Advertisment

சபையில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் விதிகள் என்னென்ன ?

ஆளும் கட்சி உறுப்பினர்களிடம்  ஒழுக்கத்தை எதிர்பார்கிறது , எதிர்க்கட்சி  சபையில் அரசை எதிர்ப்பது  தனது  உரிமையாக நினைக்கின்றது . ஆட்சி மாறும்போது, சபையில்  அவர்களின்  கொள்கையும் மாறுபடுகிறது .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Om Birla, winter session of parliament, what is Rule 378, parliament, lok sabha updates

Om Birla, winter session of parliament, what is Rule 378, parliament, lok sabha updates

பாராளுமன்ற சபையில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா இரு காங்கிரஸ் உறுப்பினர்களை சமீபத்தில் இடைநீக்கம் செய்தார். இதனால், பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை, சபாநாயகரின் அதிகராம், பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் போன்றவைகள் மீண்டும் விவாதமாகியுள்ளன.

Advertisment

பாராளுமன்றம் நடைமுறை மற்றும் செயல்முறை விதி 378-ன் கீழ்,“ சபாநாயகர் சபையை ஒழுங்குபடுத்துவதற்கான முடிவுகளை செயல்படுத்தும்  அதிகாரங்களை எப்போதும் கொண்டவராவார்" என்று கூறப்பட்டுள்ளது.

விதி 373ன் கீழ் : “சபாநாயகர், எந்தவொரு உறுப்பினரின் நடத்தை மிகவும் ஒழுங்கற்றது என்று கருதுவாரானால், அத்தகைய உறுப்பினரை உடனடியாக சபையிலிருந்து நீக்க அனுமதிக்கலாம். இதனால், சபை நடக்கும் காலகட்டம் வரை சபையில் அவர் இல்லை (ஆப்சன்ட்) என்றே கருதப்படுவார்.

சபாநாயகரின் கண்ணியத்தைக் குறைக்கும் உருப்பினர்களுக்கு, விதி 374 ன்: (1) சபாநாயகர் முக்கியம் என்று கருதுவாரானால் , சபாநாயகரின் அதிகாரத்தை புறக்கணிக்கும் (அல்லது) சபையின் விதிகளை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு உறுப்பினரின் பெயரை இந்த விதியின் கீழ் குறிப்பிடலாம்.

“(2) இந்த பெயரிடப்பட்ட உறுப்பினரை ( 374 (1)) மீதமுள்ள சபையின் கூட்டத் தொடரில் இருந்து முழுவதும் இடைநீக்கலாமா என்ற தீர்மானத்தை உடனடியாக சபையில் கொண்டு வரவேண்டும்.  இருந்தாலும், அந்த சபைக்கு (ஒட்டுமொத்த உறுப்பினர்களுக்கு ) சபாநாயகர் இடைநீக்கத்தை முடித்து வைக்கும் அதிகாரம் உண்டு. அதற்கு சபை உறுப்பினர்கள் தனியாக ஒரு தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்.

(3) இந்த விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் உடனடியாக சபையின் வளாகத்தில் இருந்து விலகல் வேண்டும்.

விதி 374 ஏ- ன் கீழ்  : “(1) 373 மற்றும் 374 விதிகளில் என்ன சொல்லியிருந்தாலும் சரி,  ஒரு உறுப்பினர் சபையின் மையத்துக்கு வருவதோ( well of the house) சபையின் விதிகளை துஷ்பிரயோகம் செய்தாலோ, தொடர்ந்து கூச்சலிடுவதன் மூலம் அதன் செயல்பாடுகளை முடக்கினாலோ 374 ஏ விதியின் கீழ் சபாநாயகரால் பெயரிடப்படுவார். அவ்வாறு பெயரிடப்பட்டவர், தொடர்ச்சியாக ஐந்து அமர்வுகள் (அல்லது) எஞ்சியுள்ள அமர்வுகளில்  சபையின் பணிகளில் இருந்தது இடைநீக்கப்படுவார். இருந்தாலும், அந்த சபைக்கு ,  சபாநாயகர் இடைநீக்கம் செய்யும் முடிவை  முடித்து வைக்கும் அதிகாரம் உண்டு. அதற்கு அவர்கள் தனியாக ஒரு தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்.

(2) இந்த விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் உடனடியாக சபையின் வளாகத்தில் இருந்து விலகல் வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம், சபையில் தொடர்ச்சியாக கூச்சல் கொடுத்து வந்த காரணத்தால், அப்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், தெலுங்கு தேசம்  மற்றும் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களை 45 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தார். அடுத்த படியாக, 24 அதிமுக உறுப்பினர்கள் ஐந்து பாராளுமன்றக்  கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் சபாநாயகர்  நாற்காலியை நோக்கி ஆவணங்களை பறக்கவிட்டனர். விதி 374 ஏ- ன் கீழ் உங்கள் பெயர் உச்சரிக்கப்படும் என்று எச்சரித்த பின்னரும், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மீதமிருக்கும்  கூட்டத்தொடரில் இருந்து  கலந்து கொள்வதைத் தடைசெய்தார் சபாநாயகர்.

பிப்ரவரி 2014 ல், சபாநாயகர் மீரா குமார் (பிரிக்கப்படாத) ஆந்திராவை சேர்ந்த 18 எம்.பி.க்களை  இடைநீக்கம் செய்தார். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் சிலர் தெலுங்கானா தனி மாநிலமாக  உருவாக்குவதை ஆதரித்து கூச்சலிட்டனர், சிலர் எதிர்த்து கூச்சலிட்டனர் .

2018 டிசம்பரில், மக்களவை நடைமுறை விதிகள் குழு, சபையின் மையத்துக்குள் நுழையும் உறுப்பினர்களை உடனடியாக (சபாநயாகர் பெயர் குறிப்பிடவேண்டிய அவசியமில்லாமல்)   இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்தது.

ஆளும் கட்சி உறுப்பினர்களிடம்  ஒழுக்கத்தை எதிர்பார்கிறது , எதிர்க்கட்சி  சபையில் அரசை எதிர்ப்பது  தனது  உரிமையாக நினைக்கின்றது . ஆட்சி மாறும்போது, சபையில்  அவர்களின்  கொள்கையும் மாறுபடுகிறது .

Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment