இந்தியாவின் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிற 26.11.1949 அன்று என்ன நடந்தது?

70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் - நவம்பர் 26, 1949 - இந்திய அரசியலமைப்பு சபை நம்முடைய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. 2015 முதல், இந்த...

70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் – நவம்பர் 26, 1949 – இந்திய அரசியலமைப்பு சபை நம்முடைய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. 2015 முதல், இந்த நாள் இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது சம்விதன் திவஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 26, 1950 அன்று குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது.

அரசியலமைப்பு தினம்

குடிமக்கள் மத்தியில் அரசியலமைப்பு விழுமியங்களை ஊக்குவிப்பதற்காக நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்று மே, 2015 இல் மத்திய அமைச்சரவை அறிவித்தது.

அந்த ஆண்டு அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவரான பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் ஆண்டாகும்.

பகத்சிங், டாக்டர் ராம் மனோகர் லோஹியா உள்ளிட்ட பல சங்பரிவார் அல்லாத தலைவர்களை தன்வயமாக்கும் பாஜகவின் வெளிப்படையான முயற்சிகளின் வரிசையில், மத்திய அரசின் இந்த முடிவு அம்பேத்கரின் புகழை உரிமை கோருவதற்கான நடவடிக்கையாகக் கருதப்பட்டது.

நவம்பர் 19, 2015 அன்று, மத்திய அரசு நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக முறையாக அறிவித்தது. இதற்கு முன், அந்த நாள் தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக டாக்டர் அம்பேத்கர் இருந்தார்.

“இந்த ஆண்டு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளை நாடு கொண்டாடுகிறது. ‘அரசியலமைப்பு தினம்’ இந்த ஆண்டு முழுவதும் நாடு தழுவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராக இந்திய அரசியலமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த டாக்டர் அம்பேத்கருக்கு இது ஒரு அஞ்சலி ஆகும்” என்று அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு சபை

இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அமைப்பான அரசியலமைப்பு சபை, அதன் முதல் அமர்வை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது, இதில் ஒன்பது பெண்கள் உட்பட 207 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில், நாடாளுமன்றத்தில் 389 உறுப்பினர்கள் இருந்தனர்; இருப்பினும், சுதந்திரம் மற்றும் பிரிவினைக்குப் பின்னர், அதன் வலிமை 299 ஆகக் குறைக்கப்பட்டது. அரசியலமைப்பை உருவாக்குவதற்கு சட்டமன்றம் மூன்று வருடங்கள் எடுத்துக்கொண்டது. வரைவின் உள்ளடக்கத்தை மட்டும் பரிசீலிப்பதற்கு 114 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது.

டிசம்பர் 13, 1946 அன்று, ஜவஹர்லால் நேரு 1947 ஜனவரி 22 அன்று முகவுரை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக “குறிக்கோள் தீர்மானத்தை” நிறைவேற்றினார்.

அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு, அரசியலமைப்புச் சபையின் 17-க்கும் மேற்பட்ட குழுக்களில் ஒன்றாகும். இது ஆகஸ்ட் 29, 1947 இல் அமைக்கப்பட்டது. இந்தியாவுக்கான வரைவு அரசியலமைப்பைத் தயாரிப்பதே அவர்களின் பணியாகும்.

தாக்கல் செய்யப்பட்டதில் பட்டியலிடப்பட்ட 7,600க்கும் மேற்பட்ட திருத்தங்களில், அரசியலமைப்பு குறித்து விவாதிக்கும்போது சுமார் 2,400 திருத்தங்களை குழு நீக்கியது. அரசியலமைப்பு சபையின் கடைசி அமர்வு நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதும் முடிந்தது.

284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டபிறகு அதற்கு அடுத்த ஆண்டு 1950 ஜனவரி 26 முதல் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1930 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் பூரண சுயராஜ்ய தீர்மானம் இந்த நாளில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஜனவரி 26 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close