Storage conditions for Pfizer Biontech vaccines Tamil News : ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (European Medicines Agency (EMA)), கடந்த திங்களன்று ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியின் அங்கீகரிக்கப்பட்ட சேமிப்பக நிலைமைகளை மாற்றப் பரிந்துரைத்தது. இது ஐரோப்பிய ஒன்றியம் (European Union (EU)) முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் இந்த தடுப்பூசிகளைக் கையாளும் முறையை மாற்றியமைத்தது.
பிப்ரவரியில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், தடுப்பூசியின் நீர்த்த பாட்டில்களை வழக்கமான வெப்பநிலையில் இரண்டு வாரங்கள் வரை சேமிக்க அனுமதித்தது. சமீபத்தில், அமெரிக்காவும் சிங்கப்பூரும் 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்த ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தன.
இந்த தடுப்பூசிகளின் சேமிப்பில் என்ன மாற்றம்?
புதிய பரிந்துரைகளுடன், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் திறக்கப்படாத பாட்டில் ஒரு மாதம் வரை 2-8 டிகிரி செல்சியஸுக்கு இடையில் சேமிக்க முடியும். அதாவது, ஆழமான ஃப்ரீசரிலிருந்து வெளியேற்றியவுடன் அதை வழக்கமான குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்க முடியும். இதற்கு முன், திறக்கப்படாத தடுப்பூசி பாட்டிலை ஒரு வழக்கமான குளிர்சாதனப் பெட்டியில் ஐந்து நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.
தடுப்பூசிகளை சேமிப்பதிலும் கையாளுவதிலும் இந்த அதிகரித்த நேரம், ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி இருப்பில் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து சில சிக்கல்களை எதிர்கொண்டது. ஏஜென்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட கூடுதல் தரவு மதிப்பிடப்பட்ட பின்னர், இந்த மாற்றம் அங்கீகரிக்கப்பட்டதாக EMA கூறியுள்ளது.
எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை ஏன் இத்தகைய குறைந்த வெப்பநிலையில் சேமிக்க வேண்டும்?
சயின்ஸ் நியூஸ் கட்டுரையின் படி, எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் வேறு சில கோவிட் -19 தடுப்பூசிகளைக் காட்டிலும் மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்கப்படலாம். ஏனெனில் டி.என்.ஏவை விட ஆர்.என்.ஏ மிகக் குறைவான நிலைத்தன்மை கொண்டது. அவற்றின் மூலக்கூறுகள் சர்க்கரையால் ஆனவை. ஆர்.என்.ஏவின் ஒப்பீட்டு உறுதியற்ற தன்மைக்கு இரண்டாவது காரணம், அதன் வடிவம். இது ஒரு ஒற்றை இழை வடிவத்தில் இருக்கும். ஆனால் டி.என்.ஏ, இரட்டை அடுக்கு ஹெலிக்ஸ் வடிவத்தில் இருக்கும்.
BNT162b2 எனப்படும் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி, ஆரம்பத்தில் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்காகக் குறிக்கப்பட்டது மற்றும் குறைந்தது 21 நாட்கள் இடைவெளியில், தலா 30 μg அளவை இரண்டு டோஸ்களாக நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி நபரின் மேல் கையில் செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?
இந்த தடுப்பூசியின் இன்றியமையாத பொருட்களில் ஒன்று மெசஞ்சர் ஆர்.என்.ஏ அல்லது எம்.ஆர்.என்.ஏ. இது, SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதம் என்று அழைக்கப்படுவதை உருவாக்குவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. மேலும் இது, வைரஸ் உடலில் உள்ள உயிரணுக்களுடன் பிணைக்கப்படுவதை எளிதாக்குகிறது. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்டவுடன், ஸ்பைக் புரதத்தின் நகல்களை உருவாக்க உடலின் செல்களை அறிவுறுத்துகிறது. தனிநபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டல ரெஸ்பான்ஸை தூண்டுவதே இதன் முதன்மை செயல்.
ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது?
இந்த தடுப்பூசியின் இன்றியமையாத பொருட்களில் ஒன்று மெசஞ்சர் ஆர்.என்.ஏ அல்லது எம்.ஆர்.என்.ஏ. இது SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதம் என்று அழைக்கப்படுவதை உருவாக்குவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. மேலும் இது, வைரஸ் உடலில் உள்ள உயிரணுக்களுடன் பிணைக்கப்படுவதை எளிதாக்குகிறது. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்டவுடன், இந்த ஸ்பைக் புரதத்தின் நகல்களை உருவாக்க உடலின் செல்களை அறிவுறுத்துகிறது. தனிநபர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டல ரெஸ்பான்ஸை தூண்டுவதே இதன் முதன்மை நோக்கம்.
ஆகையால், தடுப்பூசி இந்த ரெஸ்பான்ஸை தூண்ட முடிந்தவுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தால் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும். இதன் மூலம் தனிநபரை அது பாதுகாக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil