மத்திய அரசு vs டாடா நிறுவனம்: ஏர் இந்தியா விற்பனையில் யாருக்கு லாபம்?

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏர் இந்தியாவின் 49% பங்குகளை அரசு வாங்கியது

Udit Misra 

Air India deal : வெள்ளிக்கிழமை அன்று ஏர் இந்தியாவில் உள்ள அரசின் பங்குகளையும், இதர இரண்டு நிறுவனங்களில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் (ஏஐஎக்ஸ்எல்) மற்றும் ஏர் இந்தியா எஸ்ஏடிஎஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (ஏஐஎஸ்ஏடிஎஸ்), உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளையும் விற்கும் முடிவை அறிவித்தது அரசு.

ஏன் ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்டது?

ஏர் இந்தியாவை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஏர் இந்தியா டாட்டா குழுமத்தால் 1932ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏர் இந்தியாவின் 49% பங்குகளை அரசு வாங்கியது. பிறகு 1953ம் ஆண்டு மீத பங்குகளையும் இந்தியா வாங்கி இந்த விமான சேவையை தேசியமயமாக்கியது இந்திய அரசு.

அடுத்த சில ஆண்டுகளில் இந்த சேவை இந்திய வானில் ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் வளர்ந்து வரும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் பல்வேறு கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியது ஏர் இந்தியா. கருத்தியல் ரீதியாகவும், ஒரு விமான நிறுவனத்தை நடத்தும் அரசாங்கம் தாராளமயமாக்கலின் மந்திரத்துடன் ஒட்டவில்லை.

2007ம் ஆண்டு, ஏர் இந்தியா இழப்புகளை குறைப்பதற்காக, உள்நாட்டு விமான சேவை வழங்கும் நிறுவனமான இந்தியன் ஏர்லைனஸூடன் இணைக்கப்பட்டது. ஆனால் விமான நிறுவனம் எவ்வளவு மோசமாக இயங்கியது என்பதற்கான அடையாளமே. 2007க்குப் பிறகு இந்த நிறுவனம் லாபமே ஈட்டவில்லை.

உண்மையில் 2009-10 முதல், அரசாங்கம் 1.1 லட்சம் கோடிக்கு மேல் நேரடியாக இழப்பை ஈடுசெய்ய அல்லது கடன்களை திரட்ட செலவழித்துள்ளது. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் படி, ஏர் இந்தியாவின் கடன் 61,562 கோடியாகும். மேலும் ஏர் இந்தியா செயல்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளும் அரசுக்கு கூடுதலாக ரூ.20 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்துகிறது. ஆண்டுக்கு மட்டும் ரு. 7300 கோடி இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஏன் இது விற்கப்படவில்லை?

அரசாங்கத்தின் பங்குகளை குறைப்பதற்காக முதன்முறையாக டிஸ்இன்வெஸ்ட்மென்ட் முறை 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 40% பங்குகளை விற்க முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்தது. ஒவ்வொரு வருடமும் AI இயங்குவதற்கான நம்பகத்தன்மை மோசமடைந்து வருவதால், விரைவில் தனியார்மயமாக்கப்படும் என்று அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது.

2018ம் ஆண்டில் முதன்முறையாக அரசு பங்குகளை விற்க மோடி தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் 76% பங்குகளை விற்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் அது தொடர்பான ஒரு பதிலையும் வெளிப்படுத்தவில்லை.

இறுதியாக 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொற்றுநோயால் விமானப் போக்குவரத்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக இருந்தாலும், அரசாங்கம் இறுதியாக விமான நிறுவனத்தின் பங்குகளை விற்றது.

தற்போது இது சாத்தியமானது எப்படி?

