சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ 2020, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) title ஸ்பான்சரில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. விவோ நிறுவனம், ஐபிஎல் title ஸ்பான்சர்ஷிப்பை 2018 ஆம் ஆண்டில் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் ரூ .1,199 கோடிக்கு வாங்கியது. அதன்படி, நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ .439.8 கோடி ஸ்பான்சர்ஷிப் தொகையை வழங்குகிறது.
விவோ உண்மையில், 2016 ஆம் ஆண்டிலேயே ஐபிஎல்-ல் நுழைந்தது. ஸ்பாட் பிக்ஸிங் ஊழல் தொடர்பாக பெப்சி தனது ஐந்தாண்டு ஒப்பந்தத்திலிருந்து விலகிய பின்னர் ஒரு குறுகிய கால ஸ்பான்சராக விவோ உள் நுழைந்தது. அதன் முதல் இரண்டு ஆண்டு ஸ்பான்சர்ஷிப் மதிப்பு ரூ .200 கோடி.
‘ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்’ – சிஇஓ காசி விஸ்வநாதன்
2018 டி20 லீக்கிற்கு பிறகு நடந்த ஏலத்தில், போட்டியாளரான ஒப்போவை விஞ்சி 1,432 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
விவோ வெளியேற்றம் பி.சி.சி.ஐ மற்றும் உரிமையாளர்களை எவ்வாறு பாதிக்கும்? ஒரு சாதாரண ஐபிஎல் சீசனில் உரிமையாளர்களுக்கான செலவுகள், வருமானம் மற்றும் இலாபம் எவ்வாறு செயல்படுகின்றன? கோவிட் மற்றும் ஒரு வெளிநாட்டில் ஐபிஎல் நடப்பது போன்றவை வருவாய் அம்சங்களை வேறு எந்த வழிகளில் பாதிக்கலாம்? என்பதை பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil