Advertisment

காலநிலை நிதி என்றால் என்ன, வளரும் நாடுகளுக்கு இது ஏன் தேவை?

200 உலக நாடுகளின் அரசாங்கம் பங்கேற்ற COP28 கூட்டத்தில் காலநிலை நிதி முக்கிய தலைப்பாக இருந்தது. குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையே ஏன் இது ஒரு தீவிரமான சர்ச்சையாக உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Climate.jpg

COP28 காலநிலை உச்சி மாநாட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்தி வருகிறது. இந்த நாடு தனியார் துறை மூலதனத்தை காலநிலை முதலீடுகளுக்கு திசை திருப்பவும், உலகளாவிய தெற்கிற்கான நிதியுதவியை மேம்படுத்தவும் ஒரு புதிய நிதிக்கு $30 பில்லியன் பங்களிப்பதாக டிசம்பர் 1 அன்று அறிவித்தது.

Advertisment

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர்  முகமது பின் சயீத் அல்-நஹ்யான், இந்த நிதியானது "குறிப்பாக காலநிலை நிதி இடைவெளியைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் 2030-ம்  ஆண்டிற்குள் 250 பில்லியன் டாலர் முதலீட்டை கொண்டு வர ஊக்கமளிக்கும் என்றும் கூறினார். 

200 உலக நாடுகளின் அரசாங்கம் பங்கேற்ற COP28 கூட்டத்தில் காலநிலை நிதி முக்கிய தலைப்பாக இருந்தது. குறைந்த வருவாய்  கொண்ட நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையே இது ஒரு தீவிர சர்ச்சையாக உள்ளது. 

காலநிலை நிதி என்றால் என்ன?

காலநிலை நிதி என்பது காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுக்க அல்லது மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் பெரிய அளவிலான முதலீடுகளைக் குறிக்கிறது.

தழுவல் என்பது காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை முன்னறிவிப்பது மற்றும் அவை ஏற்படுத்தக்கூடிய சேதத்தைத் தடுக்க அல்லது குறைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதை உள்ளடக்கியது. தழுவல் நடவடிக்கைகளின் ஒரு உதாரணம், கடல் மட்ட உயர்வுக்கு எதிராக கடலோர சமூகங்களைப் பாதுகாப்பதற்கான உள்கட்டமைப்பைக் கட்டமைப்பதை உள்ளடக்கியது.

இதற்கிடையில், தடுப்பது என்பது வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் (GHG) உமிழ்வைக் குறைப்பதை உள்ளடக்கியது, இதனால் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறைவாக இருக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பங்கை அதிகரிப்பதன் மூலம் தணிப்பு செய்யப்படுகிறது, காடுகளை விரிவுபடுத்துதல் போன்றவை மூலமும் செய்யப்படுகிறது. 

வளரும் நாடுகள் ஏன் காலநிலை நிதியைக் கோருகின்றன?

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க வளர்ந்த நாடுகள் தங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று வளரும் நாடுகள் வலியுறுத்துகின்றன. ஏனெனில் இப்போதுள்ள rich world’s emissions கடந்த 150 ஆண்டுகளில் 
முதலில் காலநிலை பிரச்சனையை ஏற்படுத்தியதாக கூறுகின்றன.

அதனால் தான், 1992 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாடு (UNFCCC) - COP உச்சி மாநாடுகள் நடைபெற்று வரும் தாய் ஒப்பந்தம் -  அதிக வருமானம் கொண்ட நாடுகள் வளரும் நாடுகளுக்கு காலநிலை நிதியை வழங்க வேண்டும் என்பதாகும். 

எனினும் 2009 வரை எழுத்துப்பூர்வ வாக்குறுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த ஆண்டு, வளர்ந்த நாடுகள் இறுதியாக 2020 ஆம் ஆண்டுக்குள் வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு $100 பில்லியன் வழங்க ஒப்புக்கொண்டன. 2010 இல், பசுமை காலநிலை நிதியம் (GCF) ஒரு முக்கிய விநியோக வழிமுறையாக நிறுவப்பட்டது. 

2015 பாரிஸ் ஒப்பந்தம் இந்த இலக்கை வலுப்படுத்தியது, மேலும் அதை 2025 வரை நீட்டித்தது. இருப்பினும், அதிக வருமானம் பெறும் நாடுகள் இன்னும் தங்கள் உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. 

காலநிலை நிதி எவ்வளவு தேவை?

UNFCCC நிலைக்குழுவின் 2021 பகுப்பாய்வின்படி, வளரும் நாடுகளுக்கு 2030க்குள் குறைந்தபட்சம் 5.8 டிரில்லியன் டாலர்கள் தேவைப்படுகின்றன. இது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளில் (NDCs) குறிப்பிடப்பட்டுள்ளது - இது தேசிய உமிழ்வைக் குறைப்பதற்கும், காலநிலையின் தாக்கங்களுக்கு ஏற்பவும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான ஒரு அவுட்லைன்.  இதன் பொருள் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் $600 பில்லியன் தேவைப்படுகிறது, இது வளர்ந்த நாடுகளால் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை விட மிகக் குறைவு.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அறிக்கையின்படி, பல நாடுகளில் இதுகுறித்தான தரவுகள் இல்லாதது 
விஷயத்தை மேலும் மோசமாக்குகிறது.  

கருவிகள் மற்றும் அத்தகைய தேவைகளைத் தீர்மானிப்பதற்கும் செலவு செய்வதற்கும் உள்ள திறன் இல்லாமை, இந்த புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிடப்படலாம் என்பதைக் குறிக்கிறது". UNFCCC மதிப்பீட்டில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கங்களைச் சமாளிக்க அரசாங்கங்கள் செய்யும் பெரும் செலவுகள் சேர்க்கப்படவில்லை. 

2022-ம் ஆண்டு நடைபெற்ற COP27-ல்  நாடுகளால் அறிவிக்கப்பட்ட இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி பொறிமுறையின் கீழ் இந்த குறிப்பிட்ட வகை செலவினம் தனித்தனியாக பரிசீலிக்கப்படுகிறது - இந்த நிதி இறுதியாக COP28 இல் சமீபத்தில் தொடங்கப்பட்டது, ஆனால் அதன் அளவு அல்லது நிரப்புதல் சுழற்சி தெளிவாக இல்லை. 

2022-ம் ஆண்டில், புகழ்பெற்ற காலநிலை பொருளாதார நிபுணர் நிக்கோலஸ் ஸ்டெர்ன் தனது அறிக்கையில், 2030 ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் $2 டிரில்லியன் டாலர்கள் வளரும் நாடுகளுக்குத் தேவைப்படும். தங்களின் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கவும், காலநிலை முறிவின் விளைவுகளைச் சமாளிக்கவும் தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளார்.

காலநிலை நிதி எவ்வளவு வழங்கப்படுகிறது?

வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் உண்மையான பணத்தின் அளவு குறித்து பல்வேறு அமைப்புகள் விவாதித்துள்ளன. 

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) தரவு படி, கடந்த ஆண்டு பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் பிற பணக்கார நாடுகளின் குழு - வளர்ந்த நாடுகளுக்கு 2020 இல் 83.3 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளன என்று கூறியது. காலநிலை நிதியாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு வழங்கியதாக கூறுகிறது.

இருப்பினும், ஆக்ஸ்பாம் இந்த தொகை எண்ணிக்கையை எதிர்த்தது.  "ஆக்ஸ்பாம் 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட காலநிலை நிதியின் 'உண்மையான மதிப்பு' $21-24.5 பில்லியன் என்று கூறுகிறது. பப்ளிக் ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தின் தரவு $68.3 பில்லியன் என்பதை எதிர்த்தது.  திரட்டப்பட்ட தனியார் நிதியுடன் சேர்த்து மொத்தம் $83.3 பில்லியன் வழங்கப்பட்டதாக கூறிய தரவை எதிர்த்தது. 

மேலும், அதிக வருமானம் பெறும் நாடுகள் பெரும்பாலான பணத்தை சலுகையற்ற கடனாக வழங்குவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளன. "இது பிராந்தியங்கள் மற்றும் வருமானக் குழுக்களில் கடன் அழுத்தங்களைச் சேர்க்கும்" என்று ஒரு ஐ.நா அறிக்கை கூறுகிறது. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/explained-climate/what-is-climate-finance-cop-28-9054382/

 அரசு சாரா நிறுவனமான கேர் இன்டர்நேஷனல் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், 2011 முதல் 2020 வரை 23 பணக்கார நாடுகளால் வழங்கப்பட்ட காலநிலை நிதியில் 52%, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்கள் உட்பட, பெண்கள் உரிமைகள், வெளியுறவுக் கொள்கை, வளர்ச்சி வரவு செலவுத் திட்டங்களுக்குச் சென்ற பணமாக இருந்தது என்று  கூறியது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

 

Climate Change
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment