பைக்கில் குழந்தைகள் பயணிக்கும் போது என்னென்ன நடவடிக்கைகள் தேவை? வரைவு வெளியிட்ட அரசு

இருசக்கர வாகன ஓட்டிகள், பில்லியனில் அமரும் 9 மாதக் குழந்தை முதல் 4 வயது குழந்தைகள் வரை அனைவரும் க்ராஷ் ஹெல்மெட் அல்லது சைக்கிள் ஓட்டும் போது அணியும் தலைக்கவசங்களை அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்

Avishek G Dastidar

What are the draft rules notified by Centre for carrying a child on motorcycle? இருசக்கர வாகன ஓட்டிகள், பில்லியனில் அமரும் 9 மாதக் குழந்தை முதல் 4 வயது குழந்தைகள் வரை அனைவரும் க்ராஷ் ஹெல்மெட் அல்லது சைக்கிள் ஓட்டும் போது அணியும் தலைக்கவசங்களை அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே போன்று நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை வண்டியில் வைத்து அழைத்துச் செல்லும் போது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும் என்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மத்திய மோட்டர் வாகன சட்டம் (சி.எம்.வி.ஆர்) 1989 சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு வரைவு அறிவிப்பை கொண்டு வருவது இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் வாகனங்களை இயக்குவதற்கான சட்ட கட்டமைப்பில் மேற்கூறிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்த இந்த வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விதி ஏன் கொண்டுவரப்படுகிறது?

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019 -ன் விதிகளில் இத்தகைய சட்ட விதிகளை கட்டாயமாக்கியது. தற்போது CMVR சட்டத்தின் பிரிவு 136இல், துணை விதி 6க்குப் பிறகு இந்த விதிகள் இணைக்கப்படும்.

0-4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஏற்றிச் செல்லும் போது, பின்னாள் அமர்ந்து குழந்தையை வைத்திருக்கும் நபர் பில்லியனுடன் காண்ட்ராப்ஷன் மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது குழந்தை வண்டியில் இருந்து கீழே விழுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது என்று இந்த விதி கூறுகிறது.

Safety harness என்பது குழந்தை கட்டாயம் அணிய வேண்டிய பெல்ட்டாகும். எளிதில் அளவை சரி செய்யக் கூடிய வகையில் இருக்கும் ஸ்ட்ராப்கள் வெஸ்ட்டுடன் இணைக்கப்படு தோள்பட்டை வழியாக வாகனத்தை ஓட்டும் நபர் இதனை அணிந்திருக்க வேண்டும். இதன் மூலம் வாகனம் ஓட்டும் நபரின் முதுகோடு, குழந்தையின் உடல் மேற்புறம் நன்கு பொருந்தி பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வசதியாக இருக்கும்.

இந்த பாதுகாப்பு கவசம் எப்படி இருக்க வேண்டும்?

இந்திய தரநிர்ணய பணியகம் இந்த பாதுகாப்பு கவசம் எப்படி இருக்கும் என்று அறிவிக்கும் வரை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்த பாதுகாப்பு கவசம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறை செய்துள்ளது.

இது இலகுரகமாக, எளிதில் அளவுகளை சரி செய்யக் கூடியதாக, நீர் புகாத, நீடித்ததாக இருக்க வேண்டும். அதிக அடர்த்தி நுரை கொண்ட கனமான, மிக கனமான பல் இழை நைலானால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் 30 கிலோ எடையை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மோட்டர் சைக்கிளின் பின்பக்கத்தில் அமர்ந்து பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வயது ரீதியாக பாதுகாப்பு ஏற்பட்டை மேற்கொள்ளும் மிக சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்த விதிமுறைகளை மோட்டர் வாகன சட்டம் 2019-ல் இணைப்பதற்கு முன்பு இது தொடர்பாக அரசு பலதரப்பட்ட துறைசார் வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு அறிக்கைகளை ஆய்வு செய்துள்ளது.

பிரச்சனை எவ்வளவு பெரியது?

2014ம் ஆண்டு சாலை பாதுகாப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சாலைப் போக்குவரத்துக் காயங்கள் 1-4 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான 15 முக்கிய காரணங்களில் ஒன்றாகவும், 5 முதல் 9 வயது குழந்தைகளின் இறப்புக்கான இரண்டாவது பொதுவான காரணங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் படி, 2004ம் ஆண்டில் கார்களில் செல்பவர்களைக் காட்டிலும் 35 மடங்கு மோட்டர் சைக்கிளில் பயணப்பவர்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளது என்றும், அதில் 8 மடங்கு காயம் அடையும் வாய்ப்புகள் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் ஒரு காரை விட மோட்டார் சைக்கிளில் மோதி 20 மடங்கு அதிகமாக காயமடைகிறார். வாகனம் ஓட்டும் நபர், வாகனம் ஓட்டும் பாணி மற்றும் அவர் பயன்படுத்தும் பைக் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் தொடர்பும் விபத்திற்கு முக்கிய பங்காக அமைந்துள்ளது.

இதில் சில முரண்பட்ட கருத்துகளும் உள்ளன. 2014ம் ஆண்டு ஜான்ஸ் ஹோப்கின்ஸ் சர்வதேச விபத்து ஆய்வு அமைப்பு மற்றும் ஐ.ஐ.டி. டெல்லியின் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் விபத்து தடுப்பு திட்டத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் குழந்தைகள் காயமடையும் பிரச்சனை உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

44 நாடுகள் மற்றும் 5 இந்திய நகரங்களில் இருந்து பெறப்பட்ட இறப்பு விகிதம் மற்றும் 17 நாடுகளில் உள்ள மருத்துவமனை தரவுகள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மோட்டர் வாகன பயன்பாடுகள் அதிகரித்த போது மோட்டர்சைக்கிள் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளில் குழந்தைகள் காயம் அடையும் நிகழ்வும் அதிகரித்துள்ளது ஆனால் மிகவும் குறைந்த விகிதத்தில். மோட்டார் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகன விபத்துகளால் குழந்தைகள் முன்பு கருதப்பட்டதை விட குறைவான ஆபத்தில் இருக்கலாம் என்றும், நிச்சயமாக பாதசாரிகளை விட குறைவான ஆபத்தில் இருக்கலாம் என்றும் எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 11,168 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What are the draft rules notified by centre for carrying a child on motorcycle

Next Story
ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?Chennai Today Weather NEM latest updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com