ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
இரகசியத்தைத் தக்க வைத்துக் கொள்ள, பட்ஜெட்டில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் பட்ஜெட் நாள் வரை அமைச்சகத்தின் 'லாக்-இன்' அறையில் பத்திரமாக வைக்கப்படுவார்கள்.
இரகசியத்தைத் தக்க வைத்துக் கொள்ள, பட்ஜெட்டில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் பட்ஜெட் நாள் வரை அமைச்சகத்தின் 'லாக்-இன்' அறையில் பத்திரமாக வைக்கப்படுவார்கள்.
மத்திய நிதி அமைச்சகம் நேற்று தனது பாரம்பரிய ஹல்வா விழாவை அதன் தலைமையகத்தில் கொண்டாடியது. இந்த விழா மத்திய அரசின் பட்ஜெட் அச்சிடும் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த விழாவிற்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
மத்திய அமைச்சகம் தனது ட்விட்டரில்,"பட்ஜெட் 2020 ஆவணங்களை அச்சிடுவதன் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் வடக்குசாலையில் இன்று ஹல்வா விழா நடைபெற்றது" என்று பதிவு செய்துள்ளது.
தாக்கூர் தனது ட்வீட்ட்டர்,“இன்று வடக்கு தொகுதியில் நடைபெற்ற பட்ஜெட் அச்சிடும் செயல்முறை / ஹல்வா விழா தொடங்குகிறது. பட்ஜெட்டின் இரகசியத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, பட்ஜெட் நாள் வரை அதில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் அமைச்சகத்தின் 'லாக்-இன்' அறையில் பத்திரமாக வைக்கப்படுவார்கள்"என்று பதிவு செய்திருந்தார்.
பல வருடங்களாக நடத்தப்படும் இந்த பாரம்பரிய விழாவில்- ஒரு பெரிய ‘கடாயில்’ (பெரிய பானையில்) இனிப்பு உணவான ‘ஹல்வா’ தயாரிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் அமைச்சகத்தில் பணிபுரியும் முழு ஊழியர்களோடு, ஹல்வாவை பகிர்ந்து உண்ணும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்.
பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா அறிக்கையின்படி, இனிப்பு டிஷ் வழங்கப்பட்ட பிறகு - பட்ஜெட் தயாரித்தல் மற்றும் அச்சிடும் பணியுடன் நேரடியாக தொடர்புடைய அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் அமைச்சகத்தில் மட்டும் தான் தங்கியிருக்க வேண்டும். பட்ஜெட் நாள் வரும்வரை இந்த ஊழியர்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் பட்ஜெட்டை அச்சிடுவதில் சுமார் 100 அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். இந்த அதிகாரிகளுக்கு தங்களது அன்பானவர்களுடன் தொலைபேசி மூலமாகவோ அல்லது எந்த வகையான தொலை தொடர்பு மூலமாகவோ தொடர்பு கொள்ள அனுமதி இல்லை. நிதி அமைச்சகத்தின் மிக மூத்த அதிகாரிகள் மட்டுமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே, பட்ஜெட் தயாரிப்பு செயல்முறையின் இரகசியத்தை பராமரிக்கவே இந்த ஹல்வா விழா அனுசரிக்கப்படுகிறது.