Advertisment

Explained : முப்படை தலைமைத் தளபதியின் அதிகாரம் என்ன?

இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு முப்படை தலைமைகளின் தளபதி  பொறுப்பா?  இல்லை, இல்லவே இல்லை. பாதுகாப்பு செயலாளர் பற்றி கேள்விபட்டதுண்டா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
what is the role of cds, general bipin rawat, general bipin rawat cds,

what is the role of cds, general bipin rawat, general bipin rawat cds,

ஜெனரல் பிபின் ராவத் புத்தாண்டு தினத்தில் முதல் முப்படை தளபதியாக  (சி.டி.எஸ்) பொறுப்பேற்றவுடன், பாதுகாப்பு அமைச்சகத்தில் இராணுவ விவகாரத் துறை என்கிற ஒரு புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டது .

Advertisment

முப்படை தலைமைகளின் தளபதிக்கும் , மத்திய பாதுகாப்பு  மந்திரிக்கும்  இடையிலான உறவின் தன்மை என்னவாக இருக்கும்?

முப்படை தளபதியான பிபின் ராவத்  இரண்டு தொப்பிகளை அணிந்திருப்பார் . முப்படைத் ஜெனரல்களை உறுப்பினர்களாகக் கொண்ட பணியாளர்கள் குழுவின் (Chiefs of Staff Committee) நிரந்தரத் தலைவராகவும், புதிதாக பாதுகாப்பு அமைச்சகத்தில் உருவாக்கப்பட்ட  இராணுவ விவகாரத் துறையின் (டி.எம்.ஏ) தலைவராகவும் இருப்பார். இதில், பிபின் ராவத்தின் முந்தைய பணி  இராணுவம் தொடர்புடையதாகவும், பிந்தையது அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கமாகும்.  இராணுவ விவகாரத் துறையின் தலைவர்  பொறுப்பில் இருப்பதால், அமைச்சகத்திற்குள் தான் அவரது முக்கிய பொறுப்புகள் நிறைவேற்றப்படும்.

 

நமது இந்தியா பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வேறு எத்தனை துறைகள் உள்ளன, இதுவரை இராணுவ விவகாரத் துறையை யார் கவனித்து வந்தனர்?

அமைச்சகத்தில் ஏற்கனவே நான்கு துறைகள் இருக்கின்றன.

அவைகள்

  1. பாதுகாப்புத் துறை;
  2. பாதுகாப்பு உற்பத்தித் துறை;
  3. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை;        மற்றும்
  4. முன்னாள் படைவீரர் நலத்துறை.

அவை ஒவ்வொன்றும் ஒரு செயலாளரால் வழி நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு செயலாளரின் கீழ் இயங்க வந்த பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முதுகெலும்பாக  உள்ளது.  இது நாட்டின் பாதுகாப்பு கொள்கை, கொள்முதல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் கவனித்து வருகிறது.

புதுதாய் உருவாக்கப்பட்ட இராணுவ விவகாரத் துறையில் சொல்லப்பட்டிருக்கும் கடமைகள், பாதுகாப்புத் துறையால் கவனிக்கப்பட்டு வந்தது.  இவரே, பாதுகாப்பு அமைச்சகத்தின்  பொறுப்பு செயலாளராகவும் உள்ளார்.

இனிவரும் காலங்களில், இராணுவ விவகாரங்கள் தொடர்பான விவகாரங்கள் எல்லாம் புதுதாய் உருவாக்கபப்ட்ட இராணுவ விவகாரத் துறையின் கீழ் வரும். பாதுகாப்புத் துறை, இந்திய நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பெரிய கேள்விகளை மட்டும் கையாளும்.

ஒரு எடுத்துக்காட்டாக, முத்தரப்பு இராணுவ பயிற்சி நிறுவனங்கள், இராணுவ விவகாரத் துறையின் கீழும் , ஐ.டி.எஸ்.ஏ மற்றும் என்.டி.சி போன்ற அமைப்புகள் பாதுகாப்புத் துறையின் கீழ் வரும்.  ஏனெனில், இராணுவ விடயங்களை அதன் செயல்பாடுகள் பரந்த அளவில் உள்ளது.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை - மத்திய பாதுகாப்பு அமைச்சக துரையின் கீழ்  இல்லையா?

இல்லை. ஆயுதப்படைகள் அமைச்சகத்தின் இணைக்கப்பட்ட அலுவலகங்கள் மட்டும் தான். அவர்கள் இதுவரை பாதுகாப்புத் துரையின் வாயிலாக செயல்பட்டுவந்தனர் . ஆனால் தற்போது  டி.எம்.ஏ-வின் வரம்பிற்குள் வருகிறார்கள்.

இணைக்கப்பட்ட அலுவலகங்கள் என்றால் என்ன?  

இணைக்கப்பட்ட அலுவலகங்கள்,பொதுவாக அவை இணைக்கப்பட்டுள்ள துறை ( தற்போது, இராணுவ விவகாரத் துறை) வகுக்கின்ற கொள்கைகளை செயல்படுத்துவதற்கு தேவையான நிர்வாக கட்டளையை வழங்கும். இந்தியாவின் ஆயுதப் படைகள் இராணுவ விவகாரத் துறைக்கு (டி.எம்.ஏ) தொழில்நுட்ப தகவல்களின் களஞ்சியமாக செயல்படுகின்றன. மேலும், தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து இராணுவ விவகாரத் துறை அறிவுறுத்துகின்றன.

ரத்தின சுருக்கமாக, நமது பாதுகாப்பு அமைச்சரின் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தும் நிர்வாக அதிகாரிகளாக நமது ஆயுதப் படைகள் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) உள்ளது.

முப்படை ஜெனரல்களுக்கும்  முப்படைத் தளபதி  கட்டளையிடுவாரா ?  மேலும் அரசாங்கத்தின் ஒற்றை புள்ளி இராணுவ ஆலோசகராக முப்படைத் தளபதி இருப்பாரா?

இல்லை, இல்லை.

முப்படை தொடர்பான  விஷயங்களில் மட்டுமே பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை இராணுவ ஆலோசகராக முப்படை தளபதி செயல்படுவார். இதுவரை நடைமுறையில் இருந்ததை போலவே ,மூன்று படைத் ஜெனரல்களும் அந்தந்த படை தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து  பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை கூறுவார்கள்.

எந்தவொரு இராணுவ கட்டளையையும் முப்படை தளபதி  கொடுக்கமாட்டார் என்பதையும் அரசாங்கம் வெளிப்படையாக தெளிவுபடுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இதில் சின்ன சூழ்ச்சி என்னவென்றால் -  

முப்படைத் தளபதி தலைமையிலான தலைமைப் பணியாளர்கள் குழுவில் (Chiefs of Staff Committee) மூன்று முப்படைத் தலைவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தியாவின் ஆயுதப்படை தொடர்பான விவகாரங்கள் பிரத்தியோகமாக முப்படைத் தளபதி  தலைமையிலான இராணுவ விவகாரத் துறையின் கீழ் வருவதால், முப்படை ஜெனரல்களின் பதவி உயர்வுகள், நியமனம் மற்றும் ஒழுக்காற்று விஷயங்கள் போன்ற விஷயங்களில் முப்படைத் தளபதியின் செல்வாக்கு அதிகமாகும் .

முப்படைத் ஜெனரல்கள் தங்களது முக்கிய அதிகாரங்கள் அல்லது பணிகளை முப்படைத் தளபதியிடம்  இழந்துவிட்டார்களா?

உண்மையில் இல்லை. அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது உட்பட முப்படை ஜெனரல்களின் அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. எந்த உரிமையும் முப்படைத் தளபதிக்கு  மாற்றப்படவில்லை. ஒரே விஷயம் என்னவென்றால், தலைமைப் பணியாளர்கள் குழுவின் (Chiefs of Staff Committee) தலைவரின் பங்கு. இதுநாள் வரையில்,முப்படை ஜெனரல்களின் மூத்த-மிகுத் தலைவரின் தலைமையில் இருந்தது.

Chiefs of Staff Committee என்றால் என்ன ?

தற்போது, முப்படைத் தளபதி இதன் நிரந்தரத் தலைவராக மாற்றப்பட்டிருக்கிறார் (permanent Chairman of the Chiefs of Staff Committee). இந்த பதவி, தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களால் ஆதரிக்கப்படும் (Headquarters Integrated Defence Staff).

எவ்வாறாயினும், முப்படைத் தளபதிக்கு ஒரு காலவரையறை நியமிக்கப்பட்டுள்ளது.  மூன்று ஆண்டுகளுக்குள் ஆயுத செயல்பாடுகள், தளவாடங்கள், போக்குவரத்து, பயிற்சி, தகவல்தொடர்புகள், பழுதுபார்ப்பு ஆகியவற்றில் முப்படைகளை ஒருங்கிணைக்கும் கூட்டுறவைக் கொண்டு வரவேண்டும். இதனால், தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் பொறுப்புகள் குறைய  வழிவகுக்கும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு முப்படை தலைமைகளின் தளபதி  பொறுப்பா?

இல்லை, இல்லவே இல்லை.

கடந்த 30ம் தேதி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின் படி,  பாதுகாப்பு செயலாளர் தலைமையின் கீழ் இயங்கும் பாதுகாப்புத் துறை 'இந்தியாவின் பாதுகாப்புக்கு பொறுப்பாகும்'.

பாதுகாப்புக் கொள்கை, போரின் காலங்களில் செயயப்படக்கூடிய அனைத்து உகந்த செயல்பாடுகளும் பாதுகாப்புத் துறையின் கீழே உள்ளது.

Bipin Rawat Army National Defence Academy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment