Advertisment

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா.. காரணம் என்ன?

சீனாவின் இறக்குமதிகள் பெரும்பாலும் குருணை புழுங்கல் அரிசியாகும், அது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Sep 12, 2022 16:45 IST
What govt curbs on exporting rice mean for India and the world

2021-22, ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 21.21 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டுக்கு 9.66 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 4 மாதங்களுக்கு முன்பு, நாட்டிலிருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

பயிர் விளைச்சல் சரிவு, இருப்பு குறைவு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது இது போன்ற கவலைகள் அரிசி ஏற்றுமதியிலும் ஏற்பட்டுள்ளன.

Advertisment

அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

அரிசி ஏற்றுமதியில் நான்கு வகைகள் உள்ளன. அவற்றில் பாசுமதி அரிசி மற்றும் பாசுமதி அல்லாத அரிசி பிரதானமானது.

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இன்னும் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறது. தடைகள், உடைந்த பாசுமதி அரிசி மற்றும் வெள்ளை அரிசிக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையானது, செப்டம்பர் 9 முதல் அமலுக்கு வரும் வகையில், "பழுப்பு மற்றும் பாசுமதி அரிசியைத் தவிர" அரிசியின் ஏற்றுமதிக்கு 20% வரி விதிக்கப்படுவதாக அறிவித்தது.

இது அனைத்து மூல பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிகளையும் உள்ளடக்கியிருக்கும். அதே இரவில், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் மற்றொரு அறிவிப்பு உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

ஆகவே, கச்சா அல்லாத பாசுமதி அரிசிக்குக் கூட, 20% வரி செலுத்தினால் முழு தானிய சரக்குகளின் ஏற்றுமதி மட்டுமே அனுமதிக்கப்படும்.

இவை அனைத்தும் நாட்டின் ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதியை எந்தளவு பாதிக்கும்?

இந்தியா, 2021-22இல் (ஏப்ரல்-மார்ச்), 9.66 பில்லியன் டாலர் மதிப்புள்ள 21.21 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) அரிசியை ஏற்றுமதி செய்தது. அதில் $3.54 பில்லியன் மதிப்புள்ள 3.95 மில்லியன் டன் பாசுமதி அரிசியும் (இதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை) மற்றும் $6.12 பில்லியன் மதிப்புள்ள 17.26 மில்லியன் டன் பாசுமதி அல்லாத ஏற்றுமதிகளும் அடங்கும்.

பிந்தைய காலத்திற்குள், 7.43 மில்லியன் டன்கள் ($2.76 பில்லியன்) புழுங்கல் அரிசி ஏற்றுமதியை செய்தது. இவைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

மீதமுள்ள 9.83 மில்லியன் டன் ($3.36 பில்லியன்) தொடர்பாக மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும். இது 3.89 மில்லியன் டன் ($1.13 பில்லியன்) உடைந்த அரிசியை உள்ளடக்கியது.

அதன் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் 5.94 மில்லியன் டன் ($2.23 பில்லியன்) பாசுமதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதிக்கு இனிமேல் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.

எளிமையாகச் சொன்னால், இந்தத் தடைகள் நாட்டின் அரிசி ஏற்றுமதியில் பாதி அளவு மற்றும் மூன்றில் ஒரு பங்கை பாதிக்கும்.

ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன?

இரண்டு அடிப்படை காரணங்கள் உள்ளன. முதலாவது, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் கங்கை நதி பாயும் மேற்கு வங்கத்தில் பருவமழையின் பற்றாக்குறையால் இந்தியாவின் அரிசி உற்பத்தி கணிசமாகக் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் செப்டம்பர் 9 வரையிலான நடப்பு காரீஃப் பயிர் பருவத்தில் விவசாயிகள் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2.1 மில்லியன் ஹெக்டேர் (mh) குறைவான பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வரை இடைவெளி மிக அதிகமாக இருந்தது, கிட்டத்தட்ட 4.4 mh. நெல்லுக்கான சாதாரண நடவு நேரம் ஜூன்-ஜூலை என்பதால், அதற்குப் பிறகு மூடப்பட்ட எந்தப் பகுதியும் குறைந்த மகசூல் தரும் குறுகிய கால ரகங்களாக இருக்கும் என்பதால், அது உற்பத்தியில் பிரதிபலிக்கும்.

அகில இந்திய அளவில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 2.7 டன் அரிசி விளைச்சலை எடுத்துக் கொண்டால், அருவடை 6-12 மீட்டர் வரம்பில் இருக்கலாம்.

இரண்டாவது பங்குகளுடன் தொடர்புடையது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொது கோதுமை கையிருப்பு, 26.65 மில்லியன் டன் ஆக இருக்கிறது.

இது இந்த தேதியில் 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகக் குறைவு ஆகும். அதே சமயம், 40.99 மெகா டன் என்ற அளவான அரிசி இருந்தது.

ஆகஸ்ட் 1, 2021 இல் இருந்த 44.46 மெ.டன் அளவை விடக் குறைவாக இருக்கிறது. இது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இலவச உணவு தானியங்கள் திட்டத்தை (பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா) செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் தொடர வேண்டும் என்ற அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் இது அதிகமாக உள்ளது.

அரசு கிடங்குகளில் மிகக் குறைந்த கோதுமை உள்ளதால், பொது விநியோகத் திட்டத்தை (பி.டி.எஸ்) நிலைநிறுத்துவது அரிசிதான்.

இந்த ஆண்டு அரிசி உற்பத்தியில் 10 மில்லியன் டன்கள் வீழ்ச்சியடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஏற்றுமதிகள் பாதிப்படைகின்றன.

இதற்கிடையில், தாய்லாந்தின் (7.2 மெ.டன்), வியட்நாமின் (6.6 மெ.டன்) மற்றும் பாகிஸ்தானின் (4.8 மெ.டன்) ஏற்றுமதியை விட கடந்த ஆண்டு 21 மில்லியன் டன் கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம், உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் 40% பங்கினை நாடு கொண்டுள்ளது.

2021-22 இல், ஏற்றுமதி 7.23 மில்லியன் டன்களை எட்டியபோது கூட, உலக கோதுமை ஏற்றுமதியில் அதன் பங்கு 5 சதவீதம் ஆக கூட இல்லை. இதற்கு மத்தியில் மே13ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

அப்போது, ரஷ்ய-உக்ரைன் போர் நடைபெற்றதால் இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தியா எங்கெல்லாம் அரிசியை ஏற்றுமதி செய்கிறது?

கடந்த ஆண்டு பாசுமதி ஏற்றுமதியில் 75% க்கும் அதிகமானவை ஈரான் மற்றும் அரேபிய தீபகற்ப நாடுகளுக்கு; அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை மேலும் 10% வரை ஏற்றுமதி செய்யப்பட்டன.

பாசுமதி அல்லாத அரிசியில், கிட்டத்தட்ட 55% ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ளன. அந்த நாடுகள், பெனின், ஐவரி கோஸ்ட், செனகல், டோகோ, கினியா, மடகாஸ்கர், கேமரூன், ஜிபூட்டி, சோமாலியா மற்றும் லைபீரியா ஆகியவை ஆகும்.

இந்தப் பட்டியலில் சீனாவும் வங்க தேசமும் 9.5 சதவீதமும், பெனின், நேபாளம் 8.9 சதவீதமும் நுகர்கின்றன. ஆப்பிரிக்கா மற்றும் சீனாவுக்கு பெரும்பாலும் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதே சமயம் சீனாவின் இறக்குமதிகள் பெரும்பாலும் உடைக்கப்பட்ட அரிசியாகும், அது இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

புழுங்கல் அரிசி என்றால் என்ன?

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லில் இருந்து புழுங்கல் அரிசி எடுக்கப்படுகிறது. இதில் உமியாக 20-21 சதவீதமும், அடுத்த லேயராக 10-11 சதவீதம் நீக்கப்பட்ட பின்னர் அரிசி 68-69 சதவீதம் வரை கிடைக்கும்.

இந்த அரிசி முழு மற்றும் குருணையாக கிடைக்கும். பர்பாய்லிங் என்பது நெல்-ஐ தண்ணீரில் ஊறவைத்து, ஆவியில் வேகவைத்து உலர்த்தும் ஒரு செயல்முறையாகும். அரைக்கும் போது குறைந்த உடைப்புடன் அரிசி கடினமாகிறது.

அந்த வகையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசியில் 5-15% உடைந்த தானியங்கள் உள்ளன. கச்சா அரிசியில், உடைப்புகள் பொதுவாக 25% வரை இருக்கும்.

100% உடைந்த அரிசி தான் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 3.89 மில்லியன் டன் உடைந்த அரிசி ஏற்றுமதியில், 1.59 மில்லியன் டன் சீனாவிற்கும், அதைத் தொடர்ந்து செனகல் (0.92 மெ.டன்), வியட்நாம் (0.34 மீ. டன்), ஜிபூட்டி (0.24 மீ. டன்) மற்றும் இந்தோனேசியா (0.21 மெ. டன்) ஆகிய நாடுகளுக்கும் சென்றன.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி பெரும் பாதிப்பை சந்திக்குமா?

இதற்கு வாய்ப்பில்லை இல்லை என்கிறார் அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜய் சேத்தியா.

இந்தியாவில் இருந்து 5% உடைந்த வெள்ளை அரிசி தற்போது ஒரு டன்னுக்கு சுமார் $340 என்ற விலையில் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து $380, வியட்நாமில் இருந்து $395 மற்றும் தாய்லாந்தில் இருந்து $430 ஏற்றுமதி ஆகின்றன. இது இந்திய அரிசியை போட்டியாளராக மாற்றாது” என்றார்.

இந்த அரிசிகள் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ரேஷன் கடைகளிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Rice
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment