Advertisment

வயநாடு: காட்டு யானை கொடூரமாகத் தாக்கி ஒருவர் மரணம்: கேரளாவின் மனித- விலங்கு மோதலுக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள்

வயநாட்டில் வனத்துறை கண்காணிப்பில் இருந்த யானை 47 வயதான மனிதரை தாக்கி கொன்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் வனத்துறை அதிகாரிகள் யானையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வயநாட்டில் வனத்துறை கண்காணிப்பில் இருந்த யானை 47 வயதான மனிதரை தாக்கி கொன்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் வனத்துறை அதிகாரிகள் யானையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

மனிதர்களை வன விலங்குகள் தாக்கும் சம்பவம் வயநாட்டில் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக யானை, புலிகள், கரடி தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதுபோல சம்பவங்கள் வயநாடு, கன்னூர், பாலக்காடு, இடுக்கி பகுதிகளில் அதிகரித்துள்ளது.

அரசிடம் உள்ள தகவலின்படி 2022-2023 வரை  8,873 காட்டு விலங்குகள் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 4,193 சம்பவங்கள் காட்டு யானைகளாலும், 1,524 சம்பவஙக்ள் காட்டு பன்றிகளாலும், 193 சம்பவங்கள் புலிகளாலும், 244  சிறுத்தைகளாலும், 32 சம்பவங்கள் காட்டு எருமைகளாலும் நடைபெற்றுள்ளது. இதில் 98 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 27 மரணங்கள் காட்டு யானைகள் தாக்கியதால் நடைபெற்றுள்ளது.

மேலும் இதுபோல தாக்குதல்களால் விவசாயம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் 20,957 சம்பவங்களில் விவசாய பயிர்கள் சேதமாகி உள்ளது. மேலும் மக்கள் வளர்க்கும் 1,559 ஆடு, மாடுகள் கொல்லப்பட்டுள்ளது.

வயநாட்டின் நிலப்பகுதி 36.48 % வனங்களால் ஆனது. கடந்த 10 ஆண்டுகளில் 41 பேர் காட்டு யானைகளால் கொல்லபட்டனர்.  7 பேர் புலி தாக்கி கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த மாவட்ட காடுகள், நாகரஹோலே புலிகள் காப்பகம், பண்டிப்பூர் தேசிய பூங்கா, பிஆர் புலிகள் காப்பகம் கர்நாடகா, முதுமலை புலிகள் பூங்கா, சத்தியமங்களம் காடுகளின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்நிலையில் 47 வயது மனிதரை தாக்கிய, இந்த காட்டு யானை ஆனது கர்நாடகா வனத்துறையால் நவம்பர் 2023ம் முதல் கண்காணிக்கப்பட்டு வந்தது.

2018ம் ஆண்டு டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் காக்கும் அறக்கட்டளை இணைந்து இந்த விலங்குகள் தாக்குதலுக்கான காரணத்தை கண்டறியந்தன.

இதில் முக்கியமாக வனங்களின் வளங்கள் மற்றும் தரம் குறைந்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. யூகலிப்டஸ், அகாசியா, மாஞ்சியம் மரங்கள் வளர்ப்பதால், காட்டில் உள்ள மரங்கள் அழிகிறது. மேலும் இது காட்டின் தண்ணீரை உருஞ்சுகிறது. குறிப்பாக 30,000 ஹெக்டேர் வனத்தின் நிலங்களில் இந்த வகை தாவரங்கள்தான் அதிகமாக இருப்பதால், வன விலங்களுக்கு தேவையான தாவரங்கள் மற்றும் உணவுகள் கிடைப்பதில்லை. பல வருடங்களுக்கு முன்பு வனத்துறையால் ஆக்கிரமிப்பு தாவர இனங்களான லன்டனா, மிக்கனியா, சென்னா போன்ற வகைகள் நடப்பட்டது. இந்த தாவரங்களால்  காட்டில் இயற்கையாக வளரும் தாவரங்களின்  வளர்ச்சி தடை செய்யப்படுகிறது.  

Read in English 

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment