இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்ய படைகள் "மிகப் பயங்கரமான போர்க்குற்றங்களை" செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா., கூட்டத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் வாழும் உக்ரைனd பகுதிகளை ரஷ்யா காலி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை, குறைந்தது 410 பேரின் உடல்களை கிவ்வைச் சுற்றியுள்ள நகரங்களில் உக்ரைன் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அப்பகுதியில், உக்ரைனும் ரஷ்யாவும் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை சண்டையிட்டு வந்தனர். தற்போது, ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், போர் குற்றத்திற்கான ஆதாரங்கள் கிடைக்க தொடங்கியுள்ளன.
புச்சா படுகொலை
தலைநகரின் வடமேற்கே சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புச்சா பகுதியில் அதிகளவிலான மக்கள் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் போருக்கு முன்னர் சுமார் 36 ஆயிரம் பேர் வாழ்ந்துகொண்டிருந்தனர். திங்கட்கிழமை அப்பகுதிக்கு சென்ற ஜெலன்ஸ்கி, சுமார் 300 பேரின் உடல்களை கண்டெடுத்தாக தெரிவித்தார். பலர் கைகள் வெட்டப்பட்ட நிலையில், உடலில் தீக்காயங்களுடன், தலையின் பின்பகுதியில் துப்பாக்கியால் சுட்ட நிலையிலும் சடலங்கள் இருந்துள்ளது.
மார்ச் நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்க்கையில், சாலையில் சடலங்கள் சிதறிக்கிடக்கின்றன. மேலும் கடந்த இரண்டு நாட்களில் பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்த பல மனித உடல்கள், நீண்ட நாள்களாக பொதுவெளியில் கிடந்திருந்ததாக கூறப்படுகிறது. தேவாலய வளாகத்தில் உள்ள மிகப்பெரிய புதைகுழியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், ஐந்து உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் சுகாதார நிலையத்தின் அடித்தளத்தில் கிடப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்களுக்கு "சித்திரவதை அளிக்கும் அறையாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது கிடைத்த சடலங்களையும், இரண்டாம் உலகப் போரின் போது இதே பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் ஒப்பிடப்படுகின்றன. முதல் கியேவ் போருக்கும் (ஜூன் 1941) மற்றும் இரண்டாவது கிவ் போருக்கும் (நவம்பர்-டிசம்பர் 1943) இடையே, சிவப்பு ஆர்மி ஜெர்மன்களை உக்ரைனில் இருந்து வெளியே விரட்டியது. அப்போது, புச்சா உட்பட உக்ரைன் தலைநகர் துப்பாக்கி குண்டுகளால் படுகொலையை சந்தித்தது. அப்போது, 1.5 மில்லியன் மக்கள், பெரும்பாலும் யூதர்கள், நெருங்கிய தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த கீழ்மட்ட நாஜி துணை ராணுவ படையினர், வீடுகளிலும் தெருக்களிலும் குடிமக்களை ரேண்டமாக கொலை செய்தனர். அப்போது, புச்சாவில் சைக்கிள்கள் அருகிலும், நடைபாதைகளிலும், தோட்டங்களிலும் சடலங்கள் சிதறி கிடந்தன.
இதுதொடர்பான வீடியோ வெளியே வருகையில், பிரச்னை விஷ்வரூபம் எடுத்தது. சிவில் உடைகள் அணிந்த சடலங்களின் படங்கள் அதாவது சிலர் ஷாப்பிங் பைகளை மாட்டிக்கொண்டும், சாதாரண குடிமக்கள் தங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடும் போது இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்ய வீரர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் விசாரணை நடத்தி உடைமைகளை சூறையாடியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய வாகனங்கள் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. HRW அறிக்கையின்படி, மார்ச் 4 அன்று புச்சாவில் உள்ள ரஷ்யப் படைகள் ஐந்து பேரை சுற்றி வளைத்து அவர்களில் ஒருவரை தூக்கிலிட்டனர். மற்றொரு சாட்சி அளித்த தகவலில், ரஷ்ய வீரர்கள் ஐந்த பேரை மண்டியிடும்படி கட்டாயப்படுத்தினர், அவர்களின் டி-சர்ட்டை தலைக்கு மேல் இழுத்து, ஒருவரை தலையின் பின்புறத்தில் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தார்.
இனப்படுகொலையா அல்லது போர்க்குற்றமா?
புச்சாவில் நடந்த அட்டூழியங்கள் குறித்த உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் விளக்கத்தில் இரண்டு வெளிப்பாடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த வரையறைகளுக்கு பொருந்துமா என்பது முக்கியமானது. ஏனெனில் அவற்றிற்கு பதிலளிக்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.
உக்ரைனும் மேற்கு நாடுகளும் ரஷ்யா மீது போர்க்குற்றங்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டின. ஏனெனில், ரஷ்யா மரியுபோலில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை மீதும், குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாக அறிவித்த தியேட்டர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், விளாடிமிர் புடினை "போர் குற்றவாளி" என்று ஒன்றுக்கு மேற்பட்ட முறை அழைத்துள்ளார்.
போர்க்குற்றங்கள் ஜெனிவா உடன்படிக்கைகளின் "கடுமையான மீறல்கள்" என வரையறுக்கப்படுகின்றன, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் போர்க் காலத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை வகுத்தன. வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைப்பது போர்க்குற்றமாகும்
ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) ஏற்கனவே ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது. வழக்கின் விசாரணை புதினை டார்கெட் செய்தாலும், ரஷ்ய பிரதிவாதிகளை விசாரணைக்கு கொண்டு வந்து நிரூபிப்பது கடினமாகும். ஐசிசியை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை. எனவே, விசாரணைக்கு நிச்சயம் ஒத்துழைக்காது.
டிசம்பர் 1948 இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் இனப்படுகொலை மாநாட்டில் தான், இனப்படுகொலைக் குற்றம் வரையறுக்கப்பட்டறு. அதாவது, தேசிய, இனம் அல்லது மதக் குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயல்களை இனப்படுகொலை என கூறுகிறது. மனித குலத்திற்கு எதிரான அனைத்துக் குற்றங்களிலும் இனப்படுகொலை மிகக் கடுமையானதாக பார்க்கப்படுகிறது.
ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்படுகொலை மற்றும் மனித உரிமைகள் ஆய்வு மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ஹிண்டன், POLITICO-விடம் கூறியதாவது, இனப்படுகொலை செய்தவர்கள் "ஒரு ராணுவத்தை தோற்கடிப்பதற்கு மாறாக ஒரு மக்களை அழிக்க விரும்புகிறார்கள். போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகத் தோன்றினாலும், ரஷ்யாவின் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கு சமம் என்று தான் நம்பவில்லை என்றார்.
இனப்படுகொலை கண்காணிப்பின் தலைவர் கிரிகோரி ஸ்டாண்டன் கூறுகையில், ரஷ்யா இனப்படுகொலை குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது.இனப்படுகொலை என்பது ஒரு அரசு தனது சொந்த மக்களுக்கு எதிராக அல்லது மற்றொரு மாநிலத்தின் மக்களுக்கு எதிராக செய்யக்கூடிய ஒரு குழுக் குற்றமாகும். ரஷ்யர்கள் , ஒரு தேசியக் குழுவை அழிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளனர்" என தெரிவித்தார்.
இனப்படுகொலை என்றால் என்ன என்பது குறித்த கருத்து வேறுபாடுகள், சர்வதேச சமூகம் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்த தயங்குவதை விளக்குகிறது. 6 மில்லியனுக்கும் அதிகமான யூதர்கள் அழிக்கப்பட்ட ஹோலோகாஸ்ட் தவிர, மற்ற மூன்று இனப்படுகொலைகள் 1948 ஐ.நாவின் வரையறைக்கு ஏற்றதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 1915-20 ஆம் ஆண்டு ஒட்டோமான் துருக்கியர்களால் சுமார் 80 ஆயிரம் ஆர்மேனியர்களின் படுகொலை, 1994 இல் ஹூட்டுக்கள் மக்கள் படுகொலையும், 1995 இல் ஸ்ரெப்ரெனிகா படுகொலையும் ஆகும்.
சர்வதேச மற்றும் ரஷ்யர்கள் ரியாக்ஷன்
கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ," புச்சா மற்றும் பிற புறநகர் பகுதிகளில் நடந்துள்ளத இனப்படுகொலை என்று மட்டுமே விவரிக்க முடியும்" என்று கூறினார்.
உக்ரைனின் அனைத்து மேற்கத்திய நட்பு நாடுகள், EU கவுன்சில், நேட்டோ மற்றும் UN பொதுச்செயலாளர், புச்சாவில் நடந்த படுகொலையை கடுமையாக கண்டித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை என ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் வலியுறுத்திய நிலையில், டஜன் கணக்கான ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஸ்வீடிஷ் வழக்குரைஞர்கள் உக்ரேனில் சாத்தியமான போர்க்குற்றங்கள் குறித்து ஆரம்ப விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், ரஷ்யா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. புச்சாவில் நடந்ததாக கூறப்படுவது நன்றாக இயக்கப்பட்டது ஆனால் சோகமான நிகழ்ச்சியாகும், ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தும் மோசடி செயல் என கிரெம்ளின் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.