Aashish Aryan
What is IRCTCs convenience fee : இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) பயனாளர்களிடமிருந்து பெறப்படும் கன்வெனியன்ஸ் கட்டணத்தில் 50%-ஐ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்து ஒரே நாளில் அந்த உத்தரவை அரசாங்கம் திரும்பப்பெற்றது. இந்த முடிவு வெள்ளிக்கிழமை காலை நிறுவனத்தின் பங்கு விலையில் சரிவுக்கு வழிவகுத்தது மற்றும் அது 29 சதவீதம் வரை கடுமையாக சரிந்தது.
கன்வெனியன்ஸ் கட்டணம் என்றால் என்ன? ஒரு டிக்கெட்டிற்கு எவ்வளவு கன்வெனியன்ஸ் கட்டணத்தை ஐ.ஆர். சி.டி.சி. வசூலிக்கிறது?
இரயில் அல்லது விமானப் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இணைய டிக்கெட் முன்பதிவு தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து ஒரு சேவைக் கட்டணமாக IRCTC-ஆல் கன்வெனியன்ஸ் கட்டணத்தை வசூலிக்கிறது. இருப்பினும், பெரும்பாலான கட்டணங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவில் இருந்து பெறப்படுகிறது.
ஏ.சி. இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய சேவை கட்டணம் அல்லது கன்வெனியன்ஸ் கட்டணமாக ரூ. 20 + வரியை 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி வரை வசூல் செய்தது ஐ.ஆர்.சி.டி.சி.. ஏ.சி. பெட்டி என்றால் அந்த கட்டணம் ரூ. 40ஆக வசூலிக்கப்பட்டது. ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் பொருட்டு மூன்று ஆண்டுகள் கழித்து இந்த கட்டணங்களை ரயில்வே அமைச்சகம் திரும்பப் பெற்றது.
2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சி. மீண்டும் கன்வெனியஸ் கட்டணங்களை டிக்கெட் புக் செய்யும் போது வசூலித்தது. ஏசி அல்லாத பெட்டிகளில் பயணத்திற்கான டிக்கெட்டிற்கு ரூ. 15 + ஜி.எஸ்.டி. வரியையும், ஏ.சி. கோச் பயணத்திற்கு டிக்கெட்டிற்கு ரூ. 30+ ஜி.எஸ்.டி. கட்டணத்தையும் வசூலித்தது. பீம் செயலி அல்லது யு.பி.ஐ. மூலம் டிக்கெட்டுகள் பதிவு செய்யும் போது ரூ. 10+ஜி.எஸ்.டி. ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்கவும், ரூ. 20+ ஜி.எஸ்.டியையும் வசூலித்தது.
2020-21 காலத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் டிக்கெட் பதிவு செய்யும் எண்ணிக்கை 43% வரை குறைந்தது. இது கன்வெனியன்ஸ் கட்டண வசூலிலும் கணிசமான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. ஆனாலும் ரூ. 299 கோடியை ஐ.ஆர்.சி.டி.சியால் வசூலிக்க முடிந்தது. தொற்றுநோய் இல்லாத ஆண்டான 2019-2020 இல், IRCTC இன் வருவாயில் 27 சதவீதம் இணைய டிக்கெட் முன்பதிவுகளிலிருந்து வந்துள்ளது. அதே சமயம் வட்டி மற்றும் வரிகளுக்கு (EBIT) முந்தைய காலங்களில் 71% வருவாயை பெற்றனர். இ.பி.ஐ.டியில் 17%, 8%, மற்றும் 3% பங்குகளை முறையே கேட்டரிங், பேக்ட் குடிநீர் மற்றும் ட்ராவல் அண்ட் டூரிஸம் கொண்டுள்ளது. அந்த நிதியாண்டில் ஐஆர்சிடிசி வசூலித்த மொத்த வசதிக் கட்டணம் (convenience fee) ரூ.352 கோடி ஆகும்.
கன்வெனியஸ் கட்டண பகிர்வு தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவு ஐ.ஆர்.சி.டி.சி. பங்கின் விலையை எவ்வாறு பாதித்தது?
வியாழக்கிழமை அன்று சந்தை நேரத்திற்கு பிறகு அரசால் நடத்தப்படும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளம் பங்கு சந்தையில், ரயில்வே அமைச்சகம் ஐ.ஆர்.சி.டிசியை கன்வெனியன்ஸ் வருமானத்தின் 50%-த்தை தருமாறு கேட்டுக் கொண்டது என்று தெரிவித்தது. இந்த முடிவு, நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று பரிமாற்றங்களுக்கான அறிவிப்பில் IRCTC கூறியது. IRCTC பங்குகள் வியாழன் அன்று ரூ.913.75 இல் முடிவடைந்தன.
வெள்ளியன்று, சந்தைகள் துவங்கிய ஒன்றரை மணி நேரத்திற்குள், IRCTC விலைகள் 29 சதவீதம் வரை கடுமையாக சரிந்து, நாளின் குறைந்தபட்சமான விலையாக ரூ.650.10ஐ எட்டியது.
இருப்பினும், சந்தைகள் திறக்கப்பட்டு இரண்டு மணி நேரம் கழித்து பங்கு விலைகளில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. தலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை, ஐஆர்சிடிசியின் வசதிக் கட்டணத்தில் இருந்து 50 சதவீத வருவாயைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற முடிவை ரயில்வே அமைச்சகம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. . இந்த முடிவைத் தொடர்ந்து, ஐஆர்சிடிசி பங்கு விலைகள் சற்றுத் தடுமாறுவதற்கு முன், நாளின் அதிகபட்சமான ரூ. 906.60 இல் வர்த்தகம் செய்ய மீண்டு வந்தது. பிற்பகல் 1:05 மணிக்கு, ஐஆர்சிடிசி பங்குகள் ரூ.856.45க்கு வர்த்தகம் செய்யப்பட்டது, இது கடந்த நாளின் முடிவோடு ஒப்பிடும்போது 6.2 சதவீதம் குறைவாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil