scorecardresearch

கிராமங்களை சுத்தப்படுத்த “க்ளாப்” திட்டம்; ஆந்திர அரசின் புதிய முயற்சி

இந்த சிக்கலான திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஓடும் சாக்கடை நீரை 582 இடங்களில் சாய்ல் பயோ-டெக்னாலஜி சுத்தகரிப்பு முறையில் சுத்தகரிப்பது, சதுப்பு நில சுத்தகரிப்பு மற்றும் குளங்களை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

What is Andhra Pradesh’s CLAP campaign to clean up villages

Sreenivas Janyala 

Andhra Pradesh’s CLAP campaign to clean up villages : கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி அன்று ஆந்திர பிரதேசம் மாநிலம் க்ளீன் ஆந்திர பிரதேஷ்- ஜகனண்ணா ஸ்வச்சா சங்கல்ப்பம் ((Clean Andhra Pradesh (CLAP)-Jagananna Swachha Sankalpam programme ) என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. சுகாதார நிலைமைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பங்கேற்புடன் கழிவு மேலாண்மைக்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. வீதிகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் மாறாக குப்பை சேகரிக்க வரும் நபர்களிடம் அதனை கொடுக்க வேண்டும் என்று கிராமப்புற மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி 4097 குப்பை சேகரிக்கும் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். நவம்பர் மாத இறுதியில் கிராமப்புற வீடுகளில் இருந்து நேரடியாக சேகரிக்கப்படும் குப்பை 22 சதவீதமாக இருந்தது, ஆனால் ஜனவரி இறுதிக்குள் அது 61.50 சதவீதத்தை எட்டியுள்ளது. பல கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் ஏற்கனவே குப்பையில்லா கிராம சாலைகள் மற்றும் தெருக்களின் புகைப்படங்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர். பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, “இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதிக்குள் 100 சதவீத கிராமப்புற குப்பை சேகரிப்பு உள்ளிட்ட CLAP இன் கீழ் அனைத்து இலக்குகளையும் எட்டுவோம் என்று கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் மற்ற நோக்கங்கள் என்ன?

வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பது மட்டுமின்றி, திட மற்றும் திரவ குப்பைகளை தனித்தனியாக பிரிப்பது, கள கழிவு சுத்தகரிப்பு மற்றும் வீடுகளிலேயே குப்பைகளை மக்க வைத்து உரம் தயாரிக்க ஊக்கப்படுத்துவது போன்றவை இந்த திட்டத்தின் இதர நோக்கங்கள் ஆகும். மற்றுமொரு முக்கிய முயற்சி கிராமப்புறங்களை திறந்தவெளியில் மலம் கழித்தலை முடிவுக்கு கொண்டு வருதல். உண்மையில் 13,000 க்கும் மேற்பட்ட சர்பஞ்ச்கள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத (Open Defecation Free (ODF)) பிரச்சாரத்தை முன்னின்று வழிநடத்தி, தங்கள் கிராமங்கள் ODF ஆக இருப்பதையும், 2022 இறுதிக்குள் ODF பிளஸ் அந்தஸ்தை அடைவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ODF பிளஸ் கிராமம் என்பது ODF அந்தஸ்தைத் தக்கவைத்து, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை உறுதிசெய்து பார்வைக்குத் தூய்மையாக இருக்கும் ஒரு கிராமம் என வரையறுக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், ஆந்திரா மாநிலம் குப்பை இல்லாத மாநிலமாக மாற வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது. இந்த சிக்கலான திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஓடும் சாக்கடை நீரை 582 இடங்களில் சாய்ல் பயோ-டெக்னாலஜி சுத்தகரிப்பு முறையில் சுத்தகரிப்பது, சதுப்பு நில சுத்தகரிப்பு மற்றும் குளங்களை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த தூய்மை இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் யார் யார்?

CLAP தொடங்கப்படுவதற்கு முன்னதாக, UNICEF WASH (தண்ணீர், சுத்தம் மற்றும் சுகாதாரம்) நடத்திய துப்புரவு இயக்கம் குறித்த ஆன்லைன் பயிற்சித் திட்டத்தில் 13,000க்கும் மேற்பட்ட சர்பஞ்ச்கள் மற்றும் 1,200 மாவட்ட மற்றும் மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர். கிராம பஞ்சாயத்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள், அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள கிராம மற்றும் வார்டு செயலக உறுப்பினர்கள் மற்றும் ஜில்லா மற்றும் மண்டல் பரிஷத் வட்டாரங்களின் உறுப்பினர்களை அரசாங்கம் பணியில் அமர்த்தியுள்ளது.

வீடு வீடாகச் சென்று சேகரிப்பு இயக்கம் 60 சதவீதத்தைத் தாண்டியுள்ளது, மேலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இது 100%-த்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பலர் குப்பைகளை பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து வீசுவதால் மொத்த தூய்மையை பராமரிப்பது கடினம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கழிவுகளை பிரித்தெடுத்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகிய நோக்கங்களும் மெதுவாக நிறைவேற்றப்பட்டு வருவதாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: What is andhra pradesh clap campaign to clean up villages