Advertisment

H3N2 வைரஸ் என்றால் என்ன? நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன?

நாடு முழுவதும் H3N2 என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது

author-image
WebDesk
Mar 11, 2023 12:34 IST
H3N2 வைரஸ் என்றால் என்ன? நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன?

நாடு முழுவதும் H3N2 என்ற இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது ஏ, பி, சி என துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் ஹரியானாவில் தலா ஒருவர் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று தெரிவித்தது. அதோடு இந்தியா முழுவதும் 90 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் நிகில் மோடி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார். அவர் கூறுகையில், கோவிட் தடுப்பு நெறிமுறைகளை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது. ஏனெனில் வளர்ந்து வரும் வைரஸ்களுடன் வாழ வேண்டும். எவ்வாறாயினும், பீதி அடையத் தேவையில்லை. மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்து உட்கொள்ள வேண்டாம் எனக் கூறினார்.

H3N2 வைரஸ் என்றால் என்ன?

காய்ச்சல் தொற்று நோயை உண்டாக்கும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் 4 வகைகளாகப் பிரிக்கப்படுள்ளது, இதில்

இன்ஃப்ளூயன்சா A மேலும் பல்வேறு துணை வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று H3N2 ஆகும். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கூற்றுப்படி, H3N2 வைரஸ் 1968-ம் ஆண்டு காய்ச்சல் தொற்றுநோயை ஏற்படுத்தியது. இதனால் உலகளவில் சுமார் ஒரு மில்லியன் மக்களும், அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் பேரும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது.

H3N2 வைரஸ் அறிகுறிகள் என்ன?

H3N2 வைரஸ் அறிகுறிகளும் மற்ற காய்ச்சல் அறிகுறிகள் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், உடல்வலி,

தலைவலி, தொண்டை புண், மூக்கு அடைப்பு, சளி, சோர்வு ஆகியவை அறிகுறிகளாக கூறப்படுகிறது. குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஏற்படும்.

இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கூற்றுப்படி, H3N2 காய்ச்சல் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். 3 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் குறைந்துவிடும். இருப்பினும், இருமல் 3 வாரங்களை வரை நீடிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?

ஐ.எம்.ஏ படி, இந்த வைரஸ் பொதுவாக 15 வயதுக்குட்பட்ட அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது. குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, நீரிழிவு, இதய நோய், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நரம்பியல் நோய் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது.

நோய் பரவாமல் தடுப்பது எப்படி?

H3N2 பரவுவதைத் தடுக்க சுகாதாரமாக இருப்பது சிறந்த வழி என்று டாக்டர் நிகில் மோடி கூறுகிறார்.

சாப்பிடுவதற்கு முன் மற்றும் உங்கள் முகம், மூக்கு, வாய் தொடுவதற்கு முன் கைகளை கழுவ வேண்டும். சானிடைசர் பயன்படுத்துவது, ஏற்கனவே வைரஸ் அல்லது வேறு ஏதேனும் பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதை தவிர்ப்பது ஆகியவை நோய் பரவாமல் தடுப்பதைக் கட்டுப்படுத்தும்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகள், காரம் குறைவான மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடுவது உதவியாக இருக்கும் என்று மருத்துவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Health Ministry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment