Advertisment

இந்தியாவின் முதல் நீர் விமானம்: எங்கே, எப்படி செயல்படப் போகிறது?

சீப்ளேனில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: பறக்கும் படகுகள் (பெரும்பாலும் இவை hull seaplanes என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் மிதவை விமானங்கள்.

author-image
WebDesk
New Update
What is India’s first seaplane project and how will it function

Aditi Raja

Advertisment

What is India’s first seaplane project and how will it function :  குஜராத்தில் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்பட்ட 5 ”சீப்ளேன்” எனப்படும் நீர்விமானங்களில் முதல் விமானம் அக்டோபர் 31ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதாவில் அமைந்திருக்கும் ஒற்றுமையின் சிலை வரையில் இந்த பயணம் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி இந்த விமான சேவையை துவங்க உள்ளார். 14 இருக்கைகள் கொண்ட இது போன்ற நீர்விமானங்கள் தரோய் அணையில் இருந்து அம்பாஜியை இணைக்க உள்ளது. அதே போன்று பலிதானாவில் இருக்கும் சத்ருன்ஜெய் அணையையும் இது இணைக்க உள்ளது.

இரு பக்கங்களிலும் இருக்கும் முனையங்கள் கிட்டத்தட்ட கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. கூறப்பட்ட டெர்மினல் பில்டிங்கில் இருந்து 3 மீட்டர் நீளமுள்ள அலுமினியம் கேங்வேயை மக்கள் பயன்படுத்துவார்கள். ஃப்ளோட்டிங் வாக்வேவில் சென்று சீப்ளேனின் டாக்கிங் பேடை அடைய வேண்டும்.

இந்தியாவின் முதல் சீப்ளேன் திட்டம் இது?

நாட்டின் முதல் சீப்ளேன் திட்டம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவின் ஒரு பகுதியாகும். இந்த உத்தரவின் படி, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) குஜராத், அசாம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளையும், அந்தமான் & நிக்கோபார் நிர்வாகத்தையும் சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்காக நீர் ஏரோட்ரோம்களை அமைப்பதற்கான சாத்தியமான இடங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டது.

ஒரு சீப்ளேன் என்பது ஒரு நிலையான இறக்கைகள் கொண்ட விமானமாகும், இது தண்ணீரில் இருந்து மேலேறுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு படகின் பயன்பாட்டுடன் ஒரு விமானத்தின் வேகத்தை மக்களுக்கு வழங்குகிறது. சீப்ளேனில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: பறக்கும் படகுகள் (பெரும்பாலும் இவை hull seaplanes என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் மிதவை விமானங்கள்.

ஒரு பறக்கும் படகின் அடிப்பகுதி அதன் முக்கிய இறங்கும் கியர் ஆகும். இது வழக்கமாக சிறகு அல்லது முனை மிதவைகள் எனப்படும் விங்கிடிப்களுக்கு அருகிலுள்ள சிறிய மிதவைகளுடன் கூடுதலாக வழங்கப்படுகிறது. பறக்கும் படகின் ஹல்லில் குழுவினர், பயணிகள் மற்றும் சரக்குகள் இருக்கும். இது ஒரு கப்பல் அல்லது படகின் ஹல் உடன் பொதுவான பல பண்புகளைக் கொண்டுள்ளது.

To read this article in English

சீப்ளேன் எங்கே இணைக்கப்படும்?

கேவாடியாவில், கூறப்பட்ட முனையம் 0.51 ஏக்கர் பரப்பளவில், சர்தார் சரோவர் நர்மதா நிகம் லிமிட்டடுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இது லிம்டி கிராமத்தில் இருக்கும் சர்தார் சரோவர் அணையின் பஞ்ச்முளி ஏரியில் அமைந்துள்ளது. வதோதராவில் இர்நுது 90 கி.மீ தொலைவிலும், சூரத்தில் இருந்து 150 கி.மீ தொலைவிலும், அகமதாபாத்தில் இருந்து 200 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் ஏரியல் தொலைவு 74.6 கி.மீ (வதோதரா விமான நிலையத்தில் இருந்து). இந்த முனையத்தின் கட்டிடத்தில் 340 மீட்டர் தொலைவில் ப்ளிந்த் ஏரியா இருக்கும். செக்-இந் கவுண்ட்டர்கள், ஒன் டிக்கெட்டிங், ஃபெசிலிடேஷன் மற்றும் சலுகை கவுண்ட்டர்கள் ஆகிய அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளது. நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட பயணிகள் வருகை புரியலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவை எப்படி இயக்கப்படும்?

