/tamil-ie/media/media_files/uploads/2019/12/a597.jpg)
What is GDP and why does it matter? - ஜி.டி.பி என்பது என்ன? அதன் விவகாரம் என்ன?
ஒரு கால வரம்புக்குள் (பொதுவாக ஒரு ஆண்டு) ஒருநாட்டின் உள்நாட்டு எல்லைகளுக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வழங்கப்படும் சேவைகளின் பொருள்முகமதிப்பை (பணமதிப்பு) ஜி.டி.பி அளவிடுகிறது. இது ஜிஎன்பி எனப்படும் தேசிய வருவாய் புள்ளி என வேறு வகையில் உபயோகிக்கப்படுவதில் இருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டதாகும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித த்தில் ஒரு சரிவு என்ற அதிருப்தி அளிக்கும் செய்தியானது ஆளும் கட்சி மற்றும் மத்திய அரசு தரப்பில், இட்டுக்கட்டிச்சொல்லப்படும் அளவுக்கு நிலைமை அவ்வளவு மோசமானதாக இல்லை என்று பல்வேறு வாதங்களாகவோ, இது இன்னும் மந்த நிலையை நோக்கிச் செல்லவோ இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனாலோ சொல்லப்படுகின்றன. மந்தநிலை இருப்பதை வெளிப்படையாக அவர்கள் மறுக்கின்றனர். மத்தியமைச்சர் சுரேஷ் அங்காடி, “விமானநிலையங்கள் முழுவதுமாக நிரம்பி இருக்கின்றன. ரயில்களில் இருக்கைகள் நிரம்புகின்றன, மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்,” என்று சொல்கிறார். வேறு எதுவும் வேலை இல்லாதவர்கள், பிரதமர் நரேந்திரமோடியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதனை செய்கின்றனர் என்கிறார்.
பி.ஜே.பி-யின் எம்.பி-க்களில் ஒருவரான நிஷ்கிகாந்த் துபே, கடந்த டிசம்பர் 2-ம் தேதி பொருளாதார வளர்ச்சியை வரையறுக்கும் ஜி.டி.பி-யை அளவிடும் அடிப்படை மாறுதல்களின் தகுதியை அவர் கேள்வி எழுப்பியபோது இந்த விவாதத்தை அவர் வேறு திசைக்கு இழுத்துச் சென்றார்.
துபே கூறுகையில், “1934-ம் ஆண்டுதான் ஜி.டி.பி இந்த உலகத்துக்குள் வந்தது. அதற்கு முன்பு உலகின் எந்த முலையிலும் ஜி.டி.பி என்பது இல்லை.” எனவே ஒரு பைபிள் போலவோ அல்லது ராமாயணம் போலவோ ஒரு கடவுளின் மொழியாக இதைக் கருதக் கூடாது. மேலும் அவர் கூறுகையில், தவறாக இருந்தாலும் கூட இப்போதைய வடிவிலான(இணைக்கப்பட்ட படத்தைப் பார்க்கவும்) ஜி.டி.பி-யை முதன் முதலாக கொண்டு வந்தார் என்ற முறையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் சிமோன் குஜ்நெட்ஸ் என்பவரையே இந்தப் பெருமை சாரும்.
ஜி.டி.பி என்பது என்ன?
ஒரு கால வரம்புக்குள் (பொதுவாக ஒரு ஆண்டு) ஒருநாட்டின் உள்நாட்டு எல்லைகளுக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வழங்கப்படும் சேவைகளின் பொருள்முகமதிப்பை (பணமதிப்பு) ஜிடிபி அளவிடுகிறது. இது ஜிஎன்பி எனப்படும் தேசிய வருவாய் புள்ளி என வேறு வகையில் உபயோகிக்கப்படுவதில் இருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டதாகும்.
பணமதிப்பு எங்கே உற்பத்தியாகிறது என்பதை பொருட்டாக கருதாமல் ஒரு நாட்டில் நிறுவனங்கள் , மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், வழங்கப்படும் சேவைகளின் பொருள்முகமதிப்பை (பணமதிப்பு) ஜிஎன்பி அளவிடுகிறது.
உதாரணமாக, இந்தியாவுக்குள் ஆப்பிள் நிறுவனம் 10 லட்சம் டாலர் மொபைல் போன்களை உற்பத்தி செய்தால், அந்த 10 லட்சம் டாலர் இந்தியாவின் ஜி.டி.பி-யாகவும், அமெரிக்காவின் ஜிஎன்பி-யாகவும் கணக்கிடப்படுகிறது. இதே போல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க அலுவலகத்தில் 10 லட்சம் டாலர் மதிப்புள்ள மென்பொருள் உருவாக்கப்படுகிறது என்றால், அது அமெரிக்காவின் ஜி.டி.பி-யாக , இந்தியாவின் ஜிஎன்பி-யாக கணக்கிடப்படுகிறது. இது உள்ளூர் எல்லையாக இருக்கிறது. ஜி.டி.பி என வேறுபடுத்திக் கூறப்படுகிறது.
ஜி.டி.பி, ஜி.என்.பி கருத்தமைவுகள் எப்போது உருவாக்கப்பட்டது?
ஜி.டி.பி, ஜி.என்.பி என்பதன் நவீனகால வரையறைகள் சிமோன் குஜ்நெட்ஸ் காலத்தைச் சேர்ந்தது என்பதை உண்மையில் அறிய முடியும். அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் 1933-ம் ஆண்டில் தேசிய கணக்கியலை உருவாக்கும் பணியை இவரிடம்தான் ஒப்படைத்தார்.
Bloomsbury இதழில் வளர்ச்சி மாயை என்ற தலைப்பில் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையாளர் டேவிட் பில்லிங் கூறும்போது, குஜ்நெட்ஸ் குழுவினர் அமெரிக்கா முழுவதும் பயணித்து விவசாயிகள், தொழிலகங்களின் மேலாளர்களை சந்தித்துப் பேசினர். என்ன, எவ்வளவு பொருட்களை உற்பத்தி செய்தனர். இறுதி பொருட்களை உற்பத்தி செய்வதற்கு என்ன கொள்முதல் செய்தனர் என்று கேட்டறிந்தனர். தேசிய வருவாய் 1929-32 என்ற இறுதி அறிக்கை அமெரிக்க பாராளுமன்றத்தில் 1934-ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டது.
எனினும், ஜி.டி.பி ஒரு கருத்தாக்கமாக உருவானது அதற்கும் பின்னால்தான். உண்மையில், இந்த கருத்தாக்கத்தை கண்டுபிடித்ததற்கான பெருமை ஆங்கிலேயரான வில்லியம் பெட்டி (1623-1687) என்பவரையே சாரும். இவர் பிராசிநோஸ் கல்லூரியில் உடற்கூறுஇயல் பேராசிரியராக இருந்தார். அயர்லாந்தில் ஒரு தோட்டத்தை வாங்கியபோது இது குறித்த அவரது தேடல் தொடங்கியது. அதன் மதிப்பு எவ்வளவு என்று கண்டுபிடித்தார். தோட்டத்தில் இருந்து கிடைத்த பலன்களை கணக்கிட பெட்டி முயற்சி செய்தார். தோட்டத்தில் தற்போதைய பொருத்தமான மதிப்பை கண்டுபிடித்தார். பின்னர், அதனை இங்கிலாந்து, வேல்ஸ் முழுமைக்கும் பொருத்திப் பார்த்தார். இந்த இரண்டு நாடுகளுக்கும் முதல் தொகுதி தேசிய கணக்கீடை வழங்கினார். நில உரிமையாளர்களுக்கு ஏற்ற ஒரு வரி அளவு முறையை கொண்டு வருவதுதான் இதன் கருத்தாக இருந்தது.
அனைத்து விதமான வரி விசாரணைகளுக்கும் அடிப்படையான வடிவமாக ஜி.டி.பி வந்த தில் இருந்து , ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன்பட்ட அரசானாலும், கடந்த கால பேரரசுகள் அனுமானிப்பது தவறானது என்றும் பரந்த பொருளாதாரத்தின் செயல்பாட்டை கண்காணிக்க முடியாது என்பது உறுதியானது. பல்வேறு வகையான வித்தியாசமான வரி நிர்வகிப்புக் கொள்கைகள் குறித்து கவுடல்ய அர்த்தசாஸ்திரம் விரிவாகப் பேசுகிறது. உற்பத்தி வகை மற்றும் நிலை குறித்த சில மதிப்பீடுக்கு இந்த அனைத்தும் முதலில் தேவைப்படுகிறது.
ஜி.டி.பி-யை ஒரு அளவீடாக கொள்ளலாம் என்று குஜ்நெட்ஸ் முழுவதுமாக திருப்தியுற்றாரா?
இறுதி பொருள் குறித்து குஜ்நெட்ஸ் முழுவதுமாக திருப்தி தெரிவிக்கவில்லை என துபே சுட்டிக்காட்டினார். பத்திரிகையாளர் பில்லிங் இது குறித்து கூறுகையில், “அனைத்து செயல்பாடுகளின் கச்சா கூட்டுத்தொகையாக அவர் கருதியதை விடவும், இந்த அளவீடானது பொதுநலன்களை பிரதிபலிப்பதை கொண்டிருக்க வேண்டும் என்று குஜ்நெட்ஸ் விரும்பினார்.”
ஆனால், மீண்டும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மொத்த மக்கள் தொகையின் நலனுக்கான அல்லது பொது நலனுக்கான துல்லியமான சுருக்கமாக எந்த அளவீடும் இருக்க முடியாது. அனைத்து அளவீடுகளும் சில பலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. உதாராணமாக, இந்தியாவின் ஆண்டு ஜி.டி.பி 2.8 டிரில்லியன் டாலர் ஆக இருக்கிறது. ஆனால், நியூலாந்து நாட்டின் சராசரியை விட இந்தியர்களின் சராசரியில் நல்ல நிலை என்று இதனை பொருள் கொள்ள முடியாது. நியூசிலாந்தின் ஆண்டு மொத்த ஜி.டி.பி வெறும் 0.18 டிரில்லியன் டாலர் என்றபோதிலும், ஒரு ஆண்டில் நியூசிலாந்து உற்பத்தி செய்வதை விடவும் இந்தியா ஒரு மாத த்தில் அதிக பொருட்களை உற்பத்தி செய்வது, சேவைகளை வழங்கி வருகிறது ஆகையால், அதன் தனிநபர் ஜி.டி.பி 38,000 டாலராக இருக்கிறது. இந்தியாவின் தனிநபர் ஜி.டி.பி வெறும் 2000 டாலராக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் ஆண்டு ஜி.டி.பி-யானது நியூசிலாந்து நாட்டை விட 15 மடங்கு அதிகம் என்றாலும் கூட நியூசிலாந்து வாசியின் சராசரி இந்தியரை விட 19 மடங்கு அதிகம்.
எந்த ஒரு சமூகம் அல்லது பொருளாதாரத்தின் முழுமையான காட்சிக்கு , யார் ஒருவரும் பல்வேறு வகையான காரணிகளை பார்க்க வேண்டும்.
ஜி.டி.பி-யில் முக்கிய விஷயம் என்ன?
இன்னும், சிறப்பான தகுதியின் காரணிகளாக ஜி.டி.பி இருக்கிறது. ஒரு அளவீடு என்பதாகையால் வேறு எந்த காரணிகளை விடவும் ஒரு பொருளாதாரத்தைப் பற்றிய மேலும் அதிக தகவல்களை, பெரும்பாலான தொகைகளை கொண்டிருக்கிறது.உதாரணமாக உயர்ந்த ஜி.டி.பி-யைக் கொண்ட நாடுகள் உயர்ந்த வருவாய் கொண்ட குடிமக்களை, நல்ல வாழ்க்கைத் தரங்களைக் கொண்டிருக்கிறது. எனினும், ஜி.டி.பி-யில் முதலிடத்தில் இருக்கும் ஒரு நாடு, தனிநபர் ஜி.டி.பி-யில் 9 வது இடத்தில் இருப்பது குறித்த காரணிகள் மற்றும் யோசனைகள் குறித்து யார் ஒருவரும் சுட்டிக்காட்டலாம். ஆனால், சர்வதேச அளவிலான புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, இந்த வேறுபாடுகள் சிறிய அளவிலானது மட்டும்தான்.
இதேபோல, உயர்ந்த ஜி.டி.பி-யை கொண்டிருக்கும் நாடுகள் நல்ல சுகாதாரம் மற்றும் கல்வி அளவீடுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியும். பணக்கார நாடுகள் என்று அழைக்கப்படுபவை உயர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் அர்பணிப்புடன் கூடிய நல்ல நிறுவனங்களைக் கொண்டிருக்கும். ஏனெனில், முதன்மையாக அவர்களிடம் கூடுதலான பணம் இருக்கிறது.
அதே போல, ஒருவரின் மனதை திருப்திப்படுத்த வெறுமனே நாட்டின் ஜி.டி.பி-யை மட்டுமே அதிகமாக சார்ந்திருக்காமல் இது உதவும் பொழுது அதை அலட்சியம் செய்வதும் நல்ல யோசனையாக இருக்காது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.