Nirupama Subramanian
அமெரிக்கா பயணம் செய்த இம்ரான் கான் கடந்த புதன்கிழமை வாஷிங்டனை இடமாக கொண்டு இயங்கும் United states Institute of Peace என்ற திங்க் டேங்கில் நடந்த விவாதத்தில் “30,000 to 40,000 ஆயுதமேந்திய மக்கள் ” தனது நாட்டில் “ஆப்கானிஸ்தான் அல்ல காஷ்மீரில் சண்டைபோடுவதற்காக பயிற்சி பெற்றுள்ளனர்” என சபையினரிடம் தெரிவித்தார்.
இந்தியா இந்த அறிக்கையை ஓர் வெளிப்படையான வாக்குமூலம் என்றும் , பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் “நம்பகமான மற்றும் மீளமுடியாத நடவடிக்கை” எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தது.
பாகிஸ்தானின் இயல்பான நிலையிலிருந்து இம்ரான் கானின் இந்த அறிக்கை எவ்வாறு மாறுபடுகிறது?
இம்ரான் ஒன்றும் வெளிப்படுத்தக்கூடாத அரசு ரகசியத்தை பகிரவில்லை . ஜிஹாதிகள் மற்றும் ஜிஹாதி அமைப்புகள் பாகிஸ்தானில் இருப்பது பாகிஸ்தானிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் அறியப்பட்ட ஒன்றே.
ஆனால் இதில் புதுமை என்னவென்றால் மக்கள் பிரதிநிதியாளர் அதிலும் குறிப்பாக ஒரு பிரதம மந்திரி இவ்வாறு பேசியிருப்பது . முந்தைய தலைவார்கள் எல்லாம் பாகிஸ்தானில் வாழும் ஜிஹாதிகளைப் பற்றி மறைமுகமாக அல்லது சுற்றிவளைத்து பேசியிருக்கிறார்கள். இந்த ஜிஹாதிகளால் பாகிஸ்தானுக்குள் ஏற்பட்ட இழப்பு , இந்தியாவின் சதி , தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் எப்படி இரையானது என்பதே அவர்கள் பேச்சின் சாராம்சமாய் இருந்தது . சுருக்கமாக, 40000 தீவிரவாதிகள் பாக்கிஸ்தான் நாட்டில் இருக்கிறார்கள் என்பது போன்ற வெளிப்படையான தகவலை இது வரை யாரும் சொன்னதில்லை.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அரசியல் சக்திபடைத்தவராய் இருந்தாலும் ,அரசியல் களத்தில் செல்வாக்குடையவராய் இருந்தாலும் ஜிஹாதிகளைப் பற்றி பேசினால் அதிகாரத்திலிருந்து தூக்கப்படுவார்,ஓரங்கட்டப்படுவார் அல்லது வேட்டையாடப்படுவார் . ஏனென்றால் முதல் ஆப்கான் போரிலிருந்தே , ஜிஹாத்தியம் அந்த நாட்டு பாகிஸ்தான் ராணுவத்திற்க்கும் , அதன் உளவு பிரிவான ஐஎஸ்ஐக்கும் சொந்தமானது . மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் திட்டங்களுக்கு ஆதரவாய் இருக்க வேண்டும், உடனப்பாடு இல்லையென்றால் அமைதியாய் இருக்க வேண்டும் .
நவாஸ் ஷெரிப் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதித்துறையால் வெளியேற்றப்பட்டார் . ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தையும் அதன் போக்கையும் கடுமையாக எதிர்த்தபோதே தனக்கான முடிவைத் தானே தேட ஆரம்பித்துவிட்டார். ராணுவத்தோடு முரண்பட்ட காரணத்தால் அவரது அரசியல் வாழ்க்கை ஊழல் வழக்கோடு முடிக்கப்பட்டது . ஷெரிஃபின் ராணுவத்துக்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளியிட்ட டவ்ன்(Dawn) என்ற செய்தித்தாளின் விற்பனை முடக்கப்பட்டது மேலும் ,அந்த பத்திரிகையாளரும் தேசத் துரோக வழக்கில் சிக்கவைக்கப் பட்டார்.
இதற்கு முந்தைய நிகழ்வில், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மஹ்மூத் அலி துரானி, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜிஹாதிகளால் தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டதையடுத்து அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
இதில் ஒரு பெரிய முரண்பாடு என்னவென்றால், ஜிஹாதிகள் எங்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை இன்னும் அந்த அரசு வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை ,ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வேதச சமூகங்களின் உந்துதலுக்குத் தள்ளப்படுகிறது . ஒத்துக்கொள்ளாத தீவிரவாதத்தை எப்படி ஒழிக்க முடியும் என்பதே அந்த முரண்பாடு.
மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு , பாகிஸ்தானின் FIA விசாரணையின் முடிவில் அது தன்நாட்டில் தான் திட்டம் போடப்பட்டது , பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்களால் நடத்திவைக்கப்பட்டது என்ற முடிவுக்கு பாகிஸ்தான் வந்தது . ஆனால் ,அப்போதும் கூட லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தாக்குதலுக்கும் இடையே உள்ள தொடர்பை அவைகள் உறுதிப்படுத்தவில்லை .
பாக்கிஸ்தான் நாட்டில் பல தலைவர்கள் லஸ்கர்-இ-ஜாங்வி, சிபா-இ-சஹாபா மற்றும் ஜமாஅத்-உத்-தாவா போன்ற குழுக்களுடன் வெளிப்படையாக உறவாடினாலும் ,அந்த உரையாடல்கள் கேள்விகேட்கப்படவில்லை , அரசியலாக்கப்படவில்லை , ஆங்காங்கே வரும் சில ஊடக அறிக்கைகளைத் தவிர.
2004 -ல் இனி என் நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அனுமதிக்காது என்று உறுதியளித்து இந்திய பிரதமரோடு கூட்டறிக்கை வெளியிட்டார் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரஃப் . இம்ரான் கானின் இன்றைய பேச்சுக்கு நிகரானதாய் அது இருத்தது என்பதில் மாற்று கருத்தில்லை .
இம்ரானின் அறிக்கை இந்தியாவிற்கு ஏதேனும் புதியதாய் இருந்ததா ? இருக்குமா ?
இம்ரான் சொல்லும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை தான் சற்று ஆச்சர்யமாக உள்ளது. ஏனென்றால் ,பாகிஸ்தானின் முக்கியம்வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்பு ஏஜென்சியான NACTA தனது இணையதளத்தில் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்க்கீழ் தடைசெய்யப்பட்டுள்ள 40 குழுக்கள் மற்றும் 8,307 தீவிரவாதிகள் என்று அடையாளமாக்கப்பட்ட தனி நபர்களை வைத்துயிருக்கிறது . இந்த பட்டியலை தான் , பயங்கரவாத நிதியுதவி தொடர்பாக தனது நாட்டை நோட்டமிடும் FATF அமைப்பிற்கும் கொடுத்தது .
இந்தியாவைப் பொறுத்தவரையில் , இம்ரான் கானால் சொல்லப்பட்ட அந்த எண்ணிக்கை முக்கியம், ஆனால் அதைவிட மிக முக்கியமானது காஷ்மீரில் தனது நாட்டிலிருந்து பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்கள் காஷ்மீரில் போராடியது என்கிற அவரது ஒப்புதல். இது பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நிரூபிக்கிறது.
ஆனால் லஷ்கர் பாகிஸ்தான் இராணுவத்தின் ஒரு பினாமி, மற்றும் இம்ரான் அடிப்படையில் அந்நாட்டு ராணுவத்தின் பிரதிபலிப்பு அல்லவா ?
தனக்கும் ராணுவத்திற்கும் எந்த வித கருத்து வேறுபாடு இல்லை என்பதை எப்போதும் அழுத்தமாக சொல்பவர் இம்ரான் கான் . ஆனால் இன்றைய அவரது ஒப்புதல் ராணுவத்திற்கு கண்டிப்பாக சில குழப்பங்களைத் தந்திருக்ககும் . முந்தைய அரசங்கள் உண்மையை சொல்லவில்லை என்று கொந்தளிக்கும் இம்ரான் கான் ஒன்றை மற்றும் மறந்துவிட்டார் . பாகிஸ்தானைப் பற்றிய உண்மைகள் அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமானது . நாட்டில் உண்மையெது, பொய்யேது என்பதை ராணுவமே முடிவு செய்கிறது . பாகிஸ்தானின் அரசாங்கள் உண்மையை வேடிக்கை பார்க்கும் இடத்தில் கூட இல்லை .
எனினும் ,தற்காலத்தில் இம்ரான் கானுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு வர வாய்ப்பில்லை . அமெரிக்கா வெற்றி பயணம் , டொனால்ட் டிரம்ப்யைக் கையாண்ட விதம் , டிரம்ப்பின் பாராட்டு போன்றவைகள் தான் பாக்கிஸ்தானில் பெரிதாக்கப்படுகின்றன . தீவிரவாதம் பற்றிய அவரது வாக்குமூலத்தை விவாதிக்க அங்கு யாருக்கும் மனம்வரவில்லை.
ஆனால் பாகிஸ்தானை நோட்டமிடும் FATF அமைப்பு கண்டிப்பாய் இம்ரான் கானின் எண்ணிக்கையை உற்றுநோக்கும்,கேள்விகேட்க தயாராகும்.
பின் , யாருக்காக ? எதற்காக? இந்த பேச்சு ….. ஏதேனும் உள்ளர்த்தம் உள்ளனவா ?
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி தடுப்பதை தவறிய பாகிஸ்தானை சர்வேதச சமுதாயங்களும் ,அமைப்புகளும் ஓரங்கட்டத் தொடங்கியுள்ள சூழ்நிலையில்தான் இந்த பேட்சை நாம் ஆராய வேண்டியுள்ளது . பாகிஸ்தான் தனது தீவிரவாத தடுப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இந்த ஆண்டு இறுதியில் FATF அதனை ப்ளாக்லிஸ்ட் செய்துவிடும் . அப்படி செய்துவிட்டால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் . சர்வதேச பணம் பாகிஸ்தானுக்குள் நுழையாது.
புல்வாமா-பாலகோட் அத்தியாயத்தின் போது, பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தில் தனக்கான ஆதரவாளர்களைக் காணவில்லை, மேலும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் மசூத் அசாரை உலகளாவிய தீவிரவாதி பட்டியலில் சேர்த்த விஷயத்தில் அதற்கு இருக்கும் அழுத்தம் இன்னும் கூர்மையாய் போனது . இதனால்,பாகிஸ்தான் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று ஒரு உணர்தல் இருப்பதாக தெரிகிறது. FATF இன் ஜூன் கூட்டத்திற்கு முன்னதாக, அது அதன் கடமைகலிலிருந்து தவறவில்லை என்பதை நிரூபிக்க சில நடவடிக்கைகளை எடுத்தது. பின்னர், அது ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தையும் கைது செய்தது.
இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், “முந்தைய அரசின் அழுக்கைத் துடைத்துக் கொண்டிருக்கிறேன் , சர்வேதச சமூகங்கள் மற்றும் அமைப்புகள் கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் ,நீங்கள் விடுத்த காலக் கெடுக்குள் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இவைகள் ” என்று இம்ரான் கான் உலகத்திற்கு சொல்வனவாய் உள்ளன .