கொரோனா ஊரடங்கு: மீறினால் பாயும் 188 ஐபிசி சட்டம் என்ன சொல்கிறது?

பொதுமக்கள் இன்னும் முடக்குதலை மீறி வெளியே வருவதால், 1897-ம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டத்தை மீறுபவர்கள் 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் , 188 பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடும் என்பதை மாநில அரசுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

By: March 23, 2020, 10:40:15 PM

நாடு முழுவதும் மார்ச் 22-ம் தேதி கடைபிடிக்கப்பட்ட மக்கள் சுய ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, டெல்லி மற்றும் பல மாநிலங்களில் கோவிட்-19 இன் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டங்களை மூடுவதை செயல்படுத்த மத்திய அரசின் ஆலோசனையைப் பெற்றன. இருப்பினும், பொதுமக்கள் இன்னும் முடக்குதலை மீறி வெளியே வருவதால், 1897-ம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டத்தை மீறுபவர்கள் 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் , 188 பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடும் என்பதை மாநில அரசுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அதனால், அரசின் உத்தரவுகளை மீறியதற்காக, ஒரு நபர் ஆறு மாதங்கள் வரை சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம், 188 பிரிவு

தொற்று நோய்கள் சட்டம் 1897, பிரிவு 3 கீழ் எந்தவொரு ஒழுங்குமுறை அல்லது உத்தரவையும் கீழ்படியாததற்காக அபராதம் விதிக்கிறது. இவை இந்திய தண்டனைச் சட்டத்தின் 188வது பிரிவின் படி அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாதது தொடர்பானவை ஆகும். அரசு ஊழியர்களின் சட்டபூர்வமான அதிகாரத்தினை அவமதிப்பது 188 பிரிவு அத்தியாயம் 10-ன் கீழ் வருகிறது.

ஒரு அரசு ஊழியரால் அறிவிக்கப்பட்ட ஒரு உத்தரவின் மூலம், அத்தகைய உத்தரவை அறிவிக்க சட்டப்பூர்வமாக அதிகாரம் பெற்ற எவரும் ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட செயலிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

எவரேனும், ஒரு உத்தரவைப் பிரகடனப்படுத்த சட்டப்படி அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால் அத்தகைய உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டது என தெரிந்தே, ஒருவரை ஒரு குறிப்பிட்ட செயலை தவிர்க்கவோ அல்லது அவரது உடைமையில் அல்லது அவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள குறிப்பிட்ட சொத்து குறித்தான குறிப்பிட்ட உத்தரவை நிறைவேற்றுவதாகவோ அவர் கட்டளைப்பட்டிருக்கும் போது, அத்தகைய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தால்; அத்தகைய கீழ்ப்படியாமையானது, சட்டப்படி பணியமர்த்தப்பட்டுள்ள யாரேனும் ஒரு நபருக்கு தடை, தொல்லை அல்லது தீங்கை அல்லது தடை, தொல்லை அல்லது தீங்கை விளைவிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதை ஏற்படுத்துகிறது அல்லது ஏற்படுத்தப்படலாமென்றால் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். மற்றும் அத்தகைய கீழ்ப்படியாமை, மனித உயிருக்கு, ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்பிற்கு அபாயத்தை விளைவித்தால் அல்லது விளைவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் அல்லது ஒரு கலகம் அல்லது சச்சரவை விளைவித்தால் அல்லது விளைவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம் :-குற்றம் புரிந்தவர், தீங்கை விளைவிக்க உள்நோக்கம் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவரது கீழ்ப்படியாமை தீங்கினை ஏற்படுத்திவிடலாமென்று திட்டமிட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லாதது, கீழ்ப்படியாதிருக்கும் அந்த உத்தரவைப் பற்றி அவர் தெரிந்திருக்க வேண்டும், மற்றும் அவரின் கீழ்ப்படியாமை தீங்கை விளைவிக்கிறது, அல்லது விளைவிக்கலாமென்று தெரிந்திருந்தாலே போதுமானது. எடுத்துக்காட்டு ஒரு உத்தரவை சட்டப்படி பிரகடனப்படுத்த அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால், ஒரு மத ஊர்வலம் ஒரு குறிப்பிட்ட தெருவின் வழியே செல்லக்கூடாது என கட்டளையிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நபர் அந்த உத்தரவுக்கு தெரிந்தே கீழ்ப்படியாமலிருக்கிறார்.மற்றும் அதனால் கலவரம் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறார்.இச் சட்டப்பிரிவின்படி வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை அந்த நபர் புரிந்திருக்கின்றார்.

ரத்தன்லால் மற்றும் டிராஜ்லால் எழுதிய (19 வது பதிப்பு) ‘இந்திய தண்டனைச் சட்டம்’ புத்தகத்தின் படி, “குற்றம் சாட்டப்பட்டவர் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதன் கீழ்ப்படியாமையால் அந்த உத்தரவைப் பற்றி அறிந்திருந்தார் என்பதற்கான சான்றுகள் இருக்க வேண்டும். உத்தரவை அறிவிக்கும் பொதுவான அறிவிப்பு ஆதாரம் பிரிவின் தேவைகளை பூர்த்தி செய்யாது. உத்தரவின் கீழ்ப்படியாமை ஒரு குற்றமாக இல்லை, கீழ்ப்படியாமை ஒரு குறிப்பிட்ட விளைவைக் கொண்டிருக்கிறது அல்லது காட்டுகிறது என்பதைக் காட்ட வேண்டும்.”

இந்த உத்தரவு அரசு நிர்வகாத்தினரால் பொது நோக்கங்களுக்காக இருக்க வேண்டும். இரு கட்சிகளுக்கிடையில் ஒரு சிவில் வழக்கில் செய்யப்பட்ட உத்தரவு இந்த பிரிவின் கீழ் வராது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கூட்டிச் செல்லுமாறு கட்டளையிடும் உத்தரவு பிரிவு 188 இன் கீழ் செல்லுபடியாகும் உத்தரவாக கருதப்படுகிறது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதை கலைப்பதற்கான உத்தரவு பிரிவு 188 இன் கீழ் செல்லும் என்று கருதப்படுகிறது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வகைப்படுத்துதல்

குற்றவியல் நடைமுறைக் சட்டம் (சிஆர்பிசி), 1973 இன் முதல் அட்டவணையின் கீழ், இது சட்டபூர்வமாக பணியாற்றும் நபர்களுக்கு தடங்கல், எரிச்சல் அல்லது காயத்தை ஏற்படுத்தினால் குற்றம். இதற்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இதில், மனித உயிருக்கு உடல்நலத்துக்கு அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தினால், 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்த இரண்டு குற்றங்களும் ஜாமினில் வெளிவரக்கூடிய குற்றங்கள். இந்த வழக்குகளை எந்த நீதிபதி வேண்டுமானலும் விசாரிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Violating coronavirus lockdown what is section 188 ipc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X