இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மழையின் சீற்றமும் வெள்ளமும் மத்திய மற்றும் தெற்கு கேரளா மாவட்டங்களின் வழக்கமான பகுதிகளுக்குத் திரும்பின. சனிக்கிழமை, சில பாலங்கள் மற்றும் பல சாலைகள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மிக மோசமாக பாதிக்கப்பட்ட கோட்டயம் மாவட்டத்தில் ராணுவம் மற்றும் விமானப்படை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவ்வளவு தீவிர மழைக்கு என்ன காரணம்?
அக்டோபர் 14 அன்று கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கேரளா கடற்கரைக்கு அருகில் சென்று கடுமையான வானிலையைத் தூண்டியது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கேரளா வியாழக்கிழமை முதல் அதன் தென் மாவட்டங்களில் குறைந்தது ஆறு முதல் 24 மணி நேரத்தில் 115.5 மிமீ முதல் 204.4 மிமீ வரை கனமழையையும், (24 மணிநேரத்தில் 204.4 மிமீக்கும் அதிகமாக) மிக அதிக மழையையும் சந்தித்தது.
சனிக்கிழமை, சில இடங்களில் 12 மணி முதல் மாலை 6 மணி வரை ஆறு மணிநேர மழை பதிவானது, தொடுபுழா-145 மிமீ, சிறுதோணி-142.2 மிமீ, கோன்னி-125 மிமீ, தென்மலா-120.5 மிமீ, வியாந்தலா-95 மிமீ, கோட்டாரகரா-77 மிமீ, பள்ளூர்த்தி-66 மிமீ.
சனிக்கிழமை திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட மத்திய மற்றும் தெற்கு கேரளா இடையே அமைந்துள்ள பெரும்பாலான மாவட்டங்களில் திடீர் வெள்ளம், மண் சரிவு மற்றும் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
இந்த கனமழை, தென்மேற்கு பருவமழை முடிவடைவதோடு தொடர்புடையதா?
இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை முடிவடைவது கணிசமாக தாமதமானது. தென்மேற்கு பருவமழை மேற்கு, வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பிராந்தியங்களில் இருந்து முழுமையாக முடிவடைந்தது, ஆனால் தெற்கு தீபகற்பத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை முடிவடைதல் தீபகற்பப் பகுதிகளுக்குள் நுழைவதால், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், ஒரு வாரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.
ஆனால் கடந்த நான்கு நாட்களில் பெய்த மழை முக்கியமாக அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூண்டப்பட்ட ஒரு உள்ளூர் நிகழ்வு ஆகும். சனிக்கிழமை நிலவரப்படி, கேரளாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்தது.
அக்டோபரில் வடகிழக்கு பருவமழையுடன் தொடர்புடைய மழைப்பொழிவு கேரளாவில் பொதுவானது என்றாலும், இத்தகைய தீவிரமான மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடிக்கடி இல்லை. இந்த சீசனில், அடுத்த வாரம் வரை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பில்லை.
கேரளாவிற்கான வானிலை முன்னறிவிப்பு என்ன?
கேரளா மற்றும் மாஹேவில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, அதன் பிறகு மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் மிதமான முதல் அதி தீவிர வெள்ள அபாய பாதிப்பு மீண்டும் நிகழ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம். திங்கட்கிழமை அதிகாலை வரை இந்த மாவட்டங்கள் அனைத்தும் 'சிவப்பு' எச்சரிக்கையுடன் இருக்கும்.
திங்கள்கிழமைக்குப் பிறகு கேரளாவிற்கு வானிலை எச்சரிக்கைகள் இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.