உக்ரைனுடன் நடந்து வரும் மோதலில் முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறுகையில், ஹைப்பர்சோனிக் ஏரோபாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கின்சல் ஏவியேஷன் ஏவுகணை அமைப்பு, இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள டெலியாட்டின் கிராமத்தில் ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய அன்டர்கிரவுண்ட் வெர்ஹவுஸை அழித்தது என தெரிவித்தார்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன?
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்தது ஒலியைவிட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன்கொண்டது மட்டுமின்றி சூழ்ச்சி செய்யக்கூடியது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சூழ்ச்சித்திறன் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையில் இருந்து அதை வேறுபடுத்துகிறது. பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறிப்பிட்ட பாதையில் மட்டுமே பயணிக்கக்கூடியது. ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணை பாலிஸ்டிக் போல் பாதையை பின்பற்றாமல், இலக்கை சூழ்ச்சிச்செய்தும் அழிக்கக்கூடியது.
ஹைப்பர்சோனிக் கிளைடர் ஏவுகணை (HGV), ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை என இரண்டு வகையான ஹைப்பர்சோனிக் ஆயுத அமைப்புகள் உள்ளன. இலக்கை எட்டுவதற்கு முன்பு ராக்கெட்டிலிருந்து ஏவப்படுவதே hysonic glide vehicle. இலக்கை எட்டிய பின் அதி வேக engine என சொல்லப்படும் scramjet விருந்து ஏவப்படுவதே hypersonic cruise Missile.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் நன்மைகள் என்ன?
அமெரிக்க மூலோபாயக் கட்டளையின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜான் ஹைட்டனின் கூற்றுப்படி, ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் தொலைதூர, பாதுகாக்கப்பட்ட அல்லது நேர நெருக்கடியான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பதிலளிக்கக்கூடிய, நீண்ட தூர தாக்குதல் விருப்பங்களில் இயக்க முடியும்.
வழக்கமான ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் கடினமான இலக்குகள் அல்லது அன்டர்கிரவுண்ட் பகுதிகளை அழித்திட கைனிடிக் எனர்ஜி ஆற்றலை உபயோகிக்கிறது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை விமானத்தில் கண்டறிய முடியுமா?
அக்டோபர் 2021 இல் வெளியிடப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பற்றிய Congressional Research Service அறிக்கையின்படி, ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் வேகம், சூழ்ச்சித்திறன், குறைந்த உயரம் ஆகியவற்றின் காரணமாக கண்டறிதல் மற்றும் பாதுகாப்பிற்கு சவால் விடக்கூடும். தரை அடிப்படையிலான ரேடார்கள் அல்லது டெரஸ்ட்ரியல் ரேடார்களால் ஆயுதம் பறக்கும் வரை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கண்டறிய முடியாது. இந்த தாமதம், ஏவுகணையை இடைமறிக்க முயற்சியை கடினமாக்குகிறது.
அமெரிக்காவின் தற்போதைய ஏவுகணைப் பாதுகாப்பிற்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மாதிரியானது, ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு பதிலளிக்கும் மற்றும் நடுநிலையாக்கும் போதுமான தரவுகளை விரைவாக செயலாக்க இயலாது என்று சில ஆய்வாளர்கள் கூறியதாக காங்கிரஸின் அறிக்கை குறிப்பிடுகிறது
எந்த நாடுகளில் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் உள்ளன? எந்த நாடு தயாரித்து வருகின்றன?
2018 ஆம் ஆண்டில் தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ‘கின்சல்’ அல்லது டாகர் என அறிவித்த ரஷ்யா, உக்ரைனுடனான போரில் முதல்முறையாக பயன்படுத்தியுள்ளது. ரஷ்யா தவிர, சீனாவும் இந்த ஆயுத அம்சத்தை கையில் வைத்துள்ளது. ஆகஸ்ட் 2021 இல் இலக்கை அடையும் முன், உலகை சுற்றி வர இரண்டு முறை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்ய கின்சல் ஏவுகணையானது, அதன் இஸ்கந்தர் ஏவுகணையின் மாற்றம் என கூறப்படுகிறது.இந்த ஏவுகணையானது, ஜூலை 2018 இல் MiG-31 விமானத்தில் இருந்து 500 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி சோதனை செய்யப்பட்டது.
கின்சல் MiG-31 இல் இருந்து ஏவப்படும் போது 1200 மைல்கள் வரையிலான வரம்பில் Mach 10 இன் அதிகபட்ச வேகத்தைக் கொண்டிருந்ததாக ரஷ்ய ஊடக அறிக்கைகள் தெரிவித்திருந்தன.
இந்த ஏவுகணையை Su-34 நீண்ட தூரப் போர் விமானத்தில் பயன்படுத்துவதாகவும், Tu-22M3 மூலோபாய குண்டுவீச்சில் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2021 இல் லாங் மார்ச் ராக்கெட் மூலம் கிளைடர் ஏவுகணையை சீனா பரிசோதனை செய்தது. னா தன்னிடம் இருக்கும் DF-21 மற்றும் DF-26 ஏவுகணைகளுடன் இணைத்து HGV சோதனையை நடத்துவதாக கூறப்படுகிறது.
சீனாவும் 1200 மைல்கள் வரம்பில் DF-ZF HGV-ஐ விரிவாகப் பரிசோதித்து, 2020இல் களமிறக்கியது. அந்த அறிக்கையின்படி, ஆகஸ்ட் 2018 இல் அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஸ்டார்ரி ஸ்கை-2 (ஜிங் காங்- 2) சோதனையை வெற்றிகரமாக முடித்தது.
அமெரிக்காவில், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் அதன் கடற்படையின் conventional Prompt Strike திட்டத்தின் கீழ் மற்றும் ராணுவம், விமானப்படை மற்றும் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை (DARPA) மூலம் உருவாக்கப்படுகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் திட்டங்களின் மேம்பட்ட கட்டத்தில் இருக்கும் அதே வேளையில், இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன.
இந்திய ஹைப்பர்சோனிக் ஏவுகணை திட்டத்தின் நிலை என்ன?
இந்தியா தனது ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர் வாகனத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே இரட்டை திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை உருவாக்கி வருவதாகவும், ஜூன் 2019 மற்றும் செப்டம்பர் 2020 இல் Mach 6 ஸ்க்ராம்ஜெட் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்ததாகவும் காங்கிரஸின் அறிக்கை கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil