அபந்திகா கோஷ்
தேசிய மருத்துவ ஆணையம் மசோதா விளக்கம்: தற்போதுள்ள சட்டம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு இந்தியாவின் மருத்துவக் கல்வியில் ஒழுங்குமுறைபடுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது. கடந்த திங்கள்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் முதல் கட்ட வரைவு கடந்த 16வது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அது சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், அந்த மசோதா கடந்த மக்களவையின் இறுதி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டதால் அது தோல்வியடைந்தது. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 ரத்து செய்யப்படும். தற்போதுள்ள சட்டம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது.
இந்திய மருத்துவக் கவுன்சில் ஏன் மாற்றப்படுகிறது?
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு 2016 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாட்டை அதனுடைய 62வது அறிக்கையை பரிசீலனை செய்தது. அதில் அதனுடைய விமர்சனம் இவ்வாறு கடுமையாக இருந்தது “இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்கொண்ட அளவுகோள் (திறமையான மருத்துவர்களை உருவாக்குதல், தர நிலைகளை கடைபிடிப்பதை உறுதி செய்தல் போன்றவை) தொடர்பாக பரிசோதிக்கப்பட்டபோது, அதனுடைய கட்டாயமான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பலமுறை குறைந்தே காணப்படுகிறது. மருத்துவக் கல்வியின் தரம் மிகக் குறைவாக உள்ளது; தற்போதைய மருத்துவக் கல்வியின் மாதிரி நாட்டின் அடிப்படை சுகாதாரத் தேவைகளை சரியான வகையில் பூர்த்தி செய்யும் சுகாதார நிபுணர்களை உருவாக்குவதில்லை. ஏனெனில், மத்துவக்கல்வியும் பாடத்திட்டமும் நமது சுகாதார அமைப்பின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை; மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்பட்டு வெளிவரும் பலர், ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மாவட்ட அளவிலான மிக குறைவான வசதிகளைக் கொண்ட அமைப்புகளில் பணி செய்வதற்குத் தயாராக இல்லை. மருத்துவப் பட்டதாரிகளுக்கு சாதாரண பிரசவங்களைப் பார்ப்பது போன்ற அடிப்படை சுகாதாரப் பணிகளைச் செய்வதில்கூட திறமை இல்லை; அறமில்லாத நடைமுறை சம்பவங்கள் தொடர்ந்து வளர்ந்துவருகின்றன. இதன் காரணமாக இந்த தொழிலுக்கான மரியாதை குறைந்து வருகிறது.”
மேலும், அந்த குழு கூறுகிறது, “சமரசம் செய்துகொண்ட சில தனிநபர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலில் இடம் பெற முடிந்தது அதிர்ச்சியளித்தது. ஒரு கவுன்சில் உறுப்பினர் ஊழல் செய்துள்ளார் என நிரூபிக்கப்பட்டாலும் அவரை நீக்கவோ அல்லது அனுமதிக்கவோ அமைச்சரகத்துக்கு அதிகாரம் இல்லை.
தேசிய மருத்துவ ஆணையம் எவ்வாறு செயல்படும் என்று முன்மொழியப்படும்?
இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக அமைச்சரவை செயலாளர் தலைமையிலான தேடல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு குழுவுக்கு அதிகாரம் வழங்குகிறது. இந்த மசோதா நாடு முழுவதும் ஒரே மருத்துவத் தேர்வை அளிக்கிறது. ஒரே எக்ஸிட் தேர்வு (எம்.பி.பி.எஸ். இறுதி தேர்வு, இது மருத்துவராக பணியாற்ற உரிமம் அளிக்கும் தேர்வாக இருக்கும்) வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான தேர்வு மற்றும் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு ஆகியவற்றை அளிக்கிறது.
இந்த மசோதா தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களுக்கு கல்விக்கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை முறைப்படுத்துவதை முன்மொழிகிறது. ஒரு மருத்துவ ஆலோசனை கவுன்சில் அமைக்கப்படும் – இதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் (இரண்டிலும் துணை வேந்தர்கள்), பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் (யுஜிசி), தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பிட்டுக் கவுன்சிலின் இயக்குனர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அளிப்பார்கள்.
இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி, மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு வாரியம், மருத்துவ நெறிமுறைகள் மற்றும் மருத்துவ பதிவு வாரியம் ஆகிய நான்கு வாரியங்கள் இந்த துறைகளை ஒழுங்குபடுத்தும். மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான விதிமுறைகளை ஆய்வு செய்வதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ரஞ்சித் ராய் சவுத்ரி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க இந்த அமைப்பு அமைந்துள்ளது.
இந்த மசோதா ஒழுங்குமுறைப்படுத்தும் தத்துவத்தில் ஒரு தீவிர மாற்றத்தைக் குறிப்பிடுகிறது; தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், அங்கீகாரம் பெறுவதற்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி தேவைப்படும். வருடாந்திர புதுப்பித்தல் தேவையில்லை. மேலும், கல்லூரிகள் மருத்துவப் படிப்பில் தங்களுடைய சொந்த இடங்களை 250 இடங்களுக்கு அதிகரித்துக்கொள்ளலாம். மேலும், அவர்கள் முதுகலை படிப்புகளை அவர்களாகவே தொடங்க முடியும். இருப்பினும் விதிமுறை மீறல்களுக்கான அபராதம் ஆண்டுக் கட்டணத்தில் இருந்து ஒன்றரை மடங்கு முதல் 10 மடங்கு வரை பெரிய அளவில் இருக்கும்.
2019 மசோதாவில் என்ன மாற்றம் செய்யப்படுகிறது?
சுகாதாரம் மற்றும் குடும்பலநலத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் (2018 ஆம் ஆண்டில் 109வது அறிக்கை) பரிந்துரைகளைத் தொடர்ந்து, இரண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஒன்று இது தனியான ஒரு எக்ஸிட் தேர்வை கைவிடுகிறது. இரண்டு ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவ முறைகளைப் செய்பவர்கள் ஒரு இணைப்பு படிப்புகளுக்குப் பிறகு அலோபதி மருந்துகளை பரிந்துரைக்க அனுமதி அனுமதிக்கும் ஏற்பாட்டை கைவிட்டுள்ளது.
அது என்ன இணைப்பு படிப்பு?
இது மசோதாவின் சர்ச்சைக்குரிய விதிகளில் ஒன்று. ஆளும் கட்சி எம்.பி-க்கள் கூட இதை விமர்சிக்கின்றனர். இணைப்பு பாடத்திட்டம் தொடர்பாக இந்த குழு (2018 ஆம் ஆண்டில்) இணைப்பு பாடத்தை கட்டாய ஏற்பாடாக மாற்றக்கூடாது என்ற பார்வையைக் கொண்டிருந்தது. இருப்பினும் சுகாதாரத்துறையில், தற்போதுள்ள மனித வளங்களின் திறனை வளர்ப்பதன் அவசியத்தை இந்த குழு பாராட்டுகிறது. 2017 ஆம் ஆண்டு தேசிய சுகாதாரக் கொள்கைகளின் நோக்கங்களை அடைவதற்கு சுகாதார நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த சுகாதார பிரச்னைகள் மற்றும் சவால்கள் இருப்பதாக இந்த குழு உணர்ந்துள்ளது. ஆகையால், இந்த குழு ஆயூஷ் பயிற்சியாளர்கள், பி.எஸ்சி (நர்சிங்) பி.டி.எஸ், பி.பார்மா உள்ளிட்ட சுகாதார நிபுணர்களின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் செயல்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறது.
இந்த குழு (2018 ஆம் ஆண்டில்) தேசிய உரிமம் அளிக்கும் தேர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவை “எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு தேர்வை உரிமத் தேர்வாக மாற்றுவதற்கு மறுவரைவு செய்ய பரிந்துரைத்துள்ளது.”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.