நகரத்தில் மீண்டும் நிகழும் நிகழ்வாக, திங்களன்று காளிந்தி குஞ்ச் அருகே யமுனை ஆற்றின் சில பகுதிகளில் நுரை அடுக்கு மிதந்தது. சாத் பக்தர்கள் இந்த நச்சு நுரை நிறைந்த நீரில் நின்று பிரார்த்தனை செய்தனர்.
யமுனையில் நுரை எதனால் ஏற்படுகிறது?
நுரை மாசுபட்ட நதியின் அடையாளம். சுத்திகரிக்கப்படாத அல்லது மோசமாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள், கழிவுநீர் நெட்வொர்க்குடன் இணைக்கப்படாத நகரத்தின் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் உள்ளிட்டவை, நுரைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஆற்றில் உள்ள பாஸ்பேட்டுகள் நுரையை உருவாக்குகின்றன என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) நீர் திட்டத்தின் மூத்த திட்ட மேலாளர் சுஷ்மிதா சென்குப்தா கூறினார். அனைத்து கழிவுநீரும் சுத்திகரிக்கப்படாததால், வீடுகள் மற்றும் தொழில்துறை சலவைகளில் உள்ள சவர்க்காரங்களில் இருந்து சர்பாக்டான்ட்கள் மற்றும் பாஸ்பேட்டுகள் ஆற்றில் கலக்கின்றன, என்று சென்குப்தா கூறினார்.
ஆண்டின் இந்த நேரத்தில் நுரை வருவதற்கான காரணங்களை விளக்கிய சென்குப்தா, ஆற்றில் நீர் குறைந்த நிலையில் உள்ளதாகவும், நீர் வரத்து குறைவாக இருப்பதாகவும் கூறினார். எனவே, மாசுபடுத்திகள் நீர்த்தப்படுவதில்லை. ஓக்லா அருகே உள்ள தடுப்பணையில் ஏற்படும் கொந்தளிப்பு அல்லது சுழல், பாஸ்பேட்களில் இருந்து நுரையை உருவாக்குகிறது என்று டெல்லி ஜல் போர்டு (DJB) அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூலை 2020 இல் நுரை உருவான பிறகு, இப்போது கலைக்கப்பட்ட யமுனா கண்காணிப்புக் குழு, டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (DPCC) மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் சமர்ப்பிக்கப்பட்ட CPCB அறிக்கையானது ITO மற்றும் Okhla தடுப்பணைகளின் தாழ்வான இரண்டு இடங்களில் நுரை உருவாக்கம் நடைபெறுவதாகக் குறிப்பிடுகிறது. ஓக்லா தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு விழும் நீர், கழிவுநீரில் அல்லது ஆற்றங்கரையில் உள்ள சேற்றுடன் சேர்வதால், அங்கு இருக்கும் சர்பாக்டான்ட்கள் மற்றும் நுரை முகவர்கள் கிளர்ந்தெழுந்து, நுரையை உருவாக்குகிறது.
கழிவுகளைச் சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
DJB க்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டெல்லி ஜல் போர்டு அதிகாரிகள் நுரைத்த இடத்தை சுட்டிக்காட்டி வருகின்றனர். DJB யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓக்லா தடுப்பணையின் கீழ்பகுதியில் உள்ள காளிந்தி குஞ்ச் அருகே மட்டுமே இந்த நுரை காணப்படுகிறது, டெல்லியில் இருந்து வெளியேறும் கழிவுநீரே காரணம் என்றால், வசிராபாத் தடுப்பணை முதல் ஆற்றின் முழுப் பகுதியிலும் நுரை வெளியேறியிருக்கும். அங்கிருந்து தான் வடிகால் ஆற்றில் காலியாகத் தொடங்குகிறது. “உத்திரபிரதேசத்தில் இருந்து வந்து காளிந்தி குஞ்ச் அருகே ஆற்றில் கலக்கும் வடிகால் உள்ளது. இந்த வாய்க்காலில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தேங்கி, ஆற்றை மாசுபடுத்துகிறது,'' என்றார்.
திங்களன்று ஒரு விளக்கத்தில், DJB யின் துணைத் தலைவர் ராகவ் சாதா, உத்தரப் பிரதேச அரசின் நீர்ப்பாசனத் துறையால் ஓக்லா தடுப்பணை பராமரிக்கப்பட்டு வருவதாகவும், ஓக்லா தடுப்பணைக்கு அருகிலுள்ள ஆற்றில் மிதக்கும் நுரை அடுக்குக்கு சவர்க்காரம் மற்றும் நச்சு கழிவு காரணமாக இருப்பதாகவும் கூறினார். “எல்லா வகையான கழிவுகள், தொழிற்சாலை வெளியேற்றம், இரசாயனங்கள் மற்றும் சவர்க்காரங்களுடன் சுமார் 155 MGD தண்ணீர் ஓக்லா அணையை அடைகிறது. இதில், 105 MGD ஹரியானா அரசால் நஜாப்கர் வாய்க்கால் வழியாக யமுனையில் விடப்படுகிறது. மீதமுள்ள 50 MGD உத்திரபிரதேச அரசால் வெளியிடப்படுகிறது. உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால், சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நுரையாக மாறுகிறது. தண்ணீரை வெளியிடுவதற்கு முன்பு உத்திரபிரதேச அரசுக்கு சுத்திகரிப்பு செய்யுமாறு நாங்கள் பலமுறை கடிதம் எழுதியுள்ளோம், ஆனால் இதை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம்,” என்று ராகவ் கூறினார்.
இருப்பினும், ஓக்லா தடுப்பணைக்கு அருகில் மட்டுமல்ல, ஆறு முழுவதும் பாஸ்பேட்டுகள் அதிக அளவில் உள்ளன. "ஓக்லாவிற்கு அருகிலுள்ள அந்த இடத்தில் மாசுபாடுகளின் சுமை அதிகமாக இருக்க வேண்டும், அதனால்தான் அந்த இடத்தில் நுரையைப் பார்க்கிறோம்" என்று சென்குப்தா கூறினார். கடந்த ஆண்டு யமுனா கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட CPCB அறிக்கை, பாஸ்பேட் மற்றும் சர்பாக்டான்ட்கள் வஜிராபாத்தின் மேல்பகுதியில் கண்டறியப்படவில்லை, ஆனால் ITO மற்றும் ஓக்லா தடுப்பணையின் கீழ்பகுதிகளுக்கு இடையே காணப்பட்டது என்று கூறியது.
கடந்த ஆண்டு கமிட்டிக்கு DPCC அறிக்கை சமர்பித்தது, நஜஃப்கர் வடிகால் கீழ்புறத்தில் உள்ள கஜூரி பால்டூனில் அதிக அளவு பாஸ்பேட் (13.42 மி.கி./லி.) மற்றும் சர்பாக்டான்ட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஓக்லா தடுப்பணையில் செறிவு 12.26 மி.கி/லிட்டராகவும், நிஜாமுதீன் பாலத்தில் 11 மி.கி/லிட்டராகவும் இருந்தது. பல்லாவில் உள்ள செறிவு 9.78 மி.கி/லிட்டராக இருந்தது. வடிகால்களில், நஜாப்கர் வடிகால் (74.5 மி.கி./லிட்டர்), ஐஎஸ்பிடி வடிகால் (65.5 மி.கி./லி.), பாரபுல்லா வடிகால் (57.2 மி.கி./லி.), மற்றும் இந்திரபுரி வடிகால் (54.2 மி.கி./லிட்டர்) ஆகியவற்றில் அதிக பாஸ்பேட் அளவு காணப்பட்டது. ) பால்ஸ்வா பாலத்திற்கு அருகிலும் அதிக பாஸ்பேட் அளவு காணப்பட்டது.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
இந்த ஆண்டு ஜூன் மாதம், DPCC, இந்திய தரநிலைகள் பணியகத்தால் (BIS) நிர்ணயித்த தர நிலைகளுக்கு இணங்காத சோப்புகள் மற்றும் சவர்க்காரங்களின் விற்பனை, சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கு தடை விதித்தது. தற்போது கலைக்கப்பட்ட யமுனா கண்காணிப்பு குழு, அப்படி தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து NGT-யால் நியமிக்கப்பட்ட யமுனா கண்காணிப்புக் குழுவின் ஐந்தாவது அறிக்கை, சவர்க்காரங்களுக்கான BIS தரநிலைகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த தரநிலைகள் உண்மையில் செயல்படுத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. " CPCB, DPCC மற்றும் பிசிபி போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் பங்கு பொதுவாக வெளியேற்றம் அல்லது கழிவு தரநிலைகளை செயல்படுத்துவதில் மட்டுமே உள்ளது" என்று அறிக்கை கூறுகிறது.
பாஸ்பேட் அளவை சரிபார்க்க ஓக்லா தடுப்பணைக்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக மூத்த DJB அதிகாரி தெரிவித்தார். தேவைப்படும் போது மாதிரிகள் எடுக்கப்பட்டாலும், DJB தினசரி அளவைக் கண்காணிப்பதில்லை, என்றார்.
ராகவ் சாதா தனது விளக்கத்தில், DJB இன் இன்டர்செப்டர் கழிவுநீர் திட்டம் (வடிகால் வழியாக ஆற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க) மற்றும் STP களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் பற்றி குறிப்பிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.