Advertisment

K417N பிறழ்வுடன் காணப்படும் கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் மாறுபாடு என்றால் என்ன?

இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் இந்த பிறழ்விற்கு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Delta Plus

Delta Plus : டெல்டா மாறுபாட்டுடன் காணப்படும் கொரோனா தொற்றால் இந்தியாவில் 40க்கும் மேற்பட்டோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் நாடு முழுவதும் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்த டெல்டா மாறுபாடு அதிகமாக பரவும் தன்மை கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மாறுபாடு குறித்து இதுவரை நமக்கு தெரிந்தது என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

Advertisment

டெல்டா ப்ளஸ் என்றால் என்ன?

இந்தியாவில் காணப்படும் இந்த மாறுபாட்டை டெல்டா ப்ளஸ் என்று வழங்குகிறோம். ஜூன் 11ம் தேதி அன்று இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் முதன்முதலாக இது இடம் பெற்றிருந்தது. இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் டெல்டா மாறுபாட்டின் துணை பிரிவை சேர்ந்தது இந்த மாறுபாடு. K417N எனப்படும் ஸ்பைக் புரத மாற்றத்தை பெற்றுள்ளது. இது தென் ஆப்பிரிக்காவில் காணப்பட்ட பீட்டா மாறுபாட்டிலும் காணப்பட்டது.

இந்த பிறழ்வு, டெல்டா மாறுபாட்டின் தற்போதுள்ள பிற அம்சங்களுடன் இணைந்து மேலும் கொரோனா வைரஸை பரப்பக் கூடியதாக மாறிவிடும் என்று கவலை அடைந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

K417N பிறழ்வு பீட்டா மாறுபாட்டில் (பி .1.351 பரம்பரை) இருப்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால், இந்த பிறழ்வில் நோய் எதிர்ப்பு சக்தியை முறித்து முன்னேறி செல்லும் பண்புகள் உள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் காக்டெய்லின் செயல்திறனை இந்த பிறழ்வு குறைப்பதாக இந்திய வைரல் தொற்று நோயியல் நிபுணர் ஷாகித் ஜமீல் கூறியுள்ளார்.

எங்கெல்லாம் இந்த பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது?

ஜூன் 16 அன்று 197 வழக்குகள் 11 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் (36), கனடா (1), இந்தியா (8), ஜப்பான் (15), நேபாளம் (3), போலந்து (9), போர்ச்சுகல் (22), ரஷ்யா (1), சுவிட்சர்லாந்து (18), துருக்கி (1), அமெரிக்கா (83).

புதன்கிழமை அன்று மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா மற்றும் கேரள மாநிலங்களில் 40 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், குறிப்பிடதக்க அளவிற்கு விரைவாக இம்மாநிலங்களில் அந்த நோய் தொற்று பரவவில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது. இந்தியாவில் ஆரம்ப வழக்கு ஏப்ரல் 5 அன்று எடுக்கப்பட்ட மாதிரியிலிருந்து உறுதி செய்யப்பட்டது.

பிரிட்டன் தனது முதல் 5 வழக்குகள் ஏப்ரல் 26 அன்று வரிசைப்படுத்தப்பட்டதாகவும், அவை நேபாளம் மற்றும் துருக்கியிலிருந்து பயணம் செய்த தனிநபர்களின் தொடர்பால் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் இந்த பிறழ்விற்கு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

கவலைகள் என்ன?

இந்த பிறழ்வுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனை சோதிக்க இந்தியாவிலும் உலக அளவிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. டெல்டா பிறழ்வின் ஒரு பகுதியாக இந்த மாறுபாட்டை WHO கண்காணித்து வருகிறது, கூடுதல் பிறழ்வுகளுடன் மாறுபாடுகள் ஏற்படும் போது அது கவலை அளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) ராய்ட்டர்ஸுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு, இந்த மாறுபாடு பொதுவானதாகத் தெரியவில்லை, தற்போது டெல்டா வழக்குகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டுள்ளது … டெல்டா மற்றும் பிற புழக்கத்தில் உள்ள மாறுபாடுகள் அதிக அளவு தொற்று பரவுதலுக்கு காரணமாக அமைந்ததால் பொது சுகாதார அபாயமாக இருக்கின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தொற்றுகள் உறுதியான பகுதிகளில் தடம் அறிதல், அதிக சோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது. உலகில் மோசமான கொரோனா தொற்று பாதிப்பை சந்தித்த நாடாக இந்தியா மாறியுள்ள நிலையில், டெல்டா ப்ளஸ் மாறுபாடு புதிய அலைகளை உருவாக்கும் என்ற கவலை அதிகமாக உள்ளது.

பிறழ்வு இந்தியாவில் மூன்றாவது அலைக்கு வழிவகுக்காது - இது கோவிட்-பொருத்தமான நடத்தையையும் சார்ந்துள்ளது, ஆனால் இது ஒரு காரணமாக இருக்கலாம்" என்று அரசு நடத்தும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானி தருண் பட்நகர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment