What have Taliban said about afghan womens education : ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டில் உள்ள பெண்களின் நிலைமை உலகம் முழுவதும் விவாதிக்கும் பொருளாக உள்ளது. இதற்கு முந்தைய தாலிபான்கள் ஆட்சியின் போது (1996-2001) பெண்களுக்கு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் படிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த வார துவக்கத்தில் அமைக்கப்பட்ட ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த இடைக்கால அரசு பெண்கள் தனியார் பல்கலைக்கழங்களில் படிக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது. தாலிபான்களின் அறிவிப்பிற்கு பிறகு பல தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் திரைச்சீலைகள் கொண்டு பிரிக்கப்பட்ட வகுப்புகளில் மாணவர்கள் படிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பெண்களின் கல்வி குறித்து தாலிபான்கள் கூறியிருப்பது என்ன?
ஆண்கள் மட்டுமே இருக்கும் இடைக்கால அரசு, செய்தியாளர்கள் சந்திப்பில் மாணவிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் என்ன என்பதை விளக்கியது. தாலிபான்களின் இஸ்லாத் விளக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஹிஜாப் அணிந்தவாறே வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களிடம் இருந்து விலகி அமர வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இருபாலருக்குமான கல்வி என்பது இஸ்லாத் கொள்கைகளுடன் முரண்படுகிறது. ஆனால் அது தேசிய மதிப்புகளுடன் முரண்படுகிறது மற்றும் ஆப்கானியர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது” என்று உயர்கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி மேற்கோள் காட்டியதாக டாய்சே வேலா என்ற ஜெர்மன் நாட்டு செய்தி நிறுவனம் மேற்கோள்காட்டியுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் செல்வதற்கு தனித்தனியே நுழைவாயில்கள் தேவை என்று அரசு கூறியுள்ளது. பல்கலைக்கழகங்கள் வெவ்வேறு நேர அட்டவணைகளை அமைக்க வேண்டும் அல்லது வகுப்பறையின் நடுவில் இரு பாலினத்தாரையும் பிரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

காலி வகுப்பறைகளும் சாத்தியமற்ற சூழலும்
வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் “காபூலின் காலிப் பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட போது வெறும் 21 மாணவிகள் மட்டுமே வகுப்புகளில் பங்கேற்றனர். இந்த தனியார் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 2400 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களில் 60% பேர் பெண்கள்.
ஆனால் வாரக்கடைசியில் 21 என்ற எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. தாலிபான்கள் காபூலை கைப்பற்றியதால் அந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் அனைஅரும் நாட்டை விட்டு வெளியேறதால் வகுப்புகளை ஒருங்கிணைப்பது பெரும் கடினமாக இருந்தது.
இதே போன்று, கர்ஜிஸ்தான் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, கடந்த ஆண்டு பதிவு செய்த 1000 மாணவர்களில் 10 முதல் 20% மட்டுமே கல்லூரிக்கு வந்தனர். ஆப்கானிஸ்தான் அரசு கவிழ்ந்த பிறகு குறைந்தபட்சம் 30% மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று அவர் கூறினார்.
காந்தகாரில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பல்கலை நிர்வாகம் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக பாடம் நடத்த முடியாது என்று கூறியதை கார்டியன் மேற்கோள் காட்டியுள்ளது. இதற்கிடையில், ஹேரத் பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியர் கொள்கையின் மற்றொரு குறைபாட்டை சுட்டிக்காட்டினார். ஒரு சில பாடப்பிரிவுகளை படிக்க மாணவிகள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர் ஆனால் அவர்களுக்கு அந்த பாடங்களை கற்பிக்க பெண் பேராசிரியர்கள் இல்லை என்று கூறினார். ஏற்கனவே பல பெண்கள் தங்களின் கல்வியை தொடரும் எண்ணத்தை கைவிட்டுள்ளதாகவும் கூறினார்.
மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு வருவதை தவிர்த்து தெருவில் வருவதற்கே அச்சம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாலிபான்கள் ஆட்சி இல்லாமல் 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் கண்ட மாற்றங்கள் மத்தியில் மாணவர்கள் பற்றாக்குறை ஒரு பெரிய குறையாக இருந்தது. யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையின் படி, 2001ம் ஆண்டில் இருந்த பெண்களின் கல்வியறிவு விகிதம் 17%-ல் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்து 30% உயர்ந்தது.
பெண்கள் கல்வி கற்க சேரும் விகிதம் வியப்பை அளித்தது. 2001ம் ஆண்டு கிட்டத்தட்ட ஜீரோ என்ற நிலையில் இருந்த மாணவிகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 2.5 மில்லியனாக இருந்தது. 2021ம் ஆண்டில், ஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்த 10 குழந்தைகளில் 4 பேர் பெண் குழந்தைகளாக இருந்தனர் என்று யுனெஸ்கோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil