Advertisment

மேற்குவங்க இடைத்தேர்தல்: பாஜக எதிர்பார்க்காத தோல்வியை மம்தா பரிசளித்தது எப்படி?

டி.எம்.சி தனது வேட்பாளர்களையும் நன்றாக தேர்வு செய்தது. முக்கிய முகங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, கட்சி உள்ளூர் தலைவர்களை வேட்பாளர்களாக்கியது. இது பிரிவு மோதல்களைத் தடுக்கவும் உதவியது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
West Bengal byelection results: Trinamool Congress wins all three seats - மேற்குவங்க இடைத்தேர்தல்: பாஜக எதிர்பார்க்காத தோல்வியை மம்தா பரிசளித்தது எப்படி?

West Bengal byelection results: Trinamool Congress wins all three seats - மேற்குவங்க இடைத்தேர்தல்: பாஜக எதிர்பார்க்காத தோல்வியை மம்தா பரிசளித்தது எப்படி?

Santanu Chaudury

Advertisment

மேற்கு வங்கத்தில் நடந்த மூன்று சட்டமன்றத் இடைத்தேர்தல்களையும் வென்றதன் மூலம், திரிணாமுல் காங்கிரஸ் தனது மக்களவைத் தேர்தல் ஏமாற்றத்தில் இருந்து ஓரளவுக்கு மீண்டு வந்திருக்கிறது. 2021 விதான் சபா(சட்டமன்ற தேர்தல்) போருக்கு முன் இந்த வெற்றி ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது.

கராக்பூர் சதார் தொகுதி என்பது பாஜகவின் கோட்டையாக இருந்தது. அங்கு பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் எம்எல்ஏவாக இருந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு திலிப் கோஷ் எம்.பி.யானதால் அந்தத் தொகுதி காலியானது.

கராக்பூர் சதார் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிப் சர்கார், பாஜக வேட்பாளர் பிரேம் சந்திர ஜாவை 20,853 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மக்களவை தேர்தலில், இங்கு பாஜக 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கராக்பூரில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி என்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகும். தன் கைவசம் வைத்திருந்த 3 எம்.எல்.ஏ தொகுதிகளில் ஒரு எம்எல்ஏ தொகுதியை பாஜக இழந்துவிட்டடது.

கலியாகஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் கமல் சந்திர சர்க்காரைக் காட்டிலும் 2 ஆயிரத்து 414 வாக்குகள் அதிகமாக பெற்று திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் தபன் தேப் சின்ஹா வெற்றி பெற்றார். மக்களவை தேர்தலில், பாஜக இங்கு( ராய்கஞ்ச்) 57,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.

மூன்றாவது தொகுதியான கரிம்பூரில் பாஜக வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்தாரைக் காட்டிலும் 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிமாலென்டு சின்ஹா ராய் முன்னிலை வகித்த நிலையில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிமலேண்டு சின்ஹா ராய் பாஜகவின் ஜெய் பிரகாஷ் மஜூம்தாரை 23,910 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கு வங்கத்தில் முதல் முறையாக கலியகஞ்ச் மற்றும் கரக்பூர் தொகுதிகளை திரிணமூல் காங்கிரஸ் முதல் முறையாகக் கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கரிம்பூர் தொகுதியை திரிணாமுலின் மஹுவா மொய்த்ரா வென்றார். அவர் இப்போது அக்கட்சியின் கிருஷ்ணா நகர் எம்.பி.யாக உள்ளார். கரிம்பூர் முர்ஷிதாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும், முர்ஷிதாபாத் எம்.பியாக திரிணாமுலின் அபு தாஹர் கான் உள்ளார்.

நாடு தழுவிய தேசிய குடிமக்களின் பதிவேட்டைச்(NRC - National Register of Citizens) சுற்றியுள்ள பயத்தின் கலவை, கட்சியின் மறுசீரமைப்பு, பிரசாந்த் கிஷோரின் வெற்றிகரமான தேர்தல் உத்தி, ஒவ்வொரு வீடாக சென்று கட்சித் தலைவர்கள் வாக்காளர்களை சந்தித்தது, உள்ளூர் தலைமைகளின் சிறப்பான செயல்பாடு போன்றவை இந்த வெற்றிக்கு காரணம் என்பதை திரிணாமுல் ஒப்புக் கொள்கிறது.

திரிணாமுல் தலைவர்கள், பாஜகவுக்கு எதிராக, குறிப்பாக கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வங்காளத்தின் பல மாவட்டங்களில், மக்கள் முக்கியமான ஆவணங்களைத் திருத்துவதற்கும், குடியுரிமையை நிரூபிக்க நிலப் பத்திரங்களைக் கோருவதற்கும் பல மணிநேரங்களாக குடிமை அமைப்பு மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு வெளியே வரிசையில் நிற்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை களையெடுக்க பாஜக தலைவர்கள் பலமுறை என்.ஆர்.சியை அழைத்தது. மாநிலக் கட்சித் தலைவர் கோஷ், என்.ஆர்.சி காரணமாக 2 கோடிக்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச நாட்டவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

பொருளாதார நிலை மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாதது பாஜகவின் வெற்றியை பாதித்தது.

டி.எம்.சி தனது வேட்பாளர்களையும் நன்றாக தேர்வு செய்தது. முக்கிய முகங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, கட்சி உள்ளூர் தலைவர்களை வேட்பாளர்களாக்கியது. இது பிரிவு மோதல்களைத் தடுக்கவும் உதவியது.

கட்சியின் மூத்த தலைவர்களான சுவேண்டு ஆதிகாரி மற்றும் ராஜீப் பானர்ஜி ஆகியோருக்கு பிரச்சாரத்தை அடிமட்டத்தில் நடத்தும் பணி வழங்கப்பட்டது, அதே நேரத்தில் மம்தா பானர்ஜி போன்ற கட்சியின் ஹெவிவெயிட்கள் பெரும்பாலும் விலகியே இருந்தார்கள்.

இடைத்தேர்தல்கள் வன்முறை இல்லாதவை என்பதையும் கட்சி உறுதிசெய்தது - ஒரு சம்பவத்தைத் தவிர, வாக்குப்பதிவு நாளில் பெரிய அரசியல் வன்முறைகள் எதுவும் நிகழவில்லை. அதேசமயம், இடது முன்னணி - காங்கிரஸ் வாக்குகளில் பெரும்பகுதி திரிணாமுலுக்கு சென்றது என்று பலரும் நம்புகிறார்கள்.

Mamata Banerjee West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment