பார்லிமெண்ட் வண்ண புகை வீச்சு; இருவரும் பாதுகாப்பு தடுப்புகளை கடந்தது எப்படி?

பாராளுமன்ற பாதுகாப்பு மீறல்; குறைவான பாதுகாப்பு ஊழியர்கள், பார்வையாளர்கள் கேலரியின் உயரம் குறைப்பு, காலணிகள் சரிபார்க்கப்படாதது; இருவரும் பல்வேறு கட்ட தடுப்புகளை கடந்தது எப்படி?

பாராளுமன்ற பாதுகாப்பு மீறல்; குறைவான பாதுகாப்பு ஊழியர்கள், பார்வையாளர்கள் கேலரியின் உயரம் குறைப்பு, காலணிகள் சரிபார்க்கப்படாதது; இருவரும் பல்வேறு கட்ட தடுப்புகளை கடந்தது எப்படி?

author-image
WebDesk
New Update
parliament mp pass

புகைப் பெட்டிகள் காலணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. (எம்.பி டேனிஷ் அலி/எக்ஸ்)

Jignasa Sinha

குறைவான பாதுகாப்பு ஊழியர்கள், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள ஹவுஸ் மாடியில் இருந்து பார்வையாளர்கள் கேலரியின் உயரம் குறைக்கப்பட்டது, தாமதமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் காலணிகள் சரிபார்க்கப்படாதது - புதன்கிழமை லோக்சபா பாதுகாப்பு மீறலுக்கு பங்களித்த காரணிகளில் இவை அடங்கும் என்று பாராளுமன்ற பாதுகாப்பு சேவைகள் மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: What helped two men dodge layers of security inside Parliament House

மேலும், நாடாளுமன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லி போலீஸ் பாதுகாப்பு பிரிவு கூட்டம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், டிசம்பர் 6 அன்று, "டிசம்பர் 13 அல்லது அதற்கு முன்" நாடாளுமன்றத்தைத் தாக்கப் போவதாக அச்சுறுத்தியதை அடுத்து இந்தக் கூட்டம் நடந்தது.

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, ஒரு கூட்டம் நடத்தப்பட்டது மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க விவாதங்கள் நடத்தப்பட்டன என்பதை உறுதிப்படுத்தினார், ஆனால் இந்த ஆலோசனைகள் குர்பத்வந்த சிங் பன்னூனின் அச்சுறுத்தலுடன் இணைக்கப்படவில்லை என்று கூறினார். கடந்த ஒரு மாதத்தில், தில்லி காவல்துறை 250 பாராளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களை 300 ஆக உயர்த்தியுள்ளது.

Advertisment
Advertisements

டெல்லி காவல்துறையின் ஆதாரங்களின்படி, சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் டி மதியம் 1 மணிக்கு முன்னதாக பார்வையாளர்கள் கேலரியை அடைந்தனர். கேலரிகள் மொத்தம் ஆறு உள்ளன, இந்தக் கேலரிகள் எம்.பி.க்கள் அமரும் இடத்திற்கு மேலே அமைந்துள்ளது, மேலும் முன் வரிசை அவர்களுக்கு சுமார் 10 மற்றும் ஒன்றரை அடி உயரத்தில் உள்ளது.

இந்த உயரம் முந்தைய பாராளுமன்ற கட்டிடத்தில் இருந்ததை விட குறைவாக உள்ளது, இது ஆண்கள் குதிக்க உதவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "இதுபோன்ற ஒன்று நடப்பதைத் தடுக்க குறிப்பிடத்தக்க தடுப்பு அல்லது சுவர் எதுவும் இல்லை," என்று ஒரு அதிகாரி கூறினார்.

அதன்பின், லோக்சபா சபாநாயகர் மற்றும் பல்வேறு தள தலைவர்கள் கலந்துக் கொண்ட கூட்டத்தில், பார்வையாளர்கள் கேலரிகளுக்கு முன் கண்ணாடி நிறுவ ஆலோசனை வழங்கப்பட்டது.

எம்.பி.க்கள் சபைக்குள் இருப்பதைக் காணலாம், அங்கு ஒரு நபர் ஒரு குப்பியிலிருந்து மஞ்சள் புகையை வெளியேற்றினார். (புகைப்படம்: எதிர்க்கட்சி எம்.பி.)

சி.ஆர்.பி.எஃப் மற்றும் டெல்லி போலீஸ் அடங்கிய பாராளுமன்ற பாதுகாப்பு சேவைகளின் பணியாளர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், குறிப்பாக புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்டதிலிருந்து "தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்" வருகை தருகிறார்கள்,” ஆனால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, என்று கூறினார்.

301 பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமாக பாராளுமன்றத்திற்குள் பணியில் இருப்பார்கள், ஆனால் புதன்கிழமை 176 பேர் மட்டுமே இருந்தனர்.

"பேருந்துகளில் மாணவர்கள் மற்றும் மக்கள் வருகிறார்கள்... ஒவ்வொருவரின் பாஸ் மற்றும் ஐ.டி.,யை நாங்கள் சரிபார்க்க வேண்டும்," என்று ஒரு அதிகாரி கூறினார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், இருவரும் தங்கள் காலணிகளுக்குள் வண்ண புகை குப்பிகளை மறைத்து வைத்திருந்தனர், காலனிகள் பொதுவாக சரிபார்க்கப்படுவதில்லை.

எங்களிடம் ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் சோதனையும் செய்யப்படுகிறது. இருப்பினும், நாங்கள் வழக்கமாக காலணிகளை சரிபார்ப்பதில்லைமுதல் பார்வையில், புகை குண்டுகள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டதாகத் தெரிகிறது, எனவே இயந்திரங்கள் கண்டறியவில்லை,” என்று ஒரு அதிகாரி கூறினார், இரண்டு பேரும் எம்.பி.யின் பரிந்துரையின் பேரில் வந்திருப்பதும் அவர்களுக்கு பாதுகாப்பு அடுக்குகளை கடக்க உதவியது உண்மை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Parliament

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: