Advertisment

What is FaceApp : ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் ஆப் என்றால் என்ன? அதையொட்டி எழும் அந்தரங்க தனியுரிமை கவலைகள்!

FaceApp AI, Privacy Policy : இறுதியாக பயனர்கள் தங்களுடைய எல்லா தகவல்களையும் நீக்க ஃபேஸ் ஆப்-ஐக் கோரலாம் என்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FaceApp Old Filter, FaceApp Explained, What is FaceApp

FaceApp Old Filter

ஹன்சா வெர்மா

Advertisment

FaceApp Explained : தற்போது ஃபேஸ் ஆப் என்ற ஒரு ஆப் இணையத்தில் வைரலாகி உள்ளது. அதோடு அது சில செய்திகளையும் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆப் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி (Artificial Intelligence) பயனர்களுக்கு அவர்களின் வயதான முதுமை தோற்றத்தை காட்டுகிறது. ஆனால், இந்த ஆப் சில அந்தரங்க தனியுரிமை தொடர்பான கவலைகளை உருவாக்கியுள்ளது.

ஃபேஸ் ஆப் என்ற ஆப் தற்போது வைரலாகி உள்ளது, அதோடு அது சில செய்திகளையும் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆப் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி (Artificial Intelligence) பயனர்களுக்கு அவர்களின் வயதான முதுமை தோற்றத்தை காட்டுகிறது. இந்த ஆப் அதனுடைய முழு பதிப்பில் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும், இது ஐபோன் இயங்குதள ஆப் ஸ்டோரில் 121 நாடுகளில் பயன்பாட்டில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. ஆனால், இந்த ஆப் உண்மையில் 2017 ஆம் ஆண்டு ரஷ்யன் ஸ்டார்ட் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சில அந்தரங்க தனியுரிமை தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியது. மேலும், பயனர்களின் தகவல்களை ரஷ்ய சர்வருக்கு அனுப்பப்படுகிறது என்று பயனர்களிடையே அச்சம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆப் சில அந்தரங்க தனியுரிமை தொடர்பான கவலைகளை உருவாக்கியுள்ளது.

மேலும், இந்த ஆப் பயனர்களின் போனில் உள்ள மொத்த போட்டோ காலரிகளையும் பெறக்கூடியதாக இருந்தது.  பயனர்களின் சில கவலைகள் குறித்து ஃபேஸ் ஆப் நிறுவனர் யாரோஸ்லாவ் கோன்சரோவ் விளக்கம் அளித்துப் பேசுகையில், “இந்த ஆப் தனியுரிமை கொள்கைகளின் படி, தகவல்கள் ரஷ்யாவுக்கு மாற்றி தருவதில்லை எனவும். அதனால், அந்தரங்கம் தொடர்பான கவலைகள் இல்லை என்று கூறினார். இந்த ஆப் நிச்சயமாக உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் உள்பட ஏராளமான பயனர்களை கவர்ந்துள்ளது.

ஃபேஸ் ஆப் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

ஃபேஸ் ஆப் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ போன் இயங்குதளங்களில் கிடைக்கிறது. இது செயற்கை நுண்ணறிவு மூலம் பயனர்களின் போட்டோக்களை கொண்டு பயனர்கள் விரும்பிகிறபடி அவர்கள் வயதானவர்களாகவோ அல்லது இளைஞர்களாகவோ இருக்கும்போது எப்படி இருப்பார்கள் என்பதை காண்பிக்கிறது. இது செல்பிகளில் அல்லது பயனர்களின் தாடிகளுக்கு கொஞ்சம் புன்னகையை சேர்க்கலாம். மேலும், இந்த ஆப் இதற்காக நரம்பியல் நெட்வொர்க்களை நம்பியிருக்கிறது. ஆனாலும், அதனுடைய பயனர்களின் வயதான தோற்றத்தைக் காட்டும் செயலி வைரலாகிவிட்டது. எளிதாக ஒரு செல்ஃபி போட்டோவை பதிவேற்றுவதன் மூலம் அது மக்களுக்கு, அவர்கள் வயதாகிவிட்டால் எப்படி இருப்பார்கள் என்ற கண்ணோட்டத்தை அளிக்கிறது. இந்த ஆப் பயன்பாட்டில் சில அம்சங்கள் மட்டுமே இலவசமாக உள்ளன.

ஃபேஸ் ஆப்-ஐப் பற்றிய அந்தரங்க கவலைகள் என்ன?

ஃபேஸ் ஆப் எழுப்புகின்ற ஒரு முக்கிய பாதுகாப்புக் கவலை என்னவென்றால், பயனர்கள் பதிவேற்றிய புகைப்படம் உள்ளிட்ட உள்ளடக்கங்களை ஃபேஸ் ஆப் பயன்படுத்தலாம். அதில் பெரும்பாலும் படங்களாக இருக்கும். அவற்றை அதன் விதிமுறைகள் மற்றும் சேவைகளுக்கு உடன்படும் நபர்களுடையதை மக்களுக்காக வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தும்.

ஃபேஸ் ஆப்பின் விதிமுறைகள் மற்றும் சேவைகளின்படி அதன் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த நிரந்தரமான, மாற்றமுடியாத காப்புரிமை இல்லாமல் உலகளாவிய உரிமத்தைக் கேட்கின்றன. அதாவது, இந்த ஆப்பின் எந்தவொரு முறையையும் பயன்படுத்த பதிவேற்றப்பட்ட எந்த போட்டோவையும் உலகில் எங்கு வேண்டுமானாலும் விளம்பர நோக்கங்களுக்காக அந்நிறுவனத்தால் பயன்படுத்தப்படலாம். மேலும், அது பயனர்களுக்கு தெரியாமல் போகவும்கூட வாய்ப்புகள் உள்ளன.

முக்கியமாக ஃபேஸ் ஆப்பிற்கு பயனர்கள் உள்நுழைய தேவையில்லை. 99 சதவீதம் பேர் (ஃபேஸ் ஆப்பின் தகவல்களின்படி) எந்த போட்டோ யாருடையது என்பதை தொடர்புபடுத்த எந்த வழியும் இல்லை. சுருக்கமாக, ஒரு நபரை அடையாளம் காண வழி இல்லை. எனவே இது இயந்திர கற்றல் வழிமுறைகளைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அநாமதேய தகவல்கள் என வகைப்படுத்தலாம். ஆனால், மற்றபடி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு இது.

மேலும், இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த ஆப் போட்டோக்களை உள்நாட்டில் சேமிப்பதைவிட கிளவ்டில் பதிவேற்றுகிறது. இதற்கு அந்த நிறுவனம் கூறுகையில், ஃபேஸ் ஆப்பின் செயல்திறன், மற்றும் பயணர்களின் வருகைக்கு உதவுவதாக கூறுகின்றன. ஃபேஸ் ஆப்பின் அறிகையில், பெரும்பாலான படங்கள் பதிவேற்றி 48 மணி நேரத்துக்குள் அவர்களுடைய சர்வரிலிருந்து நீக்கிவிடுகிறது. இருப்பினும் நிறுவனம் பயன்படுத்தும் ஏ.டபில்யூ.எஸ் மற்றும் கூகுள் கிளவுடிலிருந்து புகைப்படங்கள் நீக்கப்பட்டனவா என்பது குறித்து தெளிவு இல்லை. இருப்பினும், சில சாதனங்களில் செயலாக்க சக்தியின் பற்றாக்குறையை சமாளிக்க மற்ற பயன்பாடுகளும் உள்ளன.

மேலும், இது பயனர்களின் போன் கேலரியில் இருந்து அதன் சேவையகங்களில் எல்லா புகைப்படங்களையும் பதிவேற்றாது என்று ஃபேஸ் ஆப் கூறியுள்ளது. இது பயனர்களின் முக்கிய கவலையாக இருந்தது. மேலும், எடிட்டிங்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

ரஷ்யாவுடனோ அல்லது ரஷ்யாவில் உள்ள அதன் முக்கிய டி குழுவுடனோ அல்லது எந்த ஒரு மூன்றாம் தரப்பினருடனோ தகவல்களை பகிர்ந்துகொள்வதில்லை என ஃபேஸ் ஆப் நிறுவனம் மறுத்தது. போட்டோக்களை எடிட் செய்வதற்காக கிளவுடில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதையும் அவற்றில் பெரும்பாலானவை 48 மணி நேரத்திற்குள் நீக்கப்படும் என்பதையும் ஃபேஸ் ஆப் உறுதிப்படுத்தியுள்ளது. இறுதியாக பயனர்கள் தங்களுடைய எல்லா தகவல்களையும் நீக்க ஃபேஸ் ஆப்-ஐக் கோரலாம் என்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment