Advertisment

இன்ஸ்டாகிராமின் புதிய த்ரெட்ஸ் ஆப் என்ன? ட்விட்டரில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது?

மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Instagram’s new Threads app

Instagram’s new Threads app

ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள த்ரெட்ஸ் செயலி உலகம் முழுவதும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பயனர்களைப் பெற்று அமோக வரவேற்பு பெற்றது.

Advertisment

இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் ஏற்கனவே 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்ற நிலையில், குறைந்த நேரத்தில் அதிக பயனர்களைப் பெற்ற சாதனையும் பெற்றுள்ளது. இது 5 நாட்களில் 1 மில்லியன் பயனர்களை பெற்ற ChatGPT ஐ விஞ்சியது. இது தளத்தின் சீக்ரெட் வசதிகள் என்ன? பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் என்றால் என்ன?

த்ரெட்ஸ் என்பது இன்ஸ்டாகிராமின் ஸ்பின்-ஆஃப் பயன்பாடாகும். இது டெக்ஸ்ட் அடிப்படையிலான செயலி ஆகும். விஸ்சுவல் கன்டெண்ட இல்லாமல் டெக்ஸ்ட் அடிப்படையில் இயங்குகிறது. இன்ஸ்டாகிராம் ஐடி கொண்டு த்ரெட்ஸ் செயலியில் லாக்கின் செய்யலாம். இன்ஸ்டாகிராம் வடிவமைப்பில் த்ரெட்ஸ் ஆப் உள்ளது. ரீப்ளை, ரீ-சேரிங் ஆகியவை ட்விட்டரில் உள்ளது போல் உள்ளது. இதில் ஒரு போஸ்ட்டில் போட்டோ, 5 நிமிட வீடியோவுடன் 500 வார்த்தைகள் பயன்படுத்தலாம். ட்விட்டரில் 280 வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

publive-image

த்ரெட்ஸ் போஸ்ட் எடிட் செய்ய முடியாது. அதே போல் ட்விட்டரில் உள்ள ஹேஷ்டேக், டிரெண்டிங் செக்ஷன் இதில் இல்லை.

த்ரெட்ஸ் ஷைன்- அப் செய்வது எப்படி?

த்ரெட்ஸ் இவ்வளவு பெரிய வரவேற்பு பெற அதன் ஷைன்- அப் (sign up)பிராசஸ் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் இன்ஸ்டாகிராம் பயனர்கள் மிக எளிதாக த்ரெட்ஸ் பயன்படுத்தலாம். உங்கள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் த்ரெட்ஸ் ஆப் டவுன்லோடு செய்து ‘Log in with Instagram’ எனக் கொடுத்து ‘Import from Instagram’ பட்டனை கிளிக் செய்தால்போதும். உங்கள் இன்ஸ்டாகிராம் பயனர்கள், விவரம் என அனைத்தும் இதில் மாற்றப்படும்.

ட்விட்டர்- த்ரெட்ஸ்

இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் குறைந்த அம்சங்கள் மட்டுமே கொண்ட செயலி ஆகும். எடுத்துக்காட்டாக, ட்வீட் மற்றும் பிரபலமான தலைப்புகளை ஆராய உங்களை அனுமதிக்கும் அதிநவீன தேடல் செயல்பாட்டைக் கொண்ட ட்விட்டரைப் போலல்லாமல், த்ரெட்கள் உங்களைப் பின்தொடரும் நபர்களைத் தேட மட்டுமே அனுமதிக்கும். இன்ஸ்டாகிராம் போல் யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் செய்ய முடியாது. எனினும் இது ஆரம்ப நிலையில் மட்டுமே உள்ளது. காலப்போக்கில் உருவாக்கலாம்.

ஆனால் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது இன்ஸ்டாகிராமின் மிகப்பெரிய பயனர் தளத்தால் ஆதரிக்கப்படுகிறது.

publive-image

இருப்பினும், மஸ்க் ட்விட்டரை வாங்கியப் பின் வந்த முதல் ட்விட்டர் மாற்று த்ரெட்ஸ் இல்லை. ப்ளூஸ்கி, ஜாக் டோர்சி ஆதரவு ட்விட்டர் குளோன்,மாஸ்டோடன், ஆண்டி-ட்விட்டர், சப்ஸ்டாக் நோட்ஸ் உள்ளிட்ட பல செயலிகள் ட்விட்டருக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும் இவைகள் ஆரம்ப நிலையில் இருந்து பயனர்களைப் பெற வேண்டி இருந்தது. புதிய சமூக ஊடக தளங்கள் வரும்போது அதனை அணுக, பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும். இது மிக முக்கிய காரணியாகும், ஆனால் மாஸ்டோடன் அவ்வாறு இல்லை. அனைவரும் பயன்படுத்தும் படி இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Meta Instagram Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment