hallmarking of gold தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக ஹால்மார்க் 256 மாவட்டங்களில் கொண்டு வரப்படுகிறது. மேலும் 40 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் அனைத்து நகைக்கடைகளும் ஹால்மார்க் தொடர்பான கண்காணிப்பின் கீழ்வருகின்றனர். எந்தெந்த மாவட்டங்கள் இதன் கண்காணிப்பில் வருகின்றன? ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை நாம் எப்படி அடையாளம் காண்பது? என்பதை விளக்குகிறது இந்த சிறப்புக் கட்டுரை.
ஹால்மார்க் என்றால் என்ன?
Bureau of Indian Standard (BIS) பணியகம் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க்கை வழங்குகிறது. விலைமதிப்பற்ற உலோகத்தின் விகிதாசார உள்ளடக்கத்தின் துல்லியமான உறுதிப்பாடு மற்றும் உத்தியோகபூர்வ பதிவு தான் ஹால்மார்க் என்று பி.ஐ.எஸ் வரையறுக்கிறது. எனவே இது இந்த உலோகங்களின் தூய்மையை குறிக்கும் ஒரு தரச்சான்றாகும்.
இந்தியாவில் ஹால்மார்க் முத்திரை எந்தெந்த உலோகங்களுக்கு வழங்கப்படுகிறது?
இந்திய அரசு ஜூன் 14, 2018ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், இரண்டு வகைமைகளை உருவாக்கியுள்ளது. ஒன்று தங்க நகைகள், தங்க பொருட்கள் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளிப் பொருட்கள் . இவை இரண்டும் ஹால்மார்க் தரச்சான்றிதழ்களுக்கு கீழ் வரும். அதாவது தங்கம் மற்றும் வெள்ளிக்கு இந்த சான்று வழங்கப்படும். ஆனாலும் சில நகைகள் மற்றும் பொருட்களுக்கு ஹால்மார்க் வழங்குவதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரத்துறை அறிவிப்பின் படி, இந்திய வர்த்தக கொள்கைகளின் படி ஏற்றுமதி மற்றும் மறு-இறக்குமதி செய்யப்படும் நகைகளுக்கு, சர்வதேச நகை கண்காட்சிகளுக்காகவும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பி2பி உள்நாட்டு கண்காட்சிகளுக்காக உருவாக்கப்படும் நகைகளுக்கு கட்டாய ஹால்மார்க் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
கைக்கடிகாரங்கள், ஃபவுண்டைன் பேனாக்கள், குந்தன், போல்கி மற்றும் ஜடாவ் போன்ற சிறப்பு நகைகளுக்கு ஹால்மார்க்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏன் 256 மாவட்டங்களுக்கு மட்டும் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
விரிவான ஆலோசனை அடிப்படையில் அமைச்சகம் ஆரம்பத்தில் மதிப்பீட்டை குறிக்கும் மையங்களைக் கொண்டுள்ள 256 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க்கினை கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும் அடுத்தகட்டமாக எப்போது ஹால்மார்க் கட்டாயமாக்கப்படும் என்பதை கூறவில்லை.
ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ள 256 மாவட்டங்கள் யாவை?
டெல்லியில் 7 மாவட்டங்களில் (அனைத்து மாவட்டங்களிலும்) ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்திர பிரதேசத்தில் முதல் கட்டமாக ஆக்ரா, அலகாபாத், பரேலி, புடான், தியோரியா, காஜியாபாத், கோரக்பூர், ஜான்பூர், ஜான்சி, மதுரா, கான்பூர் நகர், லக்னோ, மீரட், மொராதாபாத், முசாபர்நகர், கௌதம்புத் நகர், சஹரன்பூர், ஷாஹாஹான்பூர். மற்றும் வாரணாசி ஆகிய 19 மாவட்டங்களுக்கு மட்டும் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
மத்தியப் பிரதேசம்: 1. போபால் 2. தேவாஸ் 3. குவாலியர் 4. ரேவா 5. இந்தூர் 6. ஜபல்பூர் 7. ரத்லம் 8. சத்னா.
ராஜஸ்தான்: 1. அஜ்மீர் 2. ஆல்வார் 3. பில்வாரா 4. பிகானேர் 5. ஹனுமன்கர் 6. ஜெய்ப்பூர் 7. ஜுன்ஜுனு 8. ஜோத்பூர் 9. கோட்டா 10. நாகூர் 11. பாலி 12. சவாய் மாதோபூர் 13. சிரோஹி 14. சிகார் 15. ஸ்ரீகங்காநகர் 16. சுரு 17. உதய்பூர் 18. பன்ஸ்வாரா
மகாராஷ்டிரா: 1. அகோலா 2. அமராவதி 3. துலே 4. லாத்தூர் 5. நந்தேடு 6. ரத்னகிரி 7. சிந்துதுர்க் 8. அவுரங்காபாத் 9. நாக்பூர் 10. பால்கர் 11. ராய்காட் 12. அகமதுநகர் 13. சோலாப்பூர் 14. ஜல்கான் 15. நாசிக் 16. சதாரா 17. சாங்லி 18. கோலாப்பூர் 19. தானே 20. புனே 21. மும்பை துணை. 22. மும்பை நகரம்
குஜராத்: 1. அம்ரேலி 2. பாவ்நகர் 3. போடாட் 4. தேவ்பூமி துவாரகா 5. கிர் சோம்நாத் 6. ஜாம்நகர் 7. மெஹ்சானா 8. மோர்பி 9. படான் 10. போர்பந்தர் 11. வல்சாத் 12. ஆனந்த் 13. பருச் 14. கெடா 15. சுரேந்திரநகர் 16 . பனஸ்கந்தா 17. ஜுனகத் 18. கட்ச் 19. நவ்சரி 20. வதோதரா 21. ராஜ்கோட் 22. சூரத் 23. அகமதாபாத்.
சண்டிகர்
ஹரியானா: 1. அம்பாலா 2. பிவானி 3. ஃபரிதாபாத் 4. ஃபதேஹாபாத் 5. குர்கோன் 6. ஹிசார் 7. ஜிந்த் 8. கைதல் 9. கர்னல் 10. மகேந்திரகர் 11. ரேவாரி 12. ரோஹடக் 13. சிர்சா 14. சோனிபட் 15. யமுனா நகர்
உத்தரகாண்ட்: 1. டேராடூன் 2. பித்தோராகர்
பஞ்சாப்: 1. அமிர்தசரஸ் 2. பர்னாலா 3. பட்டிண்டா 4. ஃபதேஹ்கர் சாஹிப் 5. ஹோஷியார்பூர் 6. ஜலந்தர் 7. கபுர்தலா 8. லூதியானா 9. மான்சா 10. பதான்கோட் 11. பாட்டியாலா 12. சங்ரூர்
இமாச்சலப் பிரதேசம்: 1. ஹமீர்பூர் 2. காங்க்ரா 3. மண்டி
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்
ஆந்திரா: 1. ஸ்ரீகாகுளம் 2. விஜயநகரம் 3. விசாகப்பட்டினம் 4. கிழக்கு கோதாவரி 5. மேற்கு கோதாவரி 6. கிருஷ்ணா 7. குண்டூர் 8. பிரகாஷம் 9. நெல்லூர் 10. கடப்பா 11. கர்னூல் 12. அனந்தபூர்
கர்நாடகா: 1. பெங்களூரு நகரம் 2. தும்கூர் 3. ஹாசன் 4. மண்டியா 5. மைசூர் 6. தட்சிணா கன்னடம் 7. ஷிமோகா 8. உடுப்பி 9. தேவ்நாகரே 10. உத்தர கன்னடா 11. பெல்காம் 12. தார்வாட் 13. பிஜாப்பூர் 14. குல்பர்கா
கேரளா: 1. ஆலப்புழா 2. எர்ணாகுளம் 3. கண்ணூர் 4. காசர்கோடு 5. கொல்லம் 6. கோட்டயம் 7. கோழிக்கோடு 8. மலப்புரம் 9. பாலக்காடு 10. பத்தினம்திட்டா 11. திருவனந்தபுரம் 12. திருச்சூர் 13. வயநாடு
தமிழ்நாடு: 1. கடலூர் 2. கிருஷ்ணகிரி 3. திருவண்ணாமலை 4. விழுப்புரம் 5. சென்னை 6. வேலூர் 7. கோயம்புத்தூர் 8. ஈரோடு 9. திருப்பூர் 10. சேலம் 11. நாமக்கல் 12. தர்மபுரி 13. கன்னியாகுமரி 14. திருநெல்வேலி 15. தூத்துக்குடி 16. சிவகங்கை 17. மதுரை 18. திண்டுக்கல் 19. புதுக்கோட்டை 20. திருச்சிராப்பள்ளி 21. கருர் 22. தஞ்சாவூர் 23. கள்ளக்குறிச்சி 24. தென்காசி
தெலுங்கானா: 1. மஞ்சேரியல் 2. பெடப்பள்ளி 3. வாரங்கல் (கிராமப்புறம்) 4. வாரங்கல் (நகர்ப்புறம்) 5. ரங்கரெட்டி 6. ஹைதராபாத் 7. கம்மம்
கோவா: 1. வடக்கு கோவா 2. தெற்கு கோவா
புதுச்சேரி
அசாம்: 1. பார்பேட்டா 2. கச்சார் 3. கம்ரூப் மெட்ரோ
திரிபுரா: 1. வடக்கு திரிபுரா 2. மேற்கு திரிபுரா
பீகார்: 1. பாக்சர் 2. பாகல்பூர் 3. போஜ்பூர் 4. தர்பங்கா 5. கயா 6. முசாபர்பூர் 7. நாலந்தா 8. பாட்னா 9. ரோஹ்தாஸ் 10. சமஸ்திபூர் 11. சரண் 12. பெகுசராய் 13. நவாடா
சத்தீஸ்கர்: 1. ராய்ப்பூர் 2. துர்க்
ஜார்க்கண்ட்: 1. பொகாரோ 2. தன்பாத் 3. கிழக்கு சிங்பம் 4. ராஞ்சி
ஒடிசா: 1. பாலசோர் 2. பத்ராக் 3. கட்டாக் 4. கஞ்சம் 5. ஜஜ்பூர் 6. கோர்டா 7. மயூர்பஞ்ச் 8. சம்பல்பூர்
மேற்கு வங்கம்: 1. பூர்பா மெதினிபூர் 2. டார்ஜிலிங் 3. பீர்பம் 4. வடக்கு 24 பர்கானாஸ் 5. கொச்பெஹர் 6. பாசிம் பர்தமான் 7. புபா பர்தமான் 8. கொல்கத்தா 9. புருலியா 10. தெற்கு 24 பர்கானாஸ் 11. பாங்குரா 12. ஹூக்லி 13. உத்தர தினாஜ்பூர் 14. ஹவுரா 15. தக்ஷின் தினாஜ்பூர் 16. மால்டா 17. முர்ஷிதாபாத் 18. நதியா 19. பாசிம் மெதினிபூர்
ஹால்மார்க் விதிமுறைகளை பின்பற்றாத நகை உற்பத்தியாளர்களுக்கு எந்தவிதமான அபாரதமும் ஆகஸ்ட் 2021 வரை விதிக்கப்படாது.
அனைத்து நகை உற்பத்தியாளர்களும் ஹால்மார்க் முத்திரை மேற்பார்வையின் கீழ் வருவார்களா?
இல்லை. வருடத்திற்கு ரூ. 40 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் நகை உற்பத்தியாளர்கள் இதில் வரமாட்டார்கள்.
ஹால்மார்க்கிங் திட்டத்தின் கீழ் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தூய்மை தரநிலைகள் யாவை?
BIS தரத்தின்படி, தங்கத்தின் தூய்மையின் அடிப்படையில் மூன்று வகை ஹால்மார்க்கிங் - 22 காரட், 18 காரட் மற்றும் 14 காரட். எவ்வாறாயினும், ஜூன் 15 ம் தேதி அமைச்சகம் "கூடுதல் காரட் 20, 23 மற்றும் 24 தங்கங்களின் ஹால்மார்க்கிங் அனுமதிக்கப்படும்" என்று அறிவித்தது நுகர்வோரின் ஹால்மார்க் இல்லாத நகைகளை நகைக்கடைக்காரர்கள் திரும்ப வாங்க முடியும் என்று அமைச்சகம் மேலும் கூறியது..
குறைந்த அளவிலான ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளுக்கு ஒரு காரணம் போதுமான மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்கள் (ஏ & எச்.சி) கிடைக்காதது. நாடு முழுவதும் சுமார் 35,879 நகை விற்பனையாளர்கள் மட்டுமே BIS ஆல் சான்றிதழ் பெற்றவர்கள். ஹால்மார்க் முத்திரை மையத்தின் எண்ணிக்கை வெறும் 945 ஆகும்.
இது ஒரு புதிய நடவடிக்கையா?
பல ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்திற்கு ஹால்மார்க் கட்டாயம் என்று அரசாங்கம் அறிவித்தது. இருப்பினும், அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் தேதிகளை ஒத்திவைத்தது. நவம்பர் 20, 2021 முதல் நாடு முழுவதும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களில் ஹால்மார்க் கட்டாயம் என்று அரசாங்கம் அறிவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.