பொன்னிற அரிசி என்றால் என்ன?

ஜெர்மன் விஞ்ஞானிகள் 1990 களின் பிற்பகுதியில்,  ‘கோல்டன் ரைஸ்’ எனப்படும் மரபணு மாற்றப்பட்ட ‘பொன்னிற அரிசி’யை உருவாக்கினர். இது குழந்தைகளிடையே பார்வைக் குறைபாட்டுக்கு முக்கிய காரணமான மற்றும் அம்மை போன்ற தொற்று நோய்களால் மரணத்திற்கும் வழிவகுக்கும் ‘வைட்டமின் ஏ’ குறைபாட்டை எதிர்த்து போராடும் என்று கூறப்பட்டது.

By: Updated: November 25, 2019, 09:34:32 PM

ஜெர்மன் விஞ்ஞானிகள் 1990 களின் பிற்பகுதியில்,  ‘கோல்டன் ரைஸ்’ எனப்படும் மரபணு மாற்றப்பட்ட ‘பொன்னிற அரிசி’யை உருவாக்கினர். இது குழந்தைகளிடையே பார்வைக் குறைபாட்டுக்கு முக்கிய காரணமான மற்றும் அம்மை போன்ற தொற்று நோய்கள் மூலம் மரணத்திற்கு வழிவகுக்கும் ‘வைட்டமின் ஏ’ குறைபாட்டை எதிர்த்து போராடும் என்று கூறப்பட்டது.

செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டு ஆய்வில், இந்த உரிமை கோரல் சில நேரங்களில் எதிர்க்கப்பட்டுள்ளது. அது அடைய வேண்டியதைக் காட்டிலும் பலவகைகளில் குறையக்கூடும் என்று தெரிவித்தது. இப்போது, பங்களாதேஷ் இந்த வகையை வளர்ப்பதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கக்கூடும். டாக்கா ட்ரிப்யூன் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற சர் ரிச்சர்ட் ஜான் ராபர்ட்ஸை வரவை மேற்கோள் காட்டி ‘கோல்டன் ரைஸ்’ வெளியீடு குறித்து பங்களாதேஷ் ஒரு முடிவை எடுக்கும் என்று கூறியது.

வைட்டமின் ஏ குறைபாடு மில்லியன் கணக்கான மக்களை அதிக ஆபத்தில் வைத்திருக்கும் நாடுகளுக்கு இது எவ்வாறு உதவக்கூடும் என்பதை பல்வேறு வகையான வாதங்கள் அழுத்தம் தருகின்றனர். பங்களாதேஷில், 21 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு உள்ளது. பங்களாதேஷில் மதிப்பாய்வு செய்யப்படும் கோல்டன் ரைஸை பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த அரிசி வகை வழக்கமான வகையை விட விலை உயர்ந்ததாக இருக்காது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைட்டமின் ஏ தயாரிக்க உடல் பயன்படுத்தும் நிறமி பீட்டா கரோட்டின் அரிசியில் இயற்கையாகவே குறைவாக உள்ளது. கோல்டன் ரைஸில் இது உள்ளது. இதுதான் அதன் பொன்னிறத்திற்கு காரணம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:What is golden rice bangladesh the first country to approve plantation of this variety

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X