களை வெளியிடுவதற்கு சட்டம் அவர்களை குறிப்பாகக் கட்டாயப்படுத்தவில்லை என்பதை சில உணவு வணிக நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இறைச்சி அல்லது மீனில் இருந்து வணிக ரீதியாக தயாரிக்கப்படும் உடனடி நூடுல்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சில்லுகளில் காணப்படும் உணவு சேர்க்கையான டிசோடியம் இனோசினேட் என்ற வேதிப்பொருளை நீதிமன்றம் எடுத்துக்காட்டுகிறது. “கூகிளில் ஒரு சிறிய தேடல்… இது பெரும்பாலும் பன்றி கொழுப்பிலிருந்து பெறப்படுகிறது என்பதைக் காட்டுகிறது,” என்று நீதிமன்றம் கூறியது.
இத்தகைய பொருட்களைப் பயன்படுத்தும் போது, பெரும்பாலும் “பொருட்களின் குறியீடுகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன, உண்மையில் எது ஆதாரம் என்பதை பேக்கேஜிங்கில் வெளியிடாமல், அதாவது தாவர அடிப்படையிலானதா, அல்லது விலங்கு சார்ந்ததா, அல்லது இது ஒரு ஆய்வகத்தில் இரசாயன முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை வெளியிடுவதில்லை,” என்று நீதிமன்றம் கூறியது. “விலங்குகளில் இருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்ட பல உணவுப் பொருட்கள் பச்சைப் புள்ளியை ஒட்டுவதன் மூலம் சைவ உணவுகளாக மாற்றப்படுகின்றன.” என்றும் நீதிமன்றம் கூறியது.
எனவே நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல்களை வழங்கியது?
“குறைந்த சதவிகிதத்தில்” கூட, அசைவப் பொருட்களைப் பயன்படுத்துவது, “அத்தகைய உணவுப் பொருட்களை அசைவமாக்குவதுடன், கடுமையான சைவ உணவு உண்பவர்களின் சமய மற்றும் கலாச்சார உணர்வுகளைப் புண்படுத்தும், மேலும் அவர்களின் மதம் மற்றும் நம்பிக்கையை சுதந்திரமாக வெளிப்படுத்த, நடைமுறைப்படுத்த மற்றும் பரப்புவதற்கான உரிமையில் தலையிடும் என்று நீதிமன்றம் கூறியது.
இத்தகைய குறைபாடுகளை அதிகாரிகள் சரிபார்க்கத் தவறியதால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006 மற்றும் அதன் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் உள்ளது என்று நீதிமன்றம் கூறியது.
உணவு வணிக நிறுவனங்களை “விதிமுறை 2.2.2(4)” ஐ, (“காய்கறி அல்லது அசைவம் பற்றிய வெளிப்படுத்தல்”) முழுமையாகவும் கண்டிப்பாகவும் இணங்குவதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது மற்றும் “உணவு நிறுவனங்கள் விதிகளை பின்பற்ற தவறினால், நுகர்வு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலான நடவடிக்கைக்கு, வழக்குத் தொடுப்பதைத் தவிர தண்டனை வழங்க வழிவகை செய்யவும்,” அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil