Advertisment

அர்னாப் மீது மும்பை காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன?

ஏற்கனவே குற்றம் செய்த குற்றவாளிக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது என்றால் அவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கேட்கப்படுகிறார்.

author-image
WebDesk
New Update
What are chapter proceedings initiated by Mumbai police against Arnab Goswami

Mohamed Thaver 

Advertisment

What are chapter proceedings initiated by Mumbai police against Arnab Goswami :  மும்பை காவல்துறை கடந்த ஒரு வாரமாக ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது அத்யாய நடவடிக்கைகள் என்று அழைக்கப்படும் சாப்டர் ப்ரொசீடிங்குகளை பின்பற்றி வருகிறது. அவருக்கு வெள்ளிக்கிழமை மாலை சம்மன் வழங்கப்பட்டது. சாப்டர் ப்ரொசீடிங்க் என்றால் என்ன? எந்த அளவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராக அது பயன்படுத்தப்படுகிறது?

அர்னாபிற்கு எதிராக துவங்கப்பட்ட அத்தியாய நடிவடிக்கைகள் என்ன?

சாப்டர் ப்ரொசீடிங் என்பது, சமூகத்தில் நிலவி வரும் அமைதியை குலைத்து, பிரச்சனைகளை தூண்டும் விதமாக ஒரு மனிதர் நடந்து கொள்கிறார் என்று காவல்துறை யோசிக்கும் போது,அவரை தடுக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அத்தியாய நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் தண்டிக்கும் நோக்கத்துடன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல் இருக்காது. இங்கு, குற்றவியல் பிரிவுகளின் கீழ் காவல்துறை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியும். அதன் மூலம், அவர் சமூகத்திற்கு தொல்லைகள் தரும் நபராக இருக்கிறார் என்பதையும், அதன் விளைவாக, அவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும் என்பதை சுட்டுகிறார்கள். அவருக்கு அபராதம் வழங்கப்படும் அது அல்லாத சூழலில் சிறையில் அடைக்கப்படலாம்.

எந்தெந்த பிரிவுகளின் கீழ் இந்த அறிக்கைகள் வழங்கப்படுகிறது?

பொதுவாக CrPC-யின் 111வது பிரிவின் கீழ் எக்ஸ்க்யூட்டிவ் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவார். எக்ஸ்க்யூட்டிவ் மாஜிஸ்திரேட் என்பது கிராமப்புறங்களில் துணை ஆட்சியரின் கண்காணிப்பு பிரிவில் ஏ.சி.பி.க்கு நிகரான பதவியாகும். விசாரணைக்கு ஆஜராகும் நபர், ஏன் நன்நடத்தை பத்திரங்களில் கையெழுத்திட கூடாது என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர் கையெழுத்திட உத்தரவிடப்படுவார். மேலும் அவர்களின் நன்னடத்தைக்கு உறுதிமொழிகள் வழங்க வேண்டும். குற்றம் மற்றும் நபரின் நிதித்திறனுக்கு ஏற்ப அபராதத் தொகையும் தீர்மானிக்கப்படுகிறது. அவர் பத்திரத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறினால் அந்த அபராத தொகையை அவர் செலுத்த நேரிடும்.

அர்னாபிற்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் என்ன இடம் பெற்றிருந்தது?

கோஸ்வாமிக்கு ஏற்கனவே 111 வது பிரிவின் கீழ் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, அவர் ஏன் CrPCயின்108 வது பிரிவின் கீழ் நல்ல நடத்தைக்கான பத்திரத்தில் கையெழுத்திடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டார். இது தேசத்துரோக விஷயங்களை பரப்பும் நபர்களின் நன்னடத்தைக்கான பாதுகாப்பினை உறுதி செய்கிறது. இந்த பிரிவு, சமூகம் மற்றும் பிரிவினரிடையே தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு நோட்டீஸ் அளிக்கும் அதிகாரத்தை தருகிறது. இருப்பினும், மூத்த அதிகாரிகள், இது மிகவும் அரிதான சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.  வெள்ளிக்கிழமை வொர்லி பிரிவு ஏ.சி.பி அர்னாப் அளிக்கும் பதில்களில் திருப்தி அடையவில்லை என்றால், அவர் நன்நடத்தைக்கான பத்திரத்தில் கையெழுத்திட வேண்டிய நிலை இருக்கும். மேலும் அவர் பத்திரத்தின் நிபந்தனைகளை மீறினால் ரூ .10 லட்சம் அபராதம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்.

அர்னாபிற்கு இந்த நோட்டீஸ் வழங்க, மும்பை காவல்துறை கூறிய காரணங்கள் என்னென்ன?

இந்த நோட்டீஸ் 111 பிரிவின் கீழ் வழங்கப்பட்டது. மும்பை காவல்துறை, கோஸ்வாமி மீது இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்பையிலான இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளது. ரிபப்ளிக் டிவியில், பந்த்ரா ரயில் நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த புலம்பெயர் தொழிலாளிகள் குறித்தும், பல்காரில் சாதுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் வெளியிடப்பட்ட செய்திகளில் இடம் பெற்ற உள்ளடக்கத்தை இணைக்கிறது இந்த புகார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களையும் வகுப்புவாதமாக மாற்ற முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது, அதைத் தொடர்ந்து எஃப்.ஐ.ஆர். இறுதியில் ஜூன் மாதத்தில், மும்பை உயர்நீதிமன்றம் கோஸ்வாமிக்கு எதிரான எஃப்.ஐ.ஆரைத் தடுத்து, மனு தள்ளுபடி செய்யப்படும் வரை அவருக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த நோட்டீஸை பெற்ற நபர் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் வழிகள் உண்டா?

ஆம். 111 பிரிவின் கீழ் நோட்டீஸ் பெற்ற நபர், நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்யலாம். சில நேரங்களில் நீதிமன்றங்கள் இந்த அத்தியாய நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்துள்ளது. 2017ம் ஆண்டு பார் உரிமையாளர் ஒருவருக்கு எதிராக அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், இயற்கை அடிப்படையில் அரங்கேறிய நிகழ்வுகளுக்கு இப்படி சாப்டர் ப்ரொசீடிங் ச்செய்ய இயலாது என்று கூறியது.

​​2018 ஆம் ஆண்டில் மும்பை அமர்வு நீதிமன்றம், கடந்த கால குற்றத்தைத் தண்டிக்கும் நோக்கத்துடன் அத்தியாய நடவடிக்கைகளைப் பயன்படுத்த முடியாது என்று கூறியது. தனக்கு வழங்கப்பட்ட நோட்டீஸிற்கு எதிராக கோஸ்வாமி மேல்முறையீடு செய்தாரா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

பொதுவாக பயன்படுத்தப்படும் அத்தியாய நடவடிக்கைகள் எவை?

பொதுவாக, எந்தவொரு நபரும் சமாதானத்தை மீறுவதாகவோ அல்லது பொது அமைதியைத் தொந்தரவு செய்யவோ அல்லது எந்தவொரு தவறான செயலையும் செய்யக்கூடும் என்ற தகவலையோ ஏ.சி.பி பெறும்போது, அத்தகைய நபருக்கு ஒரு பத்திரத்தை நிறைவேற்ற உத்தரவிடக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வேண்டும்.  CrPC 107வது பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்க ஒரு நபருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் கூட தேவையில்லை (பிற நிகழ்வுகளில் அமைதியைக் காக்கும் பாதுகாப்பு). இப்படியான சூழலில் ஒரு வருடத்திற்கு பத்திரம் கையெழுத்திடப்படுகிறது. பிரிவு 110 இன் கீழ், ஏற்கனவே குற்றம் செய்த குற்றவாளிக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது என்றால் அவர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கேட்கப்படுகிறார்.

இத்தகைய அறிவிப்புகள் ஏன் அத்தியாய நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன? இது சட்டபூர்வமான சொல்லா?

இது சட்டப்பூர்வ சொல் அல்ல. அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றங்களைத் தடுப்பது தொடர்பான அனைத்து பிரிவுகளும் ஒரே அத்தியாயத்தின் கீழ் வருவதால், இது “அத்தியாய நடவடிக்கைகள்” என்று அழைக்கப்படுகிறது, பின்னர் இந்த இயற்கையின் செயல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Arnab Goswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment