பெங்களூரில் இதுவரை எதிர்கொள்ளாத தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில் தினமும் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றக்குறையை பெங்களூரு சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இது பெங்களூரில் உள்ள தண்ணீர் பிரச்சனை மட்டுமில்லை. கர்நாடகா மாநிலம் முழுவதும், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் தண்ணீ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவான அளவில் இங்கே மழை பெய்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஏன் இந்த பற்றாக்குறை ?
கடந்த வருட, பருவ மழை காலத்தில், கர்நாடகா மாநிலத்தில், 18% வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்தது. இங்கே 2015ம் ஆண்டு முதல் மழை அளவு குறைய தொடங்கி உள்ளது. கர்நாடகா மாநிலம் முழுவதும், பருவமழை காலத்தில்தான் அதிக தண்ணீர் கிடைக்கும். இந்த தண்ணீர் நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டு, நீர் நிலைகளின் தண்ணீர் அளவை அதிகரிக்கும்.
கர்நாடகா மாநிலம் மட்டுமில்லை, கேரளாவில் வழக்கத்தைவிட 34% குறைவாக மழை பெய்துள்ளது. பிகார், ஜார்கண்ட், கிழக்கு உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 25% வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்துள்ளது.
இது தொடர்பாக ஐ.ஐ.டி காந்திநகரின் பேராசியர் மிஸ்ரா கூறுகையில், “ தென் இந்தியாவில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நீராதாரங்கள், பாறைகளால் ஆனது. இதனால் இவை தண்ணீரை அதிக காலம் சேமித்து வைத்திருக்காது. ஆனால் வட மாநிலத்தில் உள்ள கிணறுகள், தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைக்கும். இதனால் கர்நாடகாவை விட குறைந்த மழை பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் பெய்த, போதும் அங்கே தண்ணீர் பற்றக்குறை ஏற்படவில்லை.
மேலும் நீர்த்தேக்கங்களில் குறைந்த அளவு தண்ணீர் இருந்ததால், மழை குறைவாக பெய்துள்ளது. மத்திய நீர் ஆணையம், வெளியிட்ட சமீபத்திய தகவலில், கர்நாடக நீர் தேக்கங்களில், 26 % அளவு மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இந்த வருடம் 8.8 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் இருக்க வேண்டிய இடத்தில், 6.5 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவு தண்ணீர்தான் இருக்கிறது இதுவும் குறைந்து வருகிறது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“