போட்டி போட்டுக் கொண்டு இட இதுக்கீடு; ஓ.பி.சியில் இணைய இருக்கும் மஹிஸ்ய பிரிவினர் யார்?

சித்திக் மற்றும் சாயாத் இஸ்லாமியர்களை தவிர்த்து இதர இஸ்லாமியர்கள் ஓ.பி.சி. ஏ அல்லது ஓ.பி.சி. பி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Atri Mitra

West Bengal Assembly elections: United colours of an OBC promise : திரிணாமுல் காங்கிரஸ், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் மஹிஸ்யாஸ், தமுல்ஸ், சஹாஸ் மற்றும் திலிஸ் பிரிவினருக்கு ஓ.பி.சி. இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினார். அதற்கு ஒரு நாளுக்கு முன்பு தான், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரச்சாரத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தால் இதே பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறினார்.

ஓ.பி.சி. வாக்குகள்

2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடங்களில் அதிக அளவில் எஸ்.டி, எஸ்.சி., மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர். குறிப்பாக தெற்கு வங்கத்தில். அங்கு தான் பாஜக திரிணாமுல் கோட்டையை தகர்த்தது. பட்டியல் பழங்குடியினர், பட்டியல் இனத்தவர்களின் வாக்குகள் ஜங்கல்மஹால், வடக்கு 24 பாரகான்ஸ் மற்றும் நாடியா மாவட்டங்களில் வெற்றியை பெற்றுத்தந்தால், பாஜகவிற்கு கிழக்கு மற்றும் மேற்கு மித்னபூர், ஹூக்லி மற்றும் ஹவுரா போன்ற பகுதிக்களில் ஓ.பி.சிகளின் வாக்குகள் அக்கட்சிக்கு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக இந்த பகுதிகளை பலப்படுத்த முயன்றால், இடஒதுக்கீடு குறித்த வாக்குறுதி ஓ.பி.சி வாக்குகளை திரிணாமுல் கட்சி பெறும் என்று நம்புகிறது.

மமதா அரசங்காத்தில் இருக்கும் ஓ.பி.சி. கொள்கை

திரிணாமுல் காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு பிறகு 2012ம் ஆண்டு மேற்கு வங்க பின்தங்கிய வகுப்புகள் சட்டம் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி தவிர்த்து) இதர பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டினை உறுதி செய்தது. சித்திக் மற்றும் சாயாத் இஸ்லாமியர்களை தவிர்த்து இதர இஸ்லாமியர்கள் ஓ.பி.சி. ஏ அல்லது ஓ.பி.சி. பி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து இந்துக்கள், கன்சரிஸ், காஹர்கள், மித்தீகள், கபலீகள், கர்மகர்கள், கும்பகர்கள், குர்மிகள், மஜ்ஹிகள், ,மோதக்குகள், நப்திகள், சூத்ரதர்கள், ஸ்வர்னகர்கள், தெலிகள், மற்றும் கொலுக்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றனர்.

மேற்கு வங்க அரசாங்கத்தின் பின்தங்கிய வகுப்புகள் நலத்துறையின் அறிவிப்பின் படி, கிட்டத்தட்ட 38 லட்சம் நபர்களுக்கு ஓபிசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், டுவாரே சர்க்கார் (வீட்டு வாசல் அரசு) திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானவர்களை சேர்த்ததாக அரசாங்கம் கூறியது. சிறப்பான சமூக அந்தஸ்த்தை கொண்டிருக்கிற மற்றும் பிரதான நீரோட்டத்தில் வாழ்கிற மஹிஸ்யாக்கள் (மேலாதிக்க வகுப்பினர்), தோமர்கள், திலிக்கள், சகாக்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

மேற்கு வங்க அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கிம், மக்களின் வாக்கு வங்கிகளை பெற மமதா முயற்சிக்கவில்லை. நலிந்தவர்களுக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எப்போதும் இருக்கிறது. அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்துள்ளார். தற்போது நிறைய வகுப்பினர் அதையே கோருகின்றன. அதனை நாங்கள் பரிசீலிக்க விரும்புகின்றோம். பின்பு அவர்கள் ஓ.பி.சியில் இணைய தகுதியானவர்களா என்பதை அரசாங்கம் ஆயும் என்று கூறினார்.

பாஜக செய்தி தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா, தங்களின் அறிக்கையை திரிணாமுல் கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியலுடன் ஒப்பீடு செய்ய முடியாது என்றார். மண்டல் ஆணையத்தின் அறிவிப்பு படி தகுதியானவர்களுக்கு நாங்கள் இட ஒதுக்கீட்டினை வழங்குவோம் என்று கூறியிருந்தோம். இதனைக் கேட்டவுடன் மமதா பானர்ஜீயும் மஹிஸ்யா மற்றும் இதர குழுவினருக்கு இட ஒதுக்கீட்டினை அறிவித்துள்ளார்.

மஹிஸ்யாவின் மரபு

தெற்கு வங்கத்தில் மஹிஸ்யாக்கள், தோமர்கள், திலிக்கள், மற்றும் சாஹாக்கள் உள்ளிட்ட பிரிவினர் 50 தொகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கின்றன. பிரீந்திரநாத் சஷ்மல், சுஷில் தாரா மற்றும் சதீஷ் சமந்தா ஆகியோர் இந்த பிரிவினை சேர்ந்தவர்கள். இந்த பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தின் போது ஒரு ‘தமராலிப்தா ஜாதியா சர்க்கார்’, ஒரு “சுயாதீனமான இணையான அரசாங்கத்தை” உருவாக்கினர்கள். டிசம்பர் 17ம் தேதி 1942 முதல் ஆகஸ்ட் 8, 1944 வரையில் இந்த அரசாங்கம் நடைபெற்றது. தனியாக காவல்நிலையங்கள் மற்றும் வருமான வசூலிப்பிற்கு ஒரு அமைப்பையும் கூட உருவாக்கியது.

மித்னாப்பூர் இதில் ஒரு பகுதியாகும். இந்த முறை மமதா போட்டியிடும் நந்திகிராமும் இந்த பகுதியில் தான் வருகிறது. அவரின் பிரதான போட்டியாளரும் முன்னாள் திரிணாமுல் தலைவருமான சுவேந்து அதிகாரியும் இங்கு தான் போட்டியிடுகிறார்.தன்னுடைய பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் இருந்தே மித்னாப்பூர் அடையாளத்தை அடிக்கடி கூறிக் கொண்ட அவர் தாரா, சமந்தா, சஷ்மால் போன்ற தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தி வந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: West bengal assembly elections united colours of an obc promise

Next Story
டாஸ் ஜெயித்தாலே வெற்றியா? இந்திய மைதானங்கள் சொல்வது என்ன?Cricket news in tamil How T20 in sub-continent has become win-toss-win-game format Explained
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com