இரண்டு முக்கியத் தடைகள் விற்பனையின் போது இருந்தன. ஒன்று, அரசு பங்குகளை ஓரளவு தக்க வைத்துக் கொண்டது. அதாவது அரசாங்கம் தன்னுடைய பங்குகளை அந்த நிறுவனத்தில் வைத்திருக்கின்ற வகையில் தனியார் நிறுவனங்கள் அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால், அரசு உரிமையைப் பற்றிய வெறும் யோசனை, அது 24%ஆக இருந்தாலும், தனியார் நிறுவனங்கள் இவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் விமான நிறுவனத்தைத் திருப்புவதற்குத் தேவையான செயல்பாட்டு சுதந்திரம் தங்களுக்கு இருக்குமா என்று யோசிக்க வைத்தது. கடந்த கால முயற்சிகள் போலல்லாமல், இந்த முறை அரசாங்கம் தனது பங்குகளில் 100%-த்தையும் விற்பனைக்கு வைத்தது.

இரண்டாவது ஏ.ஐ. மீதான கடன். கடத காலங்களில் விமான நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் நிறுவனம் கடன் தொகைக்கும் பொறுப்பேற்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் அந்த அணுகுமுறை முறையாக வேலை செய்யவில்லை. ஆனால் இம்முறை அரசாங்கம், ஏலம் எடுக்கும் நபர்களால் எவ்வளவு கடன் தொகையை ஈடு செய்யும் என்பதை அந்த நிறுவனமே முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. இந்த இரண்டு காரணிகளும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த விற்பனையின் முக்கியத்துவம் என்ன?

அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் அதனை இரண்டு விதமாக பார்க்க வேண்டும்

ஒன்று, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கைக் குறைப்பதில் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; AI-இன் தினசரி இழப்புகளுக்கு வரி செலுத்துபவர்களை காப்பாற்றியதாகக் அவர் கூறலாம். ஏ.ஐயின் டிஸ்இன்வெஸ்ட்மெண்ட்டில் இருக்கும் சிக்கல் மத்தியில் இது குறிப்பிடத்தகுந்த சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஆனால் நிதி அடிப்படையில், இந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்த டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் இலக்கில் இது பெரிய சாதனையை நிகழ்த்தாது. மேலும் ஏர் இந்தியாவின் மொத்த கடன் தொகை ரூ. 61,562 கோடியாகும். இதில் டாட்டா 15,300 கோடி கடனை ஏற்றுக் கொள்கிறது. அரசாங்கத்திற்கு கூடுதலாக ரூ. 2700 கோடியை டாட்டா நிறுவனம் அளிக்கும். ஆனாலும் மீதம் 43,562 கோடி கடன் இருக்கும். கட்டடங்கள் போன்று அரசாங்கத்திடம் எஞ்சியுள்ள சொத்துக்கள் மூலம் ரூ. 14,718 கோடியை உருவாக்க இயலும். ஆனாலும் கூட ரூ .28,844 கோடி கடனை அரசாங்கம் செலுத்தும் நிலையை இது உருவாக்கும்.

தனியாருக்கு விமான நிறுவனத்தை விற்பனை செய்த பிறகும் கடனுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக அரசாங்கம் ஏர் இந்தியாவை சிறப்பாக இயக்கி இருந்தால் லாபம் சம்பாதித்து கடன்களை அடைத்திருக்கலாம் என்ற வாதத்தை பலரும் முன் வைக்கலாம். டாட்டாவின் கண்ணோட்டத்தில், அவர்கள் தொடங்கிய ஒரு விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கான உணர்ச்சிபூர்வமான அம்சத்தைத் தவிர, AI ஐ வாங்குவது ஒரு நீண்ட கால சவால். இந்த சவாலில் வெற்றி அடைய அரசாங்கத்திற்கு செலுத்தியதை விட அதிகமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What air india deal means for govt tatas

Next Story
கோவிட் காலத்தில் மாணவர்களுக்கு உதவும் வகையில் தேர்வு முறையை மாற்றிய கேரளாKerala news, Kerala, exam pattern, explained copy
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com