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 19 இருக்கைகள் கொண்ட விமானத்தை இயக்கும். இதில் 14 பயணிகள் பயணிக்க இயலும். ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 10-14 இருக்கைகள் கொண்ட சீப்ளேன்களை இயக்கும் ஃப்ரெஞ்ச் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில், பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு சீப்ளான்கள் மாடலை பயன்படுத்தி ட்ரயல்கள் மும்பையில் மேற்கொண்டு இருப்பதாக கூறினார். சபர்மதி ஆற்றில் நடைபெற இருக்கும் அறிமுகவிழாவில் பயன்படுத்துவதற்காக ஏற்கனவே இரண்டு நீர்விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அகமதாபாத் மற்றும் கெவாடியா இரண்டு பக்கங்களிலும் நான்கு முறை பயணங்கள் நிகழும். அதாவது 4 வருகைகள் மற்றும் நான்கு புறப்பாடுகள். ஒருவருக்கு ரூ. 4,800 வரை டிக்கெட் கட்டணம் இருக்கும். அகமதாபாத்தில் இருந்து கெவாடியா வர குறைந்தது 4 மணிநேரம் ஆகும். அந்த பயண தூரத்தை குறைக்க இதனை பயன்படுத்தலாம். ரிட்டர்ன் டிக்கெட்களையும் பயணம் செய்பவர் சிப்ளேனிலேயே புக் செய்து கொள்ளலாம். இந்த பயணத்திற்கு ஆகும் நேரம் வெறும் 1 மணி நேரம் மட்டுமே. அகமதாபாத் விமான நிலையத்தில் இவ்விமானங்களின் எரிபொருள் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படும்.

இது சுற்றுச்சூழலில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்?

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிப்பு, 2006 மற்றும் அதன் திருத்தங்களுக்கான அட்டவணையில் நீர் ஏரோட்ரோம் இடம் பெறவில்லை. ஆனால் எக்ஸ்பெர்ட் அப்ரைஸல் கமிட்டி, ஒரு விமான நிலையம் ஏற்படுத்தும் அதே வகையான தாக்கத்தை இந்த நீர்விமான நிலையங்களும் ஏற்படுத்தும் என்று தங்களின் கருத்தினை கூறியது.

தற்போது நர்மதாவில் கூறப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து 2.1கி.மீ தொலைவில் தென்மேற்கு திசையில் சூல்பனேஷ்வர் சரணாலயம் அமைந்துள்ளது. கிழக்கு புறத்தில் சில உள்ளூர் வனவிலங்குகளைக் கொண்ட காப்புக்காடு அமைந்துள்ளது.

டைக் 3 எனப்படும் பாறைகள் நிறைந்த குளமான மகர் தலவை (முதலைகளுக்காக பெயர் பெற்றவை) முடிவு செய்வதற்கு முன்பு பாத்மெட்ரிக் அண்ட் ஹைட்ரோகிராஃபிக் ( bathymetric and hydrographic survey) இன்லாண்ட் வாட்டர்வேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா மூலம் நடத்தப்பட்டது. இந்த பகுதியில் டைக் 1 மற்றும் இரண்டில் இருந்து முதலைகள் உள்ளே வராமல் இருக்க, 2019ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் இருந்து இப்பகுதியில் உள்ள முதலைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

தரையிறங்குவதற்கு தேவையான அனைத்து கூறுகளும் இங்கு இருந்ததால் இந்த பகுதி தேர்வு செய்யப்பட்டது. குறைந்தது 900 அகலம் கொண்ட, 6 அடி ஆழம் கொண்ட பகுதியாக இது இருந்தது. எஸ்.எஸ்.என்.என்.எல்-ன் மூத்த பொறியாளர்கள், சீப்ளேனிற்கு பிரத்தேகமாக எந்தவிதமான ரன்வேயும் தேவையில்லை என்று கூறியுள்ளனர். Rubber Buoys வரிசையாக வைக்கப்படுவது சீப்ளேனுக்கு தரையிறங்கும் பாதையை குறிக்கின்றன.

சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்ட கடிதத்தில், குஜராத் அரசின், விமானத்துறை இயக்குநர், கட்டுமானத்தின் போது ஏற்படும் தாக்கங்கள் குறித்த அச்சங்களை நீக்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு சீப்ளான்கள் மூலமாக ஏற்படும் அச்சங்கள் குறித்து பேசப்பட்ட போது, சீப்ளான்களின் இயக்கத்தின் போது டர்புளன்ஸ் நீரில் உருவாக்கப்படும். இது நீரில் அதிக அளவு ஆக்ஸிஜனை தரும். எனவே ஒரு நேர்மறையான தாக்கம் தான். கார்பனின் அளவு இதன் மூலம் குறைவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேறெங்கு இந்த வகை விமானங்கள் இயக்கப்படுகின்றது?

பல்வேறு விமான நிறுவனங்கள் மூலமாக அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஃபின்லாந்து, இங்கிலாந்து, இலங்கை, ஃபிஜி, நியூசிலாந்து, பபுவா நியூ கினியா, அமீரகம், இத்தாலி, மாலத்தீவுகள், மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இயக்கப்படுகிறது.  இந்தியாவில் ஜல் ஹன்ஸ், வர்த்தக ரீதியிலான சீப்ளான் சேவைகள் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இயக்கப்பட்டு வருகிறது. இது டிசம்பர் 30 2010ம் ஆண்டு, இந்திய சிவில் ஏவியேசன் அமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10 நபர்கள் பயணிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment