ஹைதராபாத் பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை காவல்துறையினரால் என்கவுண்டரில் சுடப்பட்டனர். போலீஸின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்களும், மூத்த அதிகாரிகளும் பாராட்டினாலும், சட்டபூர்வமான தன்மை, தனியுரிமை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன
நீதிக்குப் புறம்பான அல்லது "என்கவுண்டர்" கொலைகள் பல தசாப்தங்களாகவே கேள்வியாக்கப்பட்ட ஒரு போலீஸ் நடைமுறையாகும். எனவே, இத்தகைய நடவடிக்கையின் போது காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய முறையான நடைமுறைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையமும் (என்.எச்.ஆர்.சி) உச்சநீதிமன்றமும் பலமுறை தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றன.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்:
“காவல்துறையினர் நடத்தப்படும் போலி என்கவுண்டர்கள் அதிகரித்து வருவதாக பொது மக்களிடமிருந்தும், அரசு சாரா நிறுவனங்களிடமிருந்தும் ஆணையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருகின்றது" என்று மார்ச் 1997ம் ஆண்டு, என்.எச்.ஆர்.சி.யின் தலைவராக இருந்த நீதிபதி எம்.என்.வெங்கடச்சலியா அனைத்து முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார்
1993-94ல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த இந்த நீதிபதி வெங்கடச்சலியா ஒரு தீர்ப்பில், நமது அரசியலமைப்பில், மற்றொரு உயிரைப் பறிப்பதற்கான எந்தவொரு உரிமையும் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை , காவல்துறை தன்னுடைய செயலினால், ஒருவரைக் கொள்ளப்படுவாரானால், அது மரணத்தை விளைவிக்கும் குற்றமாக தான் பொருள்கொள்ளப்படும் என்று தெரிவித்தார் (சட்டத்தால் இந்த கொலை குற்றமில்லை என்று நிருபீக்கும் வரையில்)
இரண்டு சூழ்நிலைகளில் மட்டும், காவல்துறையின் கொலை குற்றமாக கருதப்படாது (i) தன்னுடைய (காவல் துறையினரின்) தனியுரிமை பாதுகாப்புக்காக மரணத்தை ஏற்படுத்தும் போதும், (ii) கிரிமினல் குற்றவியல் சட்டம் பிரிவு 46 ன் கீழ்," மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு ( குற்றம் சாட்டப்பட்ட) நபரை கைது செய்ய வேண்டிய அவசியம் இருக்குமானால், தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம்.அந்த அதிகாரம் குற்றம் சாட்டபட்டவரின் உயிரைப் பறிக்கும் வரையிலும் கூட இருக்கலாம்
இதனை மனதில் வைத்துக் கொண்டு, என்.எச்.ஆர்.சி " என்கவுண்ட்டரால் மரணம் நிகழும் சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் பின்பற்றும் வழிகாட்டுதல்களை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டது"
அவை:
* “ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பாளர்… காவல் துறையினருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையிலான மோதலில் ஏற்பட்ட இறப்புகள் பற்றிய தகவல்களைப் பெற்ற உடனே, பொறுப்பாளர் அந்த தகவலை பொருத்தமான பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
* “ நிலையத்தின் பொறுப்பாளரால் பெறப்பட்ட தகவல்கள் குற்றத்தினை சந்தேகிக்க போதுமானதாக கருதப்படும், மேலும் மரணத்திற்கு வழிவகுக்கும் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், * “நடுநிலைமை காரணமாக மாநில சிஐடி போன்ற வேறு சில சுயாதீன விசாரணை நிறுவனங்களிடம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது பொருத்தமானது.
* "விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டால், இறந்தவரின் சார்புடையவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கேள்வி, தண்டனைக்குரிய வழக்குகளில் பரிசீலிக்கப்படலாம்."
அதைத் தொடர்ந்து, மே 2010ம் ஆண்டில் , அப்போதைய என்.எச்.ஆர்.சி செயல் தலைவர் நீதிபதி ஜி. பி. மாத்தூர், 1997 கடிதத்தின் முக்கிய அம்சத்தை மீண்டும் எடுத்துரைத்தார் , மேலும் "ஒரு நபரின் உயிரைப் பறிக்க காவல்துறைக்கு உரிமை இல்லை" என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பெரும்பாலான மாநிலங்கள் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை உண்மையான மனப்பான்மையுடன் பின்பற்றவில்லை என்பதை கண்டிந்த என்.எச்.ஆர்.சி 2010ம் ஆண்டில் போலி என்கவுன்ட்டர் தொடர்பான புதிய நடைமுறைகளைச் சேர்த்தது
* “ மரணத்தை விளைவிக்கும் குற்றமாக கருதப்படும் குற்றத்தை செய்தார் என்று காவல்துறையினருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட புகார் அளிக்கப்படும்போதெல்லாம்… , இது தொடர்பான எஃப்.ஐ.ஆர் ஐபிசியின் பொருத்தமான பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்…”
* “ மாஜிஸ்திரேட் விசாரணையின் கீழ் போலீஸ் நடவடிக்கையின் போது நிகழும் அனைத்து மரண வழக்குகளிலும் விசாரிக்கப்பட வேண்டும் . இதற்கு முன்னிரிமைக் கொடுத்து மூன்று மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்…”
* “மாநிலங்களில் காவல்துரையினரால் நடக்கும் மரணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மாவட்ட காவல்துறை ஆணையர் மூலம் மனித உரிமைகள் ஆணையத்திடம் 48 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த உத்தரவுகள் :
'சிவில் லிபர்ட்டிஸ் & அன்ர் vs ஸ்டேட் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் ஆர்ஸ்' (செப்டம்பர் 23, 2014) இல், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதி ரோஹிண்டன் எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒரு விரிவான 16 அம்ச நடைமுறைகளை வெளியிட்டது. காவல்துறையினரால் நடக்கும் மரணங்கள் தொடர்பாக சுயாதீனமான விசாரணைக்கு வழிவகுத்தது.
இந்த உத்தரவுகளில் சில:
"குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் (அல்லது) குற்றவாளிகள் தொடர்பான எந்தவொரு புலனாய்வு தகவல்களை காவல்துறையினர் பெறும்போதெல்லாம், அந்த தகவலை ஏதேனும் ஒரு வடிவத்தில் (முன்னுரிமையாக டைரியைக் கருதலாம் ) அல்லது சில மின்னணு வடிவத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
"மேலே சொல்லப்பட்டுள்ளது போன்று , புலனாய்வு அமைப்பின் தகவலினால், என்கவுன்டர் நடைபெறுகிறது, அதன் விளைவாக, மரணம் ஏற்படுகிறது என்றால் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 157 ன் கீழ் எந்தவொரு தாமதமும் இன்றி நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
சம்பவம் / என்கவுண்டர் குறித்து ஒரு சுயாதீன விசாரணை ஒரு மூத்த அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் சிஐடி அல்லது மற்றொரு காவல் நிலையத்தின் குழுவினரால் நடத்தப்படவேண்டும் ."
"குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 176ன் கீழ் துப்பாக்கிச் சூட்டின் போது நிகழும் அனைத்து மரண வழக்குகளிலும் மாஜிஸ்திரேட்டால் விசாரிக்கப் படவேண்டும். மேலும் அதன் அறிக்கை பிரிவு 190 ன் கீழ் அதிகார வரம்பைக் கொண்ட நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்."
விசாரணையில் தீவிர சந்தேகம் இல்லாத வரையில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிடத் தேவையில்லை. எவ்வாறாயினும், எந்தவொரு தாமதமும் இன்றி சம்பவத்தின் தகவல்களை என்.எச்.ஆர்.சி அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.\
உச்சநீதிமன்றத்தின் இந்த மேலே குறிபிட்டுள்ள விதிமுறைகளை அரசியலமைப்பு 141 பிரிவின் கீழ் வெளியிட்டதால் இது இந்தியாவின் சட்டமாக கருதப்படும். போலீஸ் என்கவுண்டர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் கண்டிப்பாக இந்த விடுமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும்" என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.