Advertisment

காசா சுகாதாரத்துறை எப்படி செயல்படுகிறது? போரில் மரணமடைந்தோர் விவரங்களை எப்படி கணக்கிடுகிறது?

இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது, இதனால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது. காசாவின் எல்லை பகுதிகளை இஸ்ரேல் மூடி விட்டதால், போரில் மரணமடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தொடர்பான விவரங்களை காசாவின் சுகாதாரத்துறையிடம் மட்டுமே கேட்டுப் பெற முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

author-image
WebDesk
New Update
sad

இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது,  இதனால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது. காசாவின் எல்லை பகுதிகளை இஸ்ரேல் மூடி விட்டதால், போரில் மரணமடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தொடர்பான விவரங்களை காசாவின் சுகாதாரத்துறையிடம் மட்டுமே கேட்டுப் பெற முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

Advertisment

ஹமாஸ் அரசாங்கத்தின் கீழ இயங்கும் ஒரு அமைப்புதான், சுகாதாரத்துறையை பார்த்துகொள்கிறது. செய்தி நிறுவனங்கள், மனித உரிமை குழுக்கள், சர்வதேச அரசுகள் கணித்துள்ள மரணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள்தான் இதனிடம் உள்ளது.

இந்த சுகாதாரத்துறை ஹமாஸ் அரசின்கீழ் இயங்குகிறது. ஆனால் ஹமாசின் அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்பைவிட இது வித்தியாசமான முறையில் இயங்குகிறது. பாலஸ்தீன தேசிய ஆணையம்தான் முதலில் இந்த பொறுப்பை கையாண்டு வந்தது.  2006ம் ஆண்டு நடைபெற்ற பாலஸ்தீன சட்ட சபை தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காசாவில் உள்ள கல்வி மற்றும் சுகாதார சேவையை ஹமாஸ் தலைமையேற்று பார்த்துகொள்கிறது.

பாலஸ்தீன தேசிய ஆணையம் தற்போது, ஸ்ரேல் ஆக்கிரமித்த வெர்ஸ்டு பேங்க் பகுதியையும், ராமல்லா நகரில் உள்ள சுகாதாரத்துறையையும் நிர்வகித்து வருகிறது. மேலும் இந்த ஆணையம் காசா சுகாதாரத்துறைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குகிறது. மேலும் காசா சுகாதாரத்துறைக்கு கீழ் இயங்கும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, தடுத்து வைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட நோயாளிகளை இஸ்ரேல் மருத்துவமனைக்கு அனுப்ப உதவுகிறது.

காசாவின் சுகாதாரத்துறையில் ஹமாஸ் நியமித்தவர்களும், தேசிய வாத்தா கட்சி நியமித்த அரசு ஊழியர்களும் பணிபுரிகின்றனர்.

காசா மருத்துவமனையில் உள்ள அதிகாரிகள், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அனைவரின் விவரங்களையும் சேகரித்து வைத்து கொள்வதாகவும், அதுபோல மரணமடைந்தவரின் எண்ணிக்கயையும் கணக்கில் வைத்துகொள்வதாகவும் கூறுகின்றனர். இந்த விவரங்கள், சுகாதாரத்துறையின் கம்யூட்டர்களில் பதிவேற்றப்படும். சுகாதாரத்துறை சார்ப்பாக இந்த விவரங்களை அஷ்ரப் அல்-கித்ரா வெளியிடுவார். ஊடகங்கள் மற்றும் மற்ற அமைப்புகளுக்கு இவர் மூலம் இந்த விவரங்கள் வெளியிடப்படும்.

இது தொடர்பாக அஷ்ரப் அல்-கித்ரா கூறுகையில், சமந்தபட்ட இடங்களில் சரியான தொடர்பு கிடைக்காததால் நானும் என்னோடு பணிபுரியும் நபர்கள் பெரும் சிக்கலை சந்திக்கிறோம். ஆனால் எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை இரண்டு முறை சோதிப்போம். இதுமட்டும் இல்லாமல், மற்ற அமைப்புகளில் இருந்தும் மரணமடைந்தோர் தகவலை, சுகாதாரத்துறை பெற்றுக்கொள்ளும்.

குறிப்பாக பாலஸ்தீனிய  ரெட் க்ரிரசண்ட்(  Palestinian Red Crescent) என்ற அமைப்பு மரணமடைந்தோர் எண்ணிக்கையை வெளியிடும். இந்த அமைப்பு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பிரித்து மரணமடைந்தோரின் விகிதத்தை வெளியிடும்.

சுகாதாரத்துறை சார்ப்பில் வெளியாகும், தகவலில் மரணமடைந்தோரின் விவரங்கள், பெயர்கள், இடங்கள் பற்றிய தகவல் இடம் பெறாது. அக்டோபர் 27ம் தேதி வெளியான 212 பக்கள் கொண்ட  அறிக்கையில், கொல்லப்பட்ட எல்லா பாலத்தீன மக்களின் பெயர், ஐ.டி நம்பர்கள், வயது, பாலினம் தொடர்பான தகவல்கள் விதிவிலக்காக வெளியானது. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் மீது அமெரிக்கா சந்தேகங்களை முன்வைத்த போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment