இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன?

உலக அளவில் 4573 கடற்கரைகள் மற்றும் படகு சுற்றுலா தளங்கள் இந்த சான்றிதழை பெற்றுள்ளது.

By: Updated: October 13, 2020, 02:58:58 PM

What is Blue Flag certification, awarded to 8 Indian beaches :  இந்தியாவில் அமைந்திருக்கும் 8 கடற்கரைகளுக்கு ப்ளூ ஃப்ளாக் சான்றிதழை வழங்கியுள்ளது சிறப்பு சர்வதேச நடுவர் மன்றம். இம்மன்றத்தில் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (United Nations Environment Programme (UNEP), ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE), மற்றும் இயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியம் (IUCN) உறுப்பினர்களாக உள்ளது.

கேரளாவின் கப்பட், குஜராத்தின் சிவராஜ்பூர், டையூவின் கோக்லா, கர்நாடகாவின் காசர்கோட் மற்றும் பதுபித்ரி, ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிசாவின் கோல்டன், மற்றும் அந்தமானின் ராதாநகர் ஆகிய கடற்கரைகளுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ப்ரகாஷ் ஜவடேகர் ஞாயிற்றுக் கிழமை அன்று, எந்த ஒரு நாட்டிலும் 8 கடற்கரைகளுக்கு முதன்முறையாகவே ப்ளூ ஃப்ளாக் தரச்சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்தியாவின் நிலைத்த மேம்பாட்டிற்கான முயற்சி மற்றும் இயற்கை பாதுகாப்பிற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் இது என்று கூறினார்.

To read this article in English

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சில கடற்கரைகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (சி.ஆர்.இசட்) அனுமதிக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் வசதிகளின் பட்டியலை அறிவிக்கும் ஒரு கெசெட் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது, அவை ‘Blue Flag’ சான்றிதழைப் பெறுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன?

ஒரு கடற்கரை இந்த சான்றிதழை வாங்க இயலும் அல்லது படகு சுற்றுலாத்தளம் இந்த சான்றினை வாங்க இயலும். டென்மார்க்கை சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பால் இந்த விருது வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல், கல்வி, பாதுகாப்பு, மற்றும் அணுகுதல் தொடர்பான பல்வேறு கடுமையான அளவுகோளை இது பின்பற்றுகிறது. இந்த விருதினை வாங்க இந்த அளவுகோளை நிச்சயமாக கடற்கரைகள் பெற்றிருக்க வேண்டும். எஃப்.இ.இ. உறுப்பி நாடுகளுக்கு ஆண்டு தோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

நீல கொடி சான்றிதழ் வழங்கும் முறை 1985ம் ஆண்டு ஃப்ரான்ஸில் துவங்கப்பட்டது. 2001ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. நீர் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற நான்கு முக்கிய அளவுகோளின் கீழ் நன்னீர் மற்றும் கடல் பகுதிகளில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தற்போது 47 நாடுகள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றன. 4573 கடற்கரைகள் மற்றும் படகு சுற்றுலா தளங்கள் இந்த சான்றிதழை பெற்றுள்ளது.

ஜூலை 2019 அன்று, சுற்றுச்சூழல் அமைச்சகம் ப்ளூ ஃப்ளாக் வாங்க தகுதியான கடற்கரைகளாக ஷிவ்ராஜ்பூர் (குஜராத்), போகாவே (மகாராஷ்ட்ரா), கோக்லா (டையூ), மிராமர் (கோவா), காசர்கோட் (கர்நாடகா), பதுபித்ரி (கர்நாடகா), கப்பட் (கேரளா), ஈடன் (புதுவை), மகாபலிபுரம் (தமிழகம்), ருஷிகொண்டா(ஆந்திரா), கோல்டன் (ஒடிசா), மற்றும் ராதாநகர் (அந்தமான்) ஆகிய கடற்கரைகளை அடையாளம் கண்டது.

சி.ஆர்.சி. யில் குறிப்பிடப்பட்ட கடற்கரைகளில் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் என்னென்ன?

கழிப்பறைகள், ஆடைகள் மாற்றும் இடம், ஷவர் பேனல்கள்
க்ரே வாட்டார் ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட்
திடக்கழிவு மேலாண்மை
சோலார் பவர் பேனல்
சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
கடற்கரையை அணுகுவதற்கான சாலைகள்
லேண்ட்ஸ்கேப் லைட்கள்
அமரும் மேஜைகள் மற்றும் குடைகள்
உடற்பயிற்சி அமைப்புகள்
சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை
முதல் உதவி மையம்
க்ளோக் ரூம்கள்
பாதுகாப்பு கண்காணிப்பு கோபுரம்
சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அட்டைகள்
வேலிகள்
வாகனங்கள் நிறுத்தும் இடம்
நுழைவு கதவு
உள்கட்டமைப்புகள்

இந்த நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் சி.ஆர்.இசட் அறிவிப்பு, தீவு பாதுகாப்பு மண்டல அறிவிப்பு மற்றும் தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்புகள் ஆகியவற்றின் கீழ் முன் அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:What is blue flag certification awarded to 8 indian beaches

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X