Advertisment

டாட்டாவுக்கு கைமாறிய ஏர் இந்தியா; அடுத்தது என்ன?

அனைத்து ஆவணங்களும் முறையாக சரிபார்க்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டால், தற்போது ஏர் இந்தியா வாரியத்தில் உள்ள சேர்மென் உட்பட 7 இயக்குநர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து டாட்டா நிறுவனம் தேர்வு செய்துள்ள புதிய இயக்குநர்கள் குழு பதவி ஏற்கும்.

author-image
WebDesk
Jan 28, 2022 12:30 IST
டாட்டாவுக்கு கைமாறிய ஏர் இந்தியா; அடுத்தது என்ன?

 Pranav Mukul 

Advertisment

What happens after the Tata Group gets control of Air India today : ஜனவரி 27ம் தேதி அன்று, ஏர் இந்தியாவை, 18 ஆயிரம் கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்த டாட்டா நிறுவனம், இந்திய அரசிடம் இருந்து நிறுவனத்தை பெற்றுக் கொள்கிறது. வியாழக்கிழமை காலை புதுடெல்லி விரைந்த டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் பிரதமர் மோடியுடன் மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முறையாக ஏர் இந்தியா நிறுவனத்தை ஒப்படைத்தல் என்பது என்ன? தற்போது என்ன நடக்கும்?

அனைத்து ஆவணங்களும் முறையாக சரிபார்க்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டால், தற்போது ஏர் இந்தியா வாரியத்தில் உள்ள சேர்மென் உட்பட 7 இயக்குநர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து டாட்டா நிறுவனம் தேர்வு செய்துள்ள புதிய இயக்குநர்கள் குழு பதவி ஏற்கும். இதனை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்திய அரசிடம் இருந்து டாட்டா குழுமத்திற்கு கைமாறும்.

வியாழன் அன்று நடைபெற்ற நிர்வாக பரிமாற்றத்திற்கு முன் என்ன நடந்தது?

பரிமாற்றத்திற்கு முன்னதாக, ஒப்பந்தத்தின் இறுதிக் கட்டங்களில் ஒன்று ஏர் இந்தியாவின் பேலன்ஸ் ஷீட்டை இறுதி செய்வதாகும். கட்டாஃப் தேதியான ஜனவரி 20ம் தேதி வரையிலான இறுதி பேலன்ஸ் ஷீட் டாட்டா குழுமத்திற்கு திங்கள் கிழமை வழங்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம், அரசு டாட்டா நிறுவனம் ஏர் இந்தியா ஏலத்தில் வெற்றி பெற்றது என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து விமான நிறுவனத்தில் அரசின் 100% பங்குகளை டாட்டா குழுமத்திற்கு மாற்ற விருப்பம் தெரிவித்து அரசாங்கத்தால் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது.

இன்று முதல் “ஏர் இந்தியாவை” இயக்கும் டாட்டா; நிர்வாக இயக்குநர்கள் தேர்வுக்கு முன்னுரிமை

ஏர் இந்தியா நிறுவனத்தை தன்னுடைய குடைக்குள் கொண்டு வந்ததால் டாட்டா நிறுவனம் அடைந்துள்ள பலன் என்ன?

ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைனஸ் நிறுவனத்துடன் முழு சேவை கெரியராக செயல்பட்டு வரும் கேரியர் விஸ்தரா நிறுவனம் மற்றும் பட்ஜெட் விமானங்களை இயக்கும் ஏர்ஆசியா இந்தியா நிறுவனமும் டாட்டாவின் கீழ் செயல்பட்டு வருகின்ற நிலையில் ஏர் இந்தியாவை அதன் விமானப் போக்குவரத்து பிரிவில் சேர்ப்பது சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும். 1,800 சர்வதேச தரையிறங்கும் மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பார்க்கிங் இடங்களையும் இதன் மூலம் பெற இயலும். மேலும் வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்களில் 900 இடங்களையும், உள்நாட்டில் 4400 இடங்களையும் டாட்டா குழுமத்தால் பெற இயலும்.

இது லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற மிக முக்கியமான இடங்களில் உள்ள விமான நிலையங்களை அணுகுவதையும் உள்ளடக்கும். . கூடுதலாக, குழுவானது ஏர் இந்தியாவின் 49 அகன்ற விமானங்கள் (wide bodied planes), 128 குறுகிய விமானங்கள் (narrow bodied planes) மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 25 குறுகிய விமானங்கள் (narrow bodied planes) ஆகியவற்றுக்கான அணுகலைப் பெறுகிறது.

ஏர் இந்தியாவுக்கு சொந்தமான இதர சொத்துகளின் நிலைமை என்ன?

ரியல் எஸ்டேட், வீட்டு வசதி திட்டங்கள் போன்ற சில அசையாச் சொத்துக்கள், சிறப்பு நோக்க நிறுவனமான ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு, விமான நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடனைத் திருப்பிச் செலுத்த பணமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏர்லைனுக்கு சொந்தமான 4000க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் பணமாக்கும் திட்டங்கள் என இரண்டிலுமே இடம் பெறவில்லை. சிவில் விமான போக்குவரத்து துறை மற்றும் கலாச்சாரம் துறை நியூயார்க், வாஷிங்க்டன், பெர்த், ரோம், டோக்யோ, பாரீஸ், மற்றும் லண்டன் நகரங்களில் இருக்கும் அனைத்து கலைப்படைப்புகளையும் இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

ஒரு சாதாரண பயணிக்கு இந்த மாற்றம் எத்தகைய அனுபவத்தை தரும்?

பயணிகள் மற்றும் பொது மக்களால் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கேள்வி இது. இதுவரை இந்த கேள்வி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. பறக்கும் அனுபவத்தில் என்ன மாறும் என்ன மாறாது என்பது பற்றிய அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்.

, AI864 (மும்பை-டெல்லி), AI687 (மும்பை-டெல்லி), AI945 (மும்பை-அபுதாபி) மற்றும் AI639 (ஏஐ639 (மும்பை-அபுதாபி) ஆகிய நான்கு விமானங்களில் "மேம்படுத்தப்பட்ட உணவு சேவை" வழங்கப்படும் என்று பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் கூறியதாக பி.டி.ஐ. வியாழன் அன்று காலை செய்தி வெளியிட்டிருந்தது. விரைவில் இந்த மேம்படுத்தப்பட்ட உணவு சேவையானது வெள்ளிக்கிழமை முதல் மும்பை-நெவார்க் விமானம் மற்றும் ஐந்து மும்பை-டெல்லி விமானங்களில் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Air India #Tata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment