பறவைக் காய்ச்சல் என்றால் என்ன? மனிதர்களுக்குப் பரவுமா?

2018 ஜூலை 5 ஆம் தேதியிலிருந்து பறவைக் காய்ச்சலில் இருந்து (ஹெச்-5என்-8 மற்றும் ஹெச்-5என்-1) விடுபட்டதாக இந்தியா அறிவித்தது.

By: Updated: January 12, 2021, 06:39:33 PM

கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் நோய் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

நீர் நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகள், பறவை சந்தைகள், உயிரியல் பூங்காக்கள், கோழி பண்ணைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், இறந்த பறவைகளை முறையாக அப்புறப்படுத்தவும், கோழி பண்ணைகளின் உயிரி-பாதுகாப்பை பலப்படுத்தவும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

பறவைக் காய்ச்சல் என்பது வைரஸ் நோய்த் தொற்றாகும். இது பெரும்பாலும் பறவைகளைத் தாக்குகின்றன . ஆனால் மனிதர்களுக்கும், பிற விலங்குகளுக்கும் பரவும் ஆற்றல் கொண்டுள்ளது.  H5N1 வைரஸ் பறவைகளில்  கடுமையான வைரஸ் நியூமோனியா, சுவாச அழுத்தம், பல அங்கங்கள் செயலிழப்பு போன்றவைகள் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது .

எனவே, பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள், சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கைகள் என்ன?  என்பதை இங்கே பார்த்து தெரிந்து கொள்வோம்.

கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேஷ், ஹிமாச்சல் பிரதேஷ், ஹரியானா, குஜராத், உத்தரப் பிரதேஷ், மகாராஷ்டிரா, தில்லி மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இடம்பெயர்ந்து வரும் பறவைகள் மூலம் இன்ஃபுளுவென்சா ஏ வைரஸ் பரவுகிறது. ஏசியன் HPAI ஹெச்-5என்-1 வைரஸ் வங்க தேசம், சீனா, இந்தோனேசியா, எகிப்து,  தாய்லாந்து, வியட்நாம், ஆகிய நாடுகளில் தொடர்புடையதாக (Endemic) கருதப்படுகிறது.

 

1997ல் ஹாங்காங் நாட்டில் பறவைகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்  வகைகள் வெப்ப நிலையில் அழியக்கூடும் என்பதால்  மனிதரிலிருந்து மனிதருக்குப் பரவும் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. 2003 முதல் 2014 வரை ஹெச்-5என்- 1 வைரஸ் நோய்த் தொற்று காரணமாக 407 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

2006ல் முதன் முதலாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. 2௦08 மற்றும் 2014ல் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி இருப்பதாக தெரிய வந்தது.  2018 ஜூலை 5 ஆம் தேதியிலிருந்து பறவைக் காய்ச்சலில் இருந்து (ஹெச்-5என்-8 மற்றும் ஹெச்-5என்-1) விடுபட்டதாக இந்தியா அறிவித்தது.

 

 

ஹெச்-5என்-1 வைரஸ் நோய்த் தாக்குதல் மனிதர்களில் 10ல் 6 பேருக்கு உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய வைரஸ்கள் இலகுவில் மாற்றமுறக் கூடியன. இவ்வாறு மாற்றமுற்றுப் புதிதாக உருவாகும் வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குப் பரவும் பெருந்தொற்றாக உருவாக கூடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:What is bird flu how bird flu spread status of bird flu in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X