கொரோனா வைரஸ்: யாருக்கெல்லாம் நுரையீரலில் பிரச்னை வரும்?

போதுமான ஆக்சிசன் உள்ளெடுக்க முடியாத சூழலில், கார்பன்-டை-ஆக்சைடு தேவைப்படும் அளவு வெளியேறினால், நிமோனியா மரணத்திற்கு வழிவகுக்கும்.

கோவிட்-19 தொடர்பான செய்திகள் நாளொன்றுக்குவந்த வண்ணம் நிலையில், சில அடிப்படை புரிதலும் நமக்கு கிடைத்துள்ளன. 1.4 மில்லியன் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் குணமடைந்துள்ளனர், 80,000 க்கும் குறைவானவர்கள் இறந்துள்ளனர்.

வயதானவர்கள் மற்றும் பிறதீவிரமான நோய்கள் உடைய மக்கள் அதிகமாக இறந்தாலும், அவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் (SARSCoV2) நிமோனியாவுக்கு வழிவகுத்துள்ளது.  இந்த நிமோனியா தான் அதிகப்படியான மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே, கொரோனா வைரஸ், நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது? என்பதை இங்கே காண்போம்.

அடிப்படை என்ன?  வைரஸ் உடலில் நுழைந்ததும், அது நுரையீரலின் வெளிப்புறத்தில் உள்ள காற்றுப் பாதைகளை அடைகிறது. இது நமக்கு அதிகப்படியான  அசவுகரியத்தை  ஏற்படுத்தும். இந்த காற்றுப் பாதைகள் தான்  நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. வைரஸ் இந்த காற்று பாதைகளின் அடுக்கை  (lining) சிதைக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நமது உடல் ஒரு வீக்கத்தை உருவாக்குகிறது. இந்த வீக்கம், காற்று பாதையின் அடுக்கில் இருக்கும் நரம்புகளை எரிச்சலூட்டுகிறது. பாதிக்கப்பட்ட நபர் அதை சரி செய்வதற்காக இரும்புகிறார்.

வைரஸ் காற்றுப்பாதைகளின் அடுக்குகளைத் தாண்டி,காற்றுப் பாதைகளின் முடிவில் இருக்கும் நுண் அறைகளில்  (air sacs ) அடைந்தால் தொற்று மிகவும் கடுமையானதாக மாறிவிடும். அல்வியோலி என்று அழைக்கப்படும் இந்த  நுண் அறைகள்  நுரையீரலில் வாயு பரிமாற்றத்திற்கு காரணமாகின்றன.  இந்த நுண் அறைகள்  வைரஸ்  தொற்றுக்கு ஆளாகும்போது, காற்று இருந்த இடத்தில், சளியும் சீழும் நிரம்பி வழியும். இதையே நாம் நிமோனியா  என்கிறோம்.  இதன் மூலம்,சுவாசிக்கும் போது  ஆக்சிசன் உள்ளெடுப்புத் தடை செய்யப்படுகிறது.

போதுமான ஆக்சிசன் உள்ளெடுக்க முடியாத சூழலில், கார்பன்-டை-ஆக்சைடு தேவைப்படும் அளவு வெளியேறினால், நிமோனியா மரணத்திற்கு வழிவகுக்கும்.

யார் கவலைப்பட வேண்டும்?

வைரஸ் தொற்றால் கடுமையாக பாதித்தவர்களுக்கு மட்டுமே மேலே கூறிய விளக்கம் பொருந்தும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தீவிரமான அறிகுறிகளைக் காட்டிய ஒருவர் விரைவில் குணமாகி வீடு திரும்புகிறார், சிலருக்கு அறிகுறிகள் கூட தீவிரமாவதில்லை.

மிகக் குறைவான ஆபத்துடைய நோயாளிகள், கொரோனா  வைரஸ் தொற்றுக்குப் பிறகும் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை.  இன்னும் சிலருக்கு மேல் சுவாசக் குழாயில் அமைந்திருக்கும்  நுரையீரலின் அடுக்குகள் மட்டும் பாதிக்கப்படுகிறது. இது போன்ற சூழலில், நாம் மேலே கூறியது போல வறட்டு இருமலும் , காய்ச்சலும் இருக்கலாம். இருப்பினும், இவர்கள் மூலம் வைரஸ் அதிகமான மக்களுக்கு பரவும் சாத்தியமும்  உருவாகிறது.

அறிகுறியற்ற (அல்லது)  லேசான அறிகுறியை வெளிபடுத்தும்  மக்களை விட சற்றே கடுமையான அறிகறிகளை  (ஃப்ளு அறிகுறிகளோடு தொடர்புடைய ) வெளிப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது

ராயல் ஆஸ்ட்ராலேசியன் மருத்துவக் கல்லூரியின் தலைவரும், சுவாச மருத்துவருமான பேராசிரியர் ஜான் வில்சன்,  கோவிட் – 19 பரவலில் ஃப்ளு போன்ற அறிகுறிகளைக் கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தி கார்டியன் பத்திரிகையின் நிபுணர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

மிகவும் கடுமையான பாதித்தவர்களுக்குத் தான் நிமோனியா உள்ளிட்ட கடுமையான நோய்கள் உருவாகிறது. உலகில் இதுவரையில், நிமோனியா போன்ற தீவிர நிகழ்வுகளை விட, ஃப்ளு போன்ற அறிகுறிகளைக் காட்டிலும் மக்கள் எண்ணிக்கை தான் மிக அதிகம்.

கோவிட்-19 நோயின் விளைவாக ஏற்படும் நிமோனியா, வைரஸ் நிமோனியா என்றழைக்கப்படுகிறது. எனவே,  இதற்கு ஆன்டிபயோடிக்ஸ் கொடுத்து சிகிச்சையளிக்க முடியாது. கடுமையான சந்தர்ப்பங்களில், உடலில் போதுமான ஆக்ஸிஜன் சுழற்சியை உறுதிப்படுத்த வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close