விமானத்தில் கால் வைக்கும் போது உங்களின் ஸ்மார்ட்போன் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என்று கூறி வந்த விமான நிறுவனங்கள் தற்போது விமானத்தினுள் கனெக்டிவிட்டி (In-flight connectivity) என்ற தொழில்நுடபத்தை எதார்த்தமாக்கி வருகின்றனர்.
விமானத்தினுள் கனெக்டிவிட்டி தொடர்பாக கடந்த ஆண்டு இந்திய மத்திய தொலைதொடர்புத் துறையிடம் ஒப்புதல் வாங்கிய விஸ்டாரா இந்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் (உள்நாட்டு விமான சேவை நிறுவனம் ) தனது பிராட்பேண்ட் சேவையைத் தொடங்குகிறது.
இப்போதைக்கு, டேட்டா சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், பின்னர் வாய்ஸ் கால்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சில விஸ்டாரா விமானங்களில் பயணம் செயபாவர்கள் இந்த டேட்டா சேவைகள் மூலமாக பேஸ்புக்கில் செய்திகளை பகிரலாம், மின்னஞ்சல் எழுதலாம்......ஏன் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்ஸ் கூட போடலாம்.
இருப்பினும், பிற நாட்டு விமான நிறுவனங்ளின் அனுபவத்தை நாம் படித்து பார்த்தோமானால், இந்திய விமாங்களில் தற்போது ஸ்ட்ரீமிங் வீடியோ சேவை அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது.
டாடா குழுமத்தின் நிறுவனமான நெல்கோ (Nelco) என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த விமானத்தினுள் கனெக்டிவிட்டி சேவை, விஸ்டாராவின் ட்ரீம்லைனர்கள், ஏர்பஸ் 321 விமானங்களில் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இந்த சேவையை நாட்டில் வழங்கிய முதல் இந்திய நிறுவனம் நெல்கோ (Nelco). இந்திய வானில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவைக்கான ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விமானத்தினுள் கனெக்டிவிட்டி என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது?
விமானத்தினுள் கனெக்டிவிட்டி என்றால் என்ன?
கடற்பரப்பில் இருந்து 3,000 மீட்டர் அடி உயரத்தை அடைந்த ஒரு விமானத்தினுள் வாய்ஸ், வீடியோ மற்றும் தரவு சேவைகளை அணுக இந்த கனெக்டிவிட்டி அனுமதிக்கிறது. இந்திய வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கான விமானத்தினுள் கனெக்டிவிட்டி சேவை 2018 மே மாதம் இந்திய மத்திய தொலைதொடர்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்டது.
விமானத்தினுள் கனெக்டிவிட்டி எவ்வாறு செயல்படுகிறது?
இணையம் மற்றும் மொபைல் தகவல்தொடர்புகளுக்கான விமானத்தினுள் கனெக்டிவிட்டி சேவை ஆன்போர்டு ஆண்டெனா மற்றும் செயற்கைக்கோள்களை துணையுடன் இயங்குகிறது.
ஆன்போர்டு ஆண்டெனா, டேட்டா சிக்னல்களை நிலப்பரப்பில் அமைக்கபட்டிருக்கும் டவீர்களில் (பறக்கும் தருணத்தில் எந்த தவர் அருகில் இருக்கின்றதோ, அதற்கேற்றவாறு ) இருந்து எடுத்தக் கொள்ளும்.
இருப்பினும் தவர்கள் இல்லாத ஒரு பெரிய பகுதியைக் கடந்து செல்லும்போது (உதாரணமாக, இந்திய பெருங்கடலை எடுத்துக் கொள்ளலாம்) ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குப் பிறகு சிக்கனல்கள் கிடைப்பதே சிக்கல்களாக மாறும்.

எனவே, சில சமயங்களில் நிலப்பரப்பில் உள்ள டவர்களுக்கு பதிலாக வானில் நிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப் படுகின்றன. கிட்டத்தட்ட நமது வீட்டில் இருக்கும் டிடிஎச் சேனல்கள் செயல்படுவது போன்றுதான்.
விமானத்தில் இருக்கும் ட்ரேன்ஸ்மிட் ஆண்டனா செயற்கைக்கோளில் இருந்து சிக்னல்களைப் பெறுகின்றது. இந்த சிக்னல்கள் விமானத்தில் இருக்கும் ஆன் போர்டு ரூட்டர் மூலமாக ஒவ்வொரு பயனாளிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த சிக்னல்கள் மீண்டும் செயற்கை கோள்கள் வாயிலாக தரைபரப்பில் இருக்கும் பில்லிங் சர்வருக்கு அனுப்பப்படுப்கிறது. (இதன் மூலம் ஒவ்வொரு பயனர்களும் எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகின்றனர் என்பது கணக்கிடப் படுகிறது) இந்த சிக்னல்கள் இறுதியாக உலகளாவிய வலை தளத்தோடு இணைக்கப்படுகிறது ( intercepting Server மூலமாக )
இது ஒரு வகையான சுழற்சி- மீண்டும் நிலபரப்பில் உள்ள சிக்னல்கள் இந்திய செயற்கைக் கோள்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த சிக்னல்கள் விமானத்தில் இருக்கும் ஆன் போர்டு ரூட்டர் மூலமாக பயனர்களுக்கு அனுப்பப்படுகின்றது.
எந்தெந்த விமான நிறுவனங்கள் இந்தியாவில் (அல்லது உலகளவில் ) இந்த விமானத்தினுள் கனெக்டிவிட்டி சேவையை வழங்குகின்றன?
இந்தியாவில் இந்நாள் வரை எந்த விமான நிறுவனங்களும் இந்த கனெக்டிவிட்டி சேவையை வழங்கவில்லை. உலகளவில் பார்த்தால் டெல்டா ஏர் லைன்ஸ், எமிரேட்ஸ், எத்தியாட், ஃபின்னைர், பிரிட்டிஷ் ஏர்வேஸ், நோக் ஏர், ஓமான் ஏர், பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் , யு.எஸ்.ஏர்வேஸ், விர்ஜின் அமெரிக்கா போன்ற பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.
இதற்கான கட்டணம் ?
விமானத்தினுள் கனெக்டிவிட்டி சேவைக்கான கட்டண நெறிமுறையை மத்திய தொலைத் தொடர்பு துறை கட்டுப்படுத்தவில்லை. கட்டணத்தை அந்தந்த விமான நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
பிற்காலங்களில், கட்டண விவகாரத்தில் அரசு தலையிடுமா? என்ற கேள்விக்கு தொலைத்தொடர்பு செயலாளர் அன்ஷு பிரகாஷ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், "விமான நிறுவனங்களுக்கு இது கூடுதலான ஒரு சுமை. தற்சமயம் வரை இதற்கான எந்த வரையறையும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
செயற்கைக்கோள் இணைப்புகள் உலகளவில் அதிக விலை மதிப்புடையவை. விமானங்களில் பொருத்தப்படும் ஆண்டெனா போன்ற உபகரணங்களை நிறுவுவதற்கு விமான நிறுவனங்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆண்டெனாவின் கூடுதல் எடையைக் கருத்தில் கொண்டு விமான நிறுவனங்கள் கூடுதல் எரிபொருள் செலவுகளையும் ஏற்க வேண்டியிருக்கும். இதனால் டிக்கெட் விலையிலும் இதன் பிரதிபலிப்பை காணலாம்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்