புதுவையில் பாஜகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எப்படி உள்ளது?

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு வாக்களித்தால் அரசு ஊழியர்களுக்கு அது நன்மை அளிக்கும் என்று நம்பி பாஜகவிற்கு வாக்களிக்க வாய்ப்புகள் உண்டு.

Arun Janardhanan

முன்பு எப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு எம்ம்.எல்.ஏக்கள் கட்சி தாவினார்கள். புதுவையில் ஒரு பிரதிநிதி கூட இல்லாத நிலையில், நாராயணசாமியின் ஆட்சியை கவிழ்த்தது இந்த நிகழ்வு. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்தது பாஜக என்று அக்கட்சியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாஜக தங்களின் சொந்த முதல்வர் மற்றும் அரசினை புதுவையில் நிறுவ முயலுகிறது. இருப்பினும், நீங்கள் என்னை முதல்வராக்கினால் நாம் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம் என்று இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான என். ரங்கசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாஜகவின் திட்டம் என்ன?

முந்தைய அமைச்சரவையில் இரண்டாவது மிக முக்கியமான தலைவராக கருதப்பட்டவர் நமச்சிவாயம். பாஜகவில் முதன்முதலாக சேர்ந்தவரும் அவரே. தேர்தலுக்கு மிகவும் குறைவான காலமே இருக்கின்ற நிலையில் அவரை அடுத்து 6 நபர்கள் தங்களின் பதவியை கடந்த இரண்டு மாதங்களில் ராஜினாமா செய்தனர்.

பாஜக நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவு மேற்கொண்டது. ஆனால் அந்த முடிவுக்கு எதிராக அவருடைய மாமா – என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியை தாண்டியும் அனைத்து தரப்பிலும் மரியாதை மற்றும் செல்வாக்கினை பெற்ற தலைவராக அவர் இருக்கிறார்.

தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று ரங்கசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக ஏற்கனவே என்.ஆர் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது.

அவர்கள் தேர்வு செய்யாத மற்றொரு பாஜகவின் திட்டம் என்னவென்றால், அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் நீடித்த ஜனாதிபதி ஆட்சி மற்றும் மத்திய நிதிகளை செலுத்துவதன் மூலமும், திவாலான துறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் பெரும்பான்மையான மக்களை நம்பிக்கையில் ஆழ்த்துவது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்ற நிலையில் மத்திய அரசு சாலைகள் போடுதல், முனிசிபாலிட்டிகளை பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை மத்திய அரசு மேற்கொள்ளலாம். இவை தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் வராது. பாஜக அல்லது துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போன்றோருக்கு இந்த பணிகளுக்கான “க்ரெடிட்” கிடைக்காது. ஏன் என்றால் அதனை சாதாரண மக்கள் தங்களின் எம்.எல்.ஏக்கள் இதனை செய்திருப்பார்கள் என்று நினைக்கக்கூடும்.

பாஜக ரங்கசாமியை முதல்வராக்க முடிவு செய்தால் அது நமச்சிவாயத்திற்கும், அவருடைய சேர்ந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏஎக்களுக்கும் மிகப் பெரிய பின்னடைவாக அமையும். நமசிவாயத்திற்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்தது மட்டுமல்லாமல், காங்கிரஸ் உயர் கட்டளையின் வலுவான ஆதரவுடன் நாராயணசாமி, 2016 ல் முதல்வரான வாய்ப்பை இழந்த ஒரு தலைவரும் ஆவார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ரங்கசாமியின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமா பாஜக?

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த போது பாஜக மகிழ்ச்சி அடைந்திரூக்கலாம். குடியரசு தலைவரின் ஆட்சி விதிக்கப்பட்ட உடனே நரேந்திர மோடி புதுச்சேரிக்கு பறந்து வந்தார். அங்கே, காங்கிரஸ் ஆட்சியின் கீழ் யூனியன் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறினார்.

ஆனால் இங்கு பாஜக அதிக அளவில் தொண்டர்களை கொண்டிருக்காத கட்சி. எனவே அவர்களின் உற்சாகத்தை வெகுநாட்களுக்கு இங்கு வைத்திருக்க முடியாது. அதே நேரத்தில் அவர்களுக்கு எதிராக நிறைய எதிர்க்கட்சிகளும் இல்லை. கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம் ரங்கசாமியின் தம்பியின் மருமகன் ஆவார். மிகவும் பழக்கமான பெயர்கள் அதே நேரத்தில் தங்கள் சொந்த தொகுதிகளை வளர்த்தவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ இல்லாத ஒரு கட்சியாக இருந்தது, ஆனால் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடியின் உதவியுடன் தங்கள் கட்சியில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் மூலம் சட்டசபையில் தங்கள் தடம் பதித்தனர். ரங்கசாமிக்கு முன் சரணடைவது பாஜகவுக்கு முன் எஞ்சியிருக்கும் ஒரே வழி ஆகும்.

மேலும் படிக்க : திமுக – காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?

என். ஆர் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைக்குமா?

தமிழ்நாடு போல் இல்லாத இந்த சிறிய யூனியன் பிரதேசத்தில் ஒவ்வொரு தலைவர்களும் மற்றவர்களுடன் பேசுவார்கள். முறைசாரா நட்பு வார்த்தைகள் இருக்கட்சிக்கும் இடையே நடைபெற்று வருகிறது.

ஆனால் திமுகவுடன் கூட்டணி வைப்பாது ரங்கசாமிக்கு முடியாத ஒன்றாகும். ஏன் என்றால் அங்கு முதல்வராக வருவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கும் தலைவர் ஒருவர் இருக்கிறார் என்று மூத்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் திமுகவின் ஜகத்ரக்‌ஷனைப்பற்றி கூறியுள்ளார். முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த பணக்கார அரசியல்வாதிகள் ஒருவராக இருக்கிறார்.

ஜகத்ரக்‌ஷகன் புதுவையின் முதல்வராக வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். திமுக தனித்து போட்டியிடும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையை மாற்றக் கோரி அழுத்தம் கொடுத்தது திமுக. இருப்பினும், இரு தலைவர்களிடையேயும் அவநம்பிக்கை இருப்பதை இரு கட்சிகளிலும் உள்ள தலைவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

தற்போது புதுவையின் நிலவரம் என்ன?

பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து சுமூக முடிவு இன்னும் எட்டப்படாத நிலையில் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் கட்சி காத்திருந்து பார்ப்பது என்ற யுக்தியை கையில் எடுத்துள்ளது.

அதிமுக எம்.ஆர் காங்கிரஸின் கூட்டாளியாக இருந்தாலும், கூட்டணியில் பிஜேபியின் பங்கு மற்றும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான சர்ச்சை குறித்து தெளிவான முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட நான்கு முக்கிய கட்சிகளைக் கொண்ட 30 பேர் கொண்ட சட்டசபையில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை எதிர்பார்க்கும் பாஜக, இந்த முறை ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட எவரும் அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிக வாய்ப்பு உடையவர்களாக கருதப்படுவார்கள்.

முந்தைய நாராயணசாமி அரசாங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தினரிடையே பிரபலமடையவில்லை. அரசு ஊழியர்கள், திவாலான, அல்லது நிதிக்காக போராடுகின்ற அரசோடு தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியரகளும் இதில் அடங்குவார்கள். அதில் ஒரு பிரிவினர், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு வாக்களித்தால் அரசு ஊழியர்களுக்கு அது நன்மை அளிக்கும் என்று நம்பி பாஜகவிற்கு வாக்களிக்க வாய்ப்புகள் உண்டு.

மேலும் படிக்க : தங்க கடத்தல் வழக்கில் பினராயிக்கு தொடர்பா? என்.ஐ.ஏவிடம் என்ன கூறினார் ஸ்வப்னா?

திமுகவின் ஜகத்ரக்‌ஷகன் மற்றும் பாஜகவின் நமச்சிவாயம் உள்ளிட்டோர்கள் முதல்வர் பதவிக்கு இலக்கு வைத்துள்ளனார். ரங்கசாமி தொடர்ந்து வெற்றி பெறும் காரணியாக நீடித்து மற்றவர்களுக்கு பிரச்சனை முகமாக அமையலாம். துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து பேடியை நீக்குவதற்கு வழிவகுத்தது இந்த மதுபான லாபியின் சக்தியாகும் என்று புதுச்சேரியின் உயர் அதிகாரத்துவத்தின் பல ஆதாரங்கள் நம்புகின்றன. புதுச்சேரியில் இந்த வழக்கமான அரசியல் காரணிகள் அனைத்தையும் மீறி, முக்கிய காரணியாக மதுபானம் பார்க்கப்படுகிறது.

“புதுச்சேரியில் ஒரு டஜன் மதுபான உற்பத்தி நிலையங்கள் உள்ளன, அவற்றின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஒரு இருண்ட வடிவத்தைக் கொண்டிருக்கின்றன, ஏனெனில் அவற்றின் உற்பத்தியில் பாதி கூட முறையான சந்தையில் கணக்கிடப்படவில்லை, ஆனால் அவை முறைசாரா சேனல்கள் வழியாக கடைகளை அடைகின்றன. மிகவும் நிறுவனமயமாக்கப்பட்ட இந்த மோசமான அமைப்பில், அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் பணம் கொடுக்கப்படுகிறது. பேடி சுமார் 25 கடைகளுக்கு சீல் வைத்திருந்தார், அது அந்த மதுபான உற்பத்தியாளர்களை எரிச்சலூட்டியது. ஆனால் அவர் சென்ற பிறகு அவற்றில் பெரும்பாலானவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, ”என்று புதுச்சேரி நிர்வாகத்தை நன்கு அறிந்த ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What are bjps chances of forming the next govt in puducherry

Next Story
குறைந்து வரும் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்; இது வீடு வாங்க சரியான நேரமா?Why home loan rates are falling, and what the buyer should do
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com