Advertisment

'ப்ளூ டிக்' பயனர்களுக்கு மட்டும்தான் ட்விட்டரா? எலான் மஸ்க் அறிவித்த புதிய விதிகள் என்ன?

ஏப்ரல் 15-ம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட் பயனர்களுக்கு மட்டும் 'For You' பரிந்துரைகள் கிடைக்கும் என்றும் ப்ளூ டிக் பயனர்கள் மட்டும் தான் ட்விட்டர் வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியும் என்றும் புதிய விதியை சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Twitter Blue check

Twitter Blue check

உலகப் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள், புதிய விதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஏப்ரல் 15-ம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட் பயனர்களுக்கு மட்டும் 'For You' பரிந்துரைகள் கிடைக்கும் என்றும் ப்ளூ டிக் பயனர்கள் மட்டும் தான் ட்விட்டர் வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியும் என்றும் புதிய விதியை மஸ்க் அறிவித்துள்ளார். இதன் மூலம் மஸ்க் ஏஐ பாட்கள் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

Advertisment

'ப்ளூ டிக்' மட்டும் தான் ஒரே வழி

சமூக ஊடக தளத்தில் போலி கணக்குகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்புவது போன்ற பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ப்ளூ டிக் மட்டுமே இதனை சரி செய்வதற்கான ஒரே வழியாக இருக்க கூடும் என்று மஸ்க் கூறினார்.

அதேபோல் ட்விட்டர் வாக்கெடுப்புகளில் பங்கேற்பதற்கும் ப்ளூ டிக் தேவை என்று கூறியுள்ளார். இதற்கு ஒரு நபர் வருடத்திற்கு 84 டாலர் என மொத்தமாக செலுத்தி பயன்பெறலாம். அல்லது மாதம் 8 டாலர் கட்டணமாக செலுத்தலாம் என்றார்.

ப்ளூ டிக் வசதி பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கு என கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. ப்ளூ டிக் வசதி அரசியல் தலைவர்கள். திரை பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மஸ்க்கின் இந்த புதிய நடவடிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் டிவிட்டர் ப்ளூ டிக் பயனர்களுக்கானது மட்டுமே என்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறது. அமெரிக்க திரை பிரபலங்கள், தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மஸ்க்கின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter Elon Musk Twitter Response
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment