இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. ஞாயிற்றுக் கிழமை அன்று இரண்டு எம்.ஆர்.எஸ்.ஏ.எம். (Medium Range Surface to Air Missile) ஏவுகணைகளை ஒடிசா கடற்கரையில் அமைந்திருக்கும் சாந்திப்பூர் சோதனை மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி சாதனை புரிந்தது. எம்.ஆர்.எஸ்.ஏ.எம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.
எத்தகைய சோதனைகள் ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்டது?
அதிக வேகத்தில் வானில் செல்லும் இலக்குகளை அழித்து தாக்கும் சோதனையே மேற்கொள்ளப்பட்டது. நேற்று சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள் தங்களின் இலக்கை தாக்கி அழித்ததாக கூறப்பட்டுள்ளது. முதல் சோதனை நடுத்த உயரத்தில், மிக நீண்ட இலக்கை இடைமறித்து தாக்குதல் செய்வது. இரண்டாவது சோதனை குறுகிய தூர இலக்கை தாக்கி அழிப்பது. இந்த சோதனைகளும் இந்திய ராணுவ பயனர் சோதனைகள் ஆகும்.
எம்.ஆர்.எஸ்.ஏ.எம். என்றால் என்ன?
இது தரையில் இருந்து விண்ணில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையாகும். டி.ஆர்.டி.ஒ மற்றும் இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து இதனை உருவாக்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய வான்வெளி பாதுகாப்பு கருவிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும். இந்த எம்.ஆர்.எஸ்.ஏ.எம். ஆயுத அமைப்பு பல்முனை செயல்பாட்டு ரேடார், மொபைல் லாஞ்சர் அமைப்பு மற்றும் பிற ஏவுதள வாகனங்களை உள்ளடக்கியது. அதே போன்று கடற்ப்படை மற்றும் ராணுவ தேவைகளுக்கு பிரத்யேக ஏவுகணைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
மொபைல் லாஞ்சர் மூலம் எட்டு கேனிஸ்டரைஸ்டு ஏவுகணைகளை கொண்டு செல்லவும், வைக்கவும் மற்றும் ஏவ முடியும். இவற்றை பயன்படுத்தி ஒரே முறை ஏவுகணைகள் அனைத்தையும் ஏவவும் முடியும் அல்லது செங்குத்தாக சிறிது இடைவெளி விட்டு பின் மீண்டும் ஏவுகணைகளை ஏவவும் முடியும்.
ஏவுகணையின் மேலாண்மை அமைப்பு ரேடாரைப் பயன்படுத்தி இலக்கைக் கண்காணிக்கவும் சரியாக அடையாளம் காணவும், அதிலிருந்து தூரத்தைக் கணக்கிட்டு, இடைமறிப்பதில் முடிவெடுப்பதற்கான அனைத்து தகவல்களையும் கமாண்டருக்கு வழங்குகிறது. 4.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை சுமார் 275 கிலோ எடை கொண்டது. சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் இதற்கு துடுப்புகள் மற்றும் கேனார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை ஒரு திடமான உந்துவிசை அமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணை அதிகபட்சமாக மாக் 2 வேகத்தில் செல்லக்கூடியது (ஒலியின் வேகத்தை விட இரண்டு மடங்கு). இது 70 